Today’s Top News Headlines: டெல்லியில் கூடும் நிதி ஆயோக் கூட்டம்.. இன்றைய முக்கியச் செய்திகள்.. - Tamil News | todays top news headlines 27 july 2024 india know important happenings around you | TV9 Tamil

Today’s Top News Headlines: டெல்லியில் கூடும் நிதி ஆயோக் கூட்டம்.. இன்றைய முக்கியச் செய்திகள்..

இன்றைய முக்கியச் செய்திகள்: உங்களை சுற்றி உலகம் முழுவதும் நடக்கும் நிகழ்வுகளை, சம்பவங்களை செய்திகளாக வழங்கும் வகையில் இந்த தொகுப்பு தயாரிக்கபட்டுள்ளது. உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை, வணிக செய்திகள் முதல் விளையாட்டு செய்திகள் வரை இந்த தொகுப்பில் வழங்குகிறோம். ஒவ்வொரு மாவட்டத்தில் நடக்கும் சுவாரஷ்ய சம்பவங்கள், அரசியல் நிகழ்வுகள், குற்றச் செய்திகள் ஆகியவற்றை சுருக்கமான முறையில் இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளுங்கள்.

Todays Top News Headlines: டெல்லியில் கூடும் நிதி ஆயோக் கூட்டம்.. இன்றைய முக்கியச் செய்திகள்..

இன்றைய முக்கியச் செய்திகள்

Updated On: 

27 Jul 2024 07:21 AM

தமிழ்நாடு:

  • கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 1,20,981 கன அடி உபரி நீர் திறப்பு. காவிரி ஆற்றில் கரைபுரளும் வெள்ளம்
  • நீர் வரத்தால் 100 அடி எட்டும் மேட்டூர் அணை, ஒலிப்பெருக்கி மூலம் தாழ்வான பகுதிகளில் இருக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
  • தொடர்ந்து படத்தில் நடிப்பேன், முடிந்தால் தடுத்துப்பாருங்கள் – தயாரிப்பாளர் சங்கத்திற்கு நடிகர் விஷால் சவால்
  • அமைச்சர் பொன்முடியின் ரூ.14 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. செம்மன் குவாரியில் அளவுக்கு அதிகமாக எடுத்த வழக்கில் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
  • ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த பிரதீப் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 18 பேர் கைதாகி உள்ளனர்.
  • பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி கோவை 4வது குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  • மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Also Read: வெறும் 10 நிமிடத்தில் தித்திப்பான பாதாம் பிசின் பாயசம் ரெடி..! குழந்தைகளுக்கு செஞ்சிக்கொடுங்க..

இந்தியா:

  • பாரிஸில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துக்கொள்ளும் இந்திய வீரர் வீராங்கணைகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து  தெரிவித்துள்ளார்.
  • எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்புக்கு மத்தியில் இன்று டெல்லியில் கூடுகிறது நிதி ஆயோக் கூட்டம். மத்திய அரசின் பாகுபாடை கண்டித்து கூட்டத்தில் குரல் கொடுப்பேன் என மமதா பேனர்ஜி அறிவிப்பு
  • கர்நாடகாவில் மகளிர் விடுதிக்குள் புகுந்து இளம்பெண்ணை சரமாரியாக கத்தியால் குத்திய இளைஞர். காதலிக்கு அடைக்கலம் கொடுத்ததால் இளைஞரின் வெறிச்செயல்.
  • மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரம் தொடர்பாக கேரளா மற்றும் மேற்கு வங்கம் மாநில ஆளுநர்களுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.
  • இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் 628 புலிகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இயற்கை காரணங்கள், வேட்டையாடுதல் உள்ளிட்ட காரணங்களுக்காகவும் உயிரிழந்துள்ளதாக அரசு தகவல்கள் வெளியாகி உள்ளன.

உலகம்:

  • அமெரிக்க அதிபர் தேர்தலில் அதிபர் வேட்பாளராக போட்டியிடும் கமலா ஹாரிஸிற்கு ஒபாமா ஆதரவு அளித்துள்ளார்.
  • பிலிப்பைன்சில் பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 33 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • விண்கலத்தில் தொழில்நுட்ப பிரச்னை இருப்பதால் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதற்கு மேலும் தாமதம் ஆகலாம் என நாசா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
  • இலங்கையில் செப்டம்பர் 21ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்காக ஆகஸ்ட் 15ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் ரனில் விக்கிரவசிங்கே போட்டியிடபோவதாக அறிவித்துள்ளார்.

விளையாட்டு:

  • பாரிஸில் கோலகலமாக தொடங்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள். தொடக்க விழா காரணமாக வண்ணமயமாக ஜொலித்த நகரம்
  • ஒலிம்பிக்கில் இன்று துப்பாக்கிச் சூடு, ஹாக்கி, டேபிள் டென்னிஸ் என முக்கிய போட்டிகளில் பங்கேற்கும் இந்தியா. இளவேனில், சந்தீப் சிங் உள்ளிட்ட வீரர் வீராங்கணைகள் கல்ந்துக்கொள்வதால் பெரும் எதிர்ப்பார்ப்பு

Also Read: ஹெல்த்தியான ராகி புட்டு இப்டி செஞ்சு பாருங்க கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க..

உங்கள் பயணங்களை சிறப்பான மாற்ற சில டிப்ஸ்!
கீரை ஃப்ரெஷாக இருக்க சில டிப்ஸ்
காலையில் எழுந்தவுடன் செல்போன் பார்ப்பதால் இவ்வளவு பிரச்னையா?
46 ரன்களுக்கு ஆல் அவுட்.. மோசமான சாதனை படைத்த இந்திய அணி..!