Today’s Top News Headlines: பிரதமர் மோடியை புகழ்ந்த அதிபர் புதின்.. உள்ளூர் முதல் உலகம் வரை இன்றைய முக்கியச் செய்திகள்.. - Tamil News | | TV9 Tamil

Today’s Top News Headlines: பிரதமர் மோடியை புகழ்ந்த அதிபர் புதின்.. உள்ளூர் முதல் உலகம் வரை இன்றைய முக்கியச் செய்திகள்..

இன்றைய முக்கியச் செய்திகள்: உங்களை சுற்றி உலகம் முழுவதும் நடக்கும் நிகழ்வுகளை, சம்பவங்களை செய்திகளாக வழங்கும் வகையில் இந்த தொகுப்பு தயாரிக்கபட்டுள்ளது. உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை, வணிக செய்திகள் முதல் விளையாட்டு செய்திகள் வரை இந்த தொகுப்பில் வழங்குகிறோம். ஒவ்வொரு மாவட்டத்தில் நடக்கும் சுவாரஷ்ய சம்பவங்கள், அரசியல் நிகழ்வுகள், குற்றச் செய்திகள் ஆகியவற்றை சுருக்கமான முறையில் இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளுங்கள்.

Todays Top News Headlines: பிரதமர் மோடியை புகழ்ந்த அதிபர் புதின்.. உள்ளூர் முதல் உலகம் வரை இன்றைய முக்கியச் செய்திகள்..

முக்கியச் செய்திகள்

Updated On: 

09 Jul 2024 07:13 AM

தமிழ்நாடு:

  • விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. கடைசி நாள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்ட அரசியல் கட்சி தலைவர்கள்.
  • மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று முதல் ஜூலை 14ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
  • சென்னையின் புதிய காவல்துறை ஆணையராக ஏடிஜிபி அருண் நியமிக்கப்பட்டுள்ளார். கமிஷ்னராக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் காவல்துறை பயிற்சி பள்ளி டிஜிபியாக இடமாற்றம் செய்யப்பட்டு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
  • தமிழ்நாட்டில் காவல்துறை சுதந்திரமாக செயல்படவில்லை என்றும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
  • கேரளாவில் மூளையை தின்னும் அமீபா நோய் தொற்றுக்கு இதுவரை 3 பேர் உயிரிழந்த நிலையில், தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியா:

  • அரசுமுறை பயணமாக ரஷ்யா சென்ற பிரதமர் மோடி. மோடி மீண்டும் பிரதமரானது பல ஆண்டு உழைப்பு என ரஷ்ய அதிபர் விளாடிமர் புதின் புகழாரம்
  • நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் பயனடைந்தவர்கள், தவறிழைத்தவர்கள் கண்டறியாவிட்டால் நிச்சயம் மறுதேர்வு நடத்த வேண்டும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளார். வினாத்தாள் கசிவு குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐ, என்டிஏவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
  • ஜம்மு காஷ்மீரில் ரோந்து வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல். 5 ராணுவ வீரர்கள் வீரமரணம். மேலும் 5 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி
  • மணிப்பூரில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி சந்தித்துள்ளார். வன்முறை சம்பவங்கள் தொடர்பாகவும், நிவாரண முகாம்களில் உள்ள வசதிகள் குறித்தும் கேட்டறிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
  • அசாமில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்தார் ராகுல் காந்தி. நிவாரண முகாம்களில் தங்கி உள்ளவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

Also Read:  பான் கார்டு உஷார்… அதிகரிக்கும் மோசடிகள்… திருடப்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

உலகம்:

  • வலுக்கும் போர், குழந்தைகள் மருத்துவமனை உட்பட பல்வேறு இடங்களில் ரஷ்யா நடத்திய தாக்குதல். உக்ரைனில் 36 பேர் உயிரி்ழப்பு
  • பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு சேவை செய்ய தனது வாழ்நாளை அர்ப்பணித்துள்ளார் – ரஷ்ய அதிபர் விளாடிமர் புதின் புகழாரம்
  • பிரான்சில் தொங்கு நாடாளுமன்றம் அமையும் சூழல் ஏற்பட்டுள்ளது. இடதுசாரி முன்னணியுடன் கூட்டணி வைத்தால் மட்டுமே தற்போதைய அதிபர் மேக்ரானின் மறுமலர்சி கட்சி மீண்டும் ஆட்சியமைக்க முடியும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.

விளையாட்டு:

  • ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: அரையிறுதியில் இன்று ஸ்பெயின் பிரான்ஸ் பலப்பரீட்சை
  • பாரிஸ் ஒலிம்பிக் தொடக்க விழா: தேசிய கொடியை ஏந்திச் சென்ற பி.வி சிந்து. ஒலிம்பிக் போட்டி வரும் 26 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை நடைபெறும்.
  • விம்பிள்டன் டென்னிஸ் போட்டி: அலெக்ஸ் டி மினார் காலிறுதிக்கு முன்னேற்றம்
  • விம்பிள்டன் டென்னிஸ் போட்டி: காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகிய கலின்ஸ்காயா, காலிறுதிக்கு முன்னேறிய ரைபகினா

Also Read: லட்சியத்தை அடைவதற்கு ஏழ்மையை ஒரு தடையாக கருதக் கூடாது – நடராஜன்

நட்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!
தாமரை விதை எனப்படும் மக்கானாவில் இப்படி ஒரு விஷயம் இருக்கா?
மோட்டோ போன்களுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கும் பிளிப்கார்ட்!