Today’s Top News Headlines: உங்களை சுற்றி நடந்தது என்ன? – இன்றைய முக்கிய செய்திகள்!
இன்றைய முக்கியச் செய்திகள்: ஒரே நாளில் நம்மைச் சுற்றி பல்வேறு விதமான நிகழ்வுகள் நடைபெறுகிறது. இதனை நாம் ஒரே தொகுப்பில் தெரிந்து கொள்ளும் வகையில் இந்த தகவல்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டு அரசியல் முதல் உலக அரசியல் வரை அனைத்தையும் நாம் அறிந்து கொள்ளலாம்.
முக்கியச் செய்திகள்: நேற்று முதல் தற்போது வரை உங்களைச் சுற்றி நடந்த முக்கிய நிகழ்வுகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம். இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பேச்சாளர் மகாவிஷ்ணு மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை நாம் காணலாம்.
தமிழ்நாடு :
- நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வமாக இன்று விஜய் அறிவிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
- மத்திய மற்றும் அதனை ஒட்டியுள்ள வடக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்ததாழ்வு பகுதி, வடமேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய வங்கக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்ததாழ்வு பகுதியாக மாறியுள்ளது.
- பேச்சாளர் மகாவிஷ்ணு மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 20 ஆம் தேதி வரையில் அவரை சிறையில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
- பள்ளிகளில் நிகழ்ச்சிகள் நடுத்துவது குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு.
இதையும் படிங்க : Horoscope Today : செப்டம்பர் 08 2024 ராசிபலன்.. 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ!
இந்தியா :
- முகேஷ் அம்பானியின் இல்லத்தில் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. அந்த விழாவில் முன்னணி பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
- இந்தியா முழுவதும் நேற்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிலைகள் தண்ணீரில் கரைக்கப்பட்டன.
உலகம் :
- சிகாகோவில் BNY மெலன் வங்கி அதிகாரிகளை முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். அப்போது தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை மேற்கொள்ள அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
- ரஷ்யா மற்றும் உக்ரேனுக்கு இடையே நடைபெற்று வரும் மோதலை தடுக்க இந்தியாவால் முடியும் என்று இத்தாலி பிரதமர் கருத்து தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : Today Panchangam September 08 2024: இன்றைய நாளின் நல்ல நேரம், ராகு காலம்.. பஞ்சாங்க விவரம் இதோ!
விளையாட்டு :
- பாராலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம் கிடைத்துள்ளது. ஈரான வீரர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் பதக்கத்தை தட்டிச் சென்றார் இந்திய வீரர்.