5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Toll Plaza Fee: வாகன ஓட்டிகளுக்கு ஷாக்.. தமிழகத்தில் உயருகிறது சுங்கச்சாவடி கட்டணம்.. இவ்வளவா?

தமிழகம் முழுவதும் 25 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் சுங்க கட்டணம் உயருகிறது என்று தேசிய நெடுஞ்சாலை துறை தகவல் தெரிவித்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, உளுந்தூர் பேட்டை, சமயபுரம், மதுரை, வாலாஜா, ஸ்ரீபெரும்புதூர் உள்பட 25 சுங்கச்சாவடிகளில் 5 முதல் 7 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்பட இருக்கிறது.

Toll Plaza Fee: வாகன ஓட்டிகளுக்கு ஷாக்.. தமிழகத்தில் உயருகிறது சுங்கச்சாவடி கட்டணம்.. இவ்வளவா?
சுங்கச்சாவடி
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Published: 26 Aug 2024 07:38 AM

உயருகிறது சுங்கச்சாவடி கட்டணம்: தமிழகம் முழுவதும் 25 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் சுங்க கட்டணம் உயருகிறது என்று தேசிய நெடுஞ்சாலை துறை தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் 1000க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் உள்ளன. தமிழக தேசிய நெடுஙசாலைகளில் 55 சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் இரண்டு சக்கர வாகனங்களை தவிர்த்து மற்ற அனைத்து வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டணம் ஆண்டுக்கு இரண்டு முறை மாற்றி அமைக்கப்படுகிறது. அதில் முதன்மையாக உள்ள சுங்கச்சாவடிகளுக்கு ஏப்ரல் மாதமும், அதன்பிறகு மீதமுள்ள சுங்கச்சாவடிகளுக்கு செப்டம்பர் மாதமும் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பாண்டில் கடந்த ஏப்ரல் மாதம் சுங்கக் கட்டணம் மாற்றி அமைக்கப்பட இருந்தது. ஆனால், லோக்சபா தேர்தல் காரணமாக அது ஒத்திவைக்கப்பட்டது.

Also Read: சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்.. டைமிங் நோட் பண்ணிக்கோங்க பயணிகளே!

தேர்தல் முடிந்த பிறகு கடந்த ஜூன் மாதம் சுங்கக் கட்டணத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டது. அப்போது தமிழகத்தில் 36 சுங்கச் சாவடிகளில் கட்டடணம் நிர்ணயிக்கப்பட்டு, புதிய கட்டணம் அமலுக்கு வந்தது. 5 சதவீதம் வரை கட்டணம் அப்போது உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் தான் தமிழகம் முழுவதும் 25 சுங்கச்சாவடிகளில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கட்டணத்தை உயர்த்த உள்ளது.

கட்டணம் எவ்வளவு?

செப்டம்பர் 1ஆம் தேதி முதல் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்ட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, உளுந்தூர் பேட்டை, சமயபுரம், மதுரை, வாலாஜா, ஸ்ரீபெரும்புதூர் உள்பட 25 சுங்கச்சாவடிகளில் 5 முதல் 7 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்பட இருக்கிறது என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 25 சுங்கச்சாவடிகளில் 5 முதல் 7 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் இந்த சுங்கச்சவாடிகள் வழியாக கடந்த செல்லும் வாகனங்கள் சுமார் 5 முதல் ரூ.150 வரை ஏற்கனவே இருக்கும் கட்டணத்தை விட கூடுதலாக செலுத்த வேண்டி வரும் என்று கூறப்படுகிறது.

 

Latest News