5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Toll Plaza Fee: நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த புதிய சுங்கக் கட்டணம்.. எந்தெந்த டோல்கேட் தெரியுமா?

சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு: நாடு முழுவதும் 18வது மக்களவைத் தேர்தல் நேற்று முடிவடைந்த நிலையில், ஜூன் 3ஆம் தேதி அதிகாலை 12 மணி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்படுகிறது. தமிழ்நாட்டில் முதற்கட்டமாக 5 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. மேலும், சுங்கச்சாவடிகளில் ஒரு முறை பயணம் மேற்கொள்வதற்கான கட்டணமும், ஒரே நாளில் திரும்பி வருவதற்கான கட்டணமும் ரூ.5 முதல் ரூ.20 வரை உயர்த்தப்படுகிறது. மாதாந்திர சுங்கச்சாவடி கட்டணமும் ரூ.100 முதல் ரூ.400 வரை உயர்த்தப்படுகிறது.

Toll Plaza Fee: நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த புதிய சுங்கக் கட்டணம்.. எந்தெந்த டோல்கேட் தெரியுமா?
சுங்கச்சாவடி
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 03 Jun 2024 08:36 AM

சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு: நாடு முழுவதும் 1000க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் உள்ளன. தமிழக தேசிய நெடுஙசாலைகளில் 55 சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் இரண்டு சக்கர வாகனங்களை தவிர்த்து மற்ற அனைத்து வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டணம் ஆண்டுக்கு இரண்டு முறை மாற்றி அமைக்கப்படுகிறது. அதில் முதன்மையாக உள்ள சுங்கச்சாவடிகளுக்கு ஏப்ரல் மாதமும், அதன்பிறகு மீதமுள்ள சுங்கச்சாவடிகளுக்கு செப்டம்பர் மாதமும் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி சுங்கச்சாவடி கட்டணம் மாற்றி அமைக்கப்படவில்லை. மக்களவைத் தேர்தல் காரணமாக சுங்கச்சாவடி கட்டணம் இரண்டு மாதங்களுக்கு நிறுத்தி வைப்பதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்தது. நாடு முழுவதும் 18வது மக்களவைத் தேர்தல் நேற்று முடிவடைந்த நிலையில், ஜூன் 3ஆம் தேதி அதிகாலை 12 மணி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்பட்டது.

Also Read: 12 வயது சிறுவனை கடித்து குதறிய ராட்வைலர் நாய்.. சென்னையில் மீண்டும் பயங்கரம்!

எந்தெந்த டோல்கேட்?

தமிழ்நாட்டில் முதற்கட்டமாக 5 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. அதன்படி, கல்லகம் கருப்பூர் நெடுஞ்சாலையில் உள்ள மணகெதி, திருச்சி கருப்பூர் நெடுஞ்சாலையில் உள்ள கல்லக்குடி, வேலூர் – விழுப்புரம் நெடுஞ்சாலையில் உள்ள வல்லம், இனம் கரியாந்தல், தென்னமாதேவி ஆகிய 5 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது. மேலும், சுங்கச்சாவடிகளில் ஒரு முறை பயணம் மேற்கொள்வதற்கான கட்டணமும், ஒரே நாளில் திரும்பி வருவதற்கான கட்டணமும் ரூ.5 முதல் ரூ.20 வரை உயர்த்தப்பட்டது. மாதாந்திர சுங்கச்சாவடி கட்டணமும் ரூ.100 முதல் ரூ.400 வரை உயர்த்தப்பட்டது.

Also Read: ”என் வாழ்நாளில் மறக்க மாட்டேன்” 3 நாள் தியானம் குறித்து மோடி உருக்கம்!

Latest News