Toll Plaza Fee: அச்சச்சோ.. சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு.. நள்ளிரவு முதல் அமல்!

தமிழகம் முழுவதும் 25 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் சுங்க கட்டணம் உயருகிறது என்று தேசிய நெடுஞ்சாலை துறை தகவல் தெரிவித்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, உளுந்தூர் பேட்டை, சமயபுரம், மதுரை, வாலாஜா, ஸ்ரீபெரும்புதூர் உள்பட 25 சுங்கச்சாவடிகளில் 5 முதல் 7 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்பட இருக்கிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

Toll Plaza Fee: அச்சச்சோ.. சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு.. நள்ளிரவு முதல் அமல்!

சுங்கச்சாவடி

Published: 

31 Aug 2024 16:56 PM

சுங்கச்சாவடி கட்டணம்:  தமிழகம் முழுவதும் 25 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் சுங்க கட்டணம் உயருகிறது என்று தேசிய நெடுஞ்சாலை துறை தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் 1000க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் உள்ளன. தமிழக தேசிய நெடுஙசாலைகளில் 55 சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் இரண்டு சக்கர வாகனங்களை தவிர்த்து மற்ற அனைத்து வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டணம் ஆண்டுக்கு இரண்டு முறை மாற்றி அமைக்கப்படுகிறது. அதில் முதன்மையாக உள்ள சுங்கச்சாவடிகளுக்கு ஏப்ரல் மாதமும், அதன்பிறகு மீதமுள்ள சுங்கச்சாவடிகளுக்கு செப்டம்பர் மாதமும் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பாண்டில் கடந்த ஏப்ரல் மாதம் சுங்கக் கட்டணம் மாற்றி அமைக்கப்பட இருந்தது. ஆனால், லோக்சபா தேர்தல் காரணமாக அது ஒத்திவைக்கப்பட்டது.

தேர்தல் முடிந்த பிறகு கடந்த ஜூன் மாதம் சுங்கக் கட்டணத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டது. அப்போது தமிழகத்தில் 36 சுங்கச் சாவடிகளில் கட்டடணம் நிர்ணயிக்கப்பட்டு, புதிய கட்டணம் அமலுக்கு வந்தது. 5 சதவீதம் வரை கட்டணம் அப்போது உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் தான் இன்று நள்ளிரவு முதல் 25 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயருகிறது.

Also Read: இன்று நள்ளிரவு கரையை கடக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. தமிழகத்திற்கு மழை இருக்குமா?

கட்டணம் எவ்வளவு?

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, உளுந்தூர் பேட்டை, சமயபுரம், மதுரை, வாலாஜா, ஸ்ரீபெரும்புதூர் உள்பட 25 சுங்கச்சாவடிகளில் 5 முதல் 7 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்பட இருக்கிறது என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 25 சுங்கச்சாவடிகளில் 5 முதல் 7 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Also Read: ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்துவதில் சிக்கல்.. உயர் நீதிமன்றத்தில் முறையீடு..

அதாவது, ஒரு கிலோ மீட்டர் கார்களுக்கு தற்போதுள்ள 1.433 ரூபாயில் இருந்து 1.466 ரூபாயாக உயர்த்தப் பட உள்ளது. ஒரு வாகனத்திற்கு 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை அதிகரிக்கிறது. மற்ற வகை வாகனங்களுக்கு ஒரு வாகனத்தில் 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை அதிகரிக்கிறது. மாதாந்திர பாஸ்களும் 30 ரூபாய் முதல 50 ரூபாய் வரை உயர உள்ளது. இதன் மூலம் இந்த சுங்கச்சவாடிகள் வழியாக கடந்த செல்லும் வாகனங்கள் சுமார் 5 முதல் ரூ.10 வரை ஏற்கனவே இருக்கும் கட்டணத்தை விட கூடுதலாக செலுத்த வேண்டி வரும் என்று கூறப்படுகிறது.

 

தோல்வியில் இருந்து குழந்தைகள் கற்றுக்கொள்ளும் பாடம்!
பனிக்காலத்தில் நாம் சுற்றுலா செல்ல வேண்டிய இடங்கள்!
காலை அல்லது இரவு? முட்டை எப்போது சாப்பிடலாம்?
தினமும் ஆரஞ்சு பழம் சாப்பிடலாமா?