School Leave: ரெட் அலர்ட்.. சென்னை உட்பட 10 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!
பள்ளிகளுக்கு விடுமுறை: அதி கனமழை எச்சரிக்கை எதிரொலியால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் நாளை மற்றும் நாளை மறுநாள் வரை அதி கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதி கனமழை எச்சரிக்கை எதிரொலியால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (அக்டோபர் 16) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சேலம், ராணிப்பேட்டை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். அதில்,சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களிலுள்ள அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
எனினும், அத்தியாவசிய சேவை துறைகளான காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, உள்ளாட்சி நிர்வாகத் துறைகள், பால் வளத்துறை, குடிநீர் வழங்கல் துறை, மருத்துவமனைகள், மருந்தகங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள், மின்சாரத் துறை, காய்கறிகள் மற்றும் இதர அத்தியாவசிப் பொருட்களுக்கான போக்குவரத்து, மாநகர போக்குவரத்து, சென்னை மெட்ரோ ரயில், MRTS, இரயில்வே, விமான நிலையம், விமான போக்குவரத்து ஆகியவை இயங்கும் என்று தெரிவித்துள்ளார்.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
மேலும், பெட்ரோல் பங்குகள், ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் மற்றும் பேரிடர் மீட்பு நிவாரண பணிகள் மேற்கொள்ளும் துறைகள் ஆகியவை வழக்கம் போல் இயங்கும். பிற கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் வழக்கம் போல் செயல்படும்.
நாளை (16.10.2024) மிக அதிகனமழை எதிர்பார்க்கப்படுவதை முன்னிட்டு, சென்னையில் உள்ள தனியார் அலுவலகங்கள் மிகக் குறைந்தபட்ச பணியாளர்களைக் கொண்டோ அல்லது தங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்தே பணியாற்றும்படியோ அறிவுரை வழங்க கேட்டுக் கொள்ளப்படுகிறது என்றார்.
Also Read: தொடங்கியது வடகிழக்கு பருவமழை… சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. தமிழகம், புதுச்சேரி, கடலோர ஆந்திரா, தெற்கு உள் ஆந்திரா, ராயலசீமா, கேரள ஆகிய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக இந்தியா வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
2 நாட்களுக்கு ரெட் அலர்ட்
குறிப்பாக இன்னும் இரண்டு நாட்களுக்கு அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு நாளை, நாளை மறுநாள் அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் நேற்று இரவு முதலே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் சென்னையின் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ராயபுரம், பழைய வண்ணராப்பேட்டை, திருவொற்றியூர், மணலி, மாதவரம் போன்ற இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.
மேலும், இந்த மழை நாளை மற்றும் நாளை மறுநாள் வரை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்து ஆண்டு மிக்ஜாம் புயல் சென்னை புரட்டி எடுத்துவிட்டது. ஆனால், தற்போது எந்த ஒரு புயல் எச்சரிக்கை கொடுக்கவில்லை. இருப்பினும், இந்த 2 நாட்களுக்கு சென்னையில் மழை வெளுத்து வாங்கப்போகும் என்று கூறப்பட்டுள்ளது.
930 நிவாரண மையங்கள்:
இதனால் சென்னை மாநகராட்சி அனைத்துமே தயார் நிலையில வைத்துள்ளது. முன்னெச்சரிக்கையாக தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளன. சென்னையில் ஏற்கனவே மீட்பு குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. ஒவ்வொரு குழுவிலும் தலா 25 வீரர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் தயாராக உள்ளனர்.
கூடுதலாக நெல்லையில் இருந்து பேரிடர் மீட்பு குழு வரவழைக்கப்பட்டுள்ளன. சென்னையில் மாநகராட்சியில் மண்டல வாரியாக மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் ஒருங்கிணைத்து வருகின்றனர்.
சென்னையில் 300 நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளன. சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் 631 மையங்கள் என மொத்தமாக 931 மையங்கள் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.
Also Read: மழை பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு
மேலும், சென்னையில் மட்டும் 100 இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் 89 படங்குகள் தயார் நிலையில் உள்ளன. சென்னயில் நிவாரண பணிகளை மேற்கொள்ள 13,000 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.