5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Today’s Top News Headlines: கடந்த 24 மணி நேரத்தில் நடந்தது என்ன? முக்கியச் செய்திகளின் ரவுண்டப் இதோ!

இன்றைய முக்கியச் செய்திகள்: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக பார்க்கலாம்.

Today’s Top News Headlines: கடந்த 24 மணி நேரத்தில் நடந்தது என்ன? முக்கியச் செய்திகளின் ரவுண்டப் இதோ!
முதல்வர் ஸ்டாலின்
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 20 Jun 2024 08:20 AM

தமிழ்நாடு:

  • தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது. துறை வாரியான செலவினங்களுக்கு ஒப்புதல் பெறவும், மானியக் கோரிக்கைகளை நிறைவேற்றவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
  • கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து 16 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட கள்ளச்சாரயத்தில் மெத்தனால் கலந்து இருப்பதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
  • விஷச்சாரயம் அருந்திய 66 பேருக்கு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 16 பேருக்கும், சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனைகளில் 12 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
  • விஷச்சாரயம் விற்பனை குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சமூகத்தைப் பாழ்படுத்தும் இத்தகைய குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
  • திமுக ஆட்சியில் 3 ஆண்டுகளில் 3.5 கோடி ரூபாய் கடன் வாங்கப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். அதிமுக ஆட்சியில் அதிக கடன்களை வாங்கியதாக கூறியவர்கள் இப்போது என்ன செய்கிறார்கள் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
  • திருச்சி எஸ்.சூர்யா பாஜகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சியில் மாநில தலைமை பற்றி அவதூறாக பேசியதாக கல்யாண ராமன் பாஜகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
  • சென்னை பெருநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை / இரவு வேளையில், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இந்தியா

  • சம்பா சாகுபடிக்கான நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தி மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஒரு குவிண்டால் சாதாரண நெல்லுக்கு 2,300 ரூபாயும், ஏ கிரெட் நெல்லுக்கு 2,350 ரூபாயும் நிர்ணம் செய்யப்பட்டுள்ளது.
  • வேர்கடலைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டாலுக்கு 6,783 ரூபாயை உயர்த்தி மத்திய அரசு ஒபபுதல் அளித்துள்ளது. துவரைப் பருப்பு, பாசிப்பருப்பு, உளுந்து, சூரியகாந்தி விதை, பருத்தி உட்பட மொத்தம் 14 பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையையும் மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
  • தமிழ்நாடு மற்றும் குஜராத்தில் தலா 500 மெகாவாட் திறன் கொண்ட காற்றாலையை நிறுவ மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. திட்டம் வெற்றிக்கரமாக செயல்படுத்தபடும்போது ஆண்டுக்கு ரூ.372 கோடி யூனிட் புதுப்பிக்கதக்க மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • நாடு முழுவதும் நேற்று முன்தினம் நடைபெறவிருந்த யுஜிசி நெட் தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக சைபர் குற்றப்பிரிவில் இருந்து தகவல் வந்ததைத் தொடர்ந்து நெட் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
  • இரண்டு நாட்கள் பயணமாக பிரதமர் மோடி இன்று ஜம்மு காஷ்மீருக்கு பயணம் மேற்கொள்கிறார். சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஸ்ரீநகரின் தால் ஏரிக்கரையில் யோகா நிகழ்ச்சி நடத்தப்படும் நிலையில், அதில் பங்கேற்க இன்று ஜம்மு காஷ்மீர் செல்கிறார்.

உலகம்: 

  • டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் தலைமுடி, தாடியை வெள்ளை நிற டைய் அடித்து முதியவர் வேடத்தில் வந்த 24 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளது. கனடா செல்லும் விமானத்தில் போலி பாஸ்போர்ட் மூலம் பயணிக்க முயற்சித்தபோது இவர் கைதாகி உள்ளார்.
  • அமெரிக்காவின் கெலிபோர்னியாவில் பற்றி ஏரியும் காட்டுத்தீக்கு இடையே விமானங்கள் பறந்தன. இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. கடும் அனல் மற்றும் கரும்புகைக்கு நடுவே விமானங்கள் பறக்கும் ட்ரோன் கேமரா காட்சிகள் வெளியாகி உள்ளன.
  • சவுதியில் நிலவும் கடுமையான வெப்பநிலையால் ஹஜ் யாத்திரை மேற்கொண்ட 550 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் 323 பேர் எகிப்தியர்கள் என்று கூறப்பட்டுள்ளது.

விளையாட்டு:

  • டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் சூப்பர் 8 சுற்றில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றுள்ளது. அமெரிக்க அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது தென் ஆப்பிரிக்கா அணி.
  • யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் போர்ச்சுகல் அணி 2-1 என்ற கோல் கணக்கில் செக் குடியரசு அணியை வீழ்த்தியது. எப் பிரிவில் நேற்று நடந்த இப்போட்டியில் போர்ச்சுகலின் நட்சத்திர வீரரும் உலகிலேயே அதிக கோல் அடித்த வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ அபாரமாக கோல் அடிக்க அந்த அணி 2-1 என முதல் வெற்றியை பதிவு செய்தது. போர்ச்சுகல் வீரர் விடின்ஹா ஆட்ட நாயகனாக தேர்வானார்.

 

Latest News