Today’s Top News Headlines: நாடு முழுவதும் இன்று நடந்தது என்ன? முக்கியச் செய்திகளின் ரவுண்டப் இதோ! - Tamil News | | TV9 Tamil

Today’s Top News Headlines: நாடு முழுவதும் இன்று நடந்தது என்ன? முக்கியச் செய்திகளின் ரவுண்டப் இதோ!

உங்களை சுற்றி உலகம் முழுவதும் நடக்கும் நிகழ்வுகளை, சம்பவங்களை செய்திகளாக வழங்கும் வகையில் இந்த தொகுப்பு தயாரிக்கபட்டுள்ளது. உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை, வணிக செய்திகள் முதல் விளையாட்டு செய்திகள் வரை இந்த தொகுப்பில் வழங்குகிறோம். ஒவ்வொரு மாவட்டத்தில் நடக்கும் சுவாரஷ்ய சம்பவங்கள், அரசியல் நிகழ்வுகள், குற்றச் செய்திகள் ஆகியவற்றை சுருக்கமான முறையில் இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளுங்கள்.

Todays Top News Headlines: நாடு முழுவதும் இன்று நடந்தது என்ன? முக்கியச் செய்திகளின் ரவுண்டப் இதோ!

முக்கியச் செய்திகள்

Published: 

26 Jun 2024 20:57 PM

தமிழ்நாடு:

  • கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தியதால் பாதிக்கப்பட்டு ஏராளமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63ஆக உயர்ந்துள்ளது.
  • விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பெறப்பட்ட 64 வேட்புமனுக்களில் 29 மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், வாபஸ் பெறுவதற்கான இறுதி நாளாக இன்று அறிவிக்கப்பட்ட நிலையில், ஒருவர் கூட வேட்பு மனுவை திரும்ப பெறவில்லை. இதானால், விக்கரவாண்டி இடைத்தேர்தலில் 29 பேர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இன்றும், நாளையும் நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
  • கடந்த சில நாட்களாக அதிமுகவினர் அமளியில் ஈடுபடுவதால் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் இன்று கூட்டத்தொடர் முழுவதும் அதிமுகவினர் பேரவையில் கலந்துக்கொள்ள கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்தியாவில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாகத் தொடங்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

Also Read: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 29 பேர் போட்டி.. வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

இந்தியா:

  • மக்களவை சபாநாயகராக தேர்வு செய்யப்பட்ட ஓம் பிர்லாவுக்கு பிரதர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஓம் பிர்லாவை மோடியும், ராகுல் காந்தியும் அழைத்து சென்று சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர்.
  • சபாநாயகர் இருக்கையில் ஓம் பிர்லா அமர்ந்திருப்பது அவையின் அதிர்ஷ்டன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பணிவோடு பணியாற்றியவர்களே எப்போது வெற்றி பெறுகிறார்கள் என்பதற்கு ஓம் பிர்லாவின் வெற்றி உதாரணம் எனவும் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பேசினார்.
  • எதிர்க்கட்சி தலைவராக தேர்வான ராகுல் காந்தி மக்களவையில் இன்று முதல் உரையாற்றினார். சபாநாயகர் அவரது கடமைகளை செய்ய எதிர்க்கட்சிகள் உதவும் என உறுதியளித்துள்ளார்.
  • ஜூன் 23ஆம் தேதி 1,563 மாணவர்கள் எழுதிய நீட் மறுதேர்வு முடிவுகள் ஜூன் 30அம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த தேர்வில் 813 மாணவர்கள் கலந்து கொண்டதாவும், 750 மாணவர்கள் கலந்து கொள்ளவில்லை எனவும் தேசிய தேர்வு முகமை தெரிவித்திருந்தது.
  • சபாநாயகராக ஓம் பிர்லா பதவியேற்ற முதல் நாளிலேயே எமர்ஜென்சி குறித்த அவரது கருத்தால் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். 1975ல் நெருக்கடி நிலையை இந்திரா காந்தி கொண்டு வந்தார் என ஓம் பிர்லா பேசியதற்கு எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.

உலகம்:

  • உலகம் முழுவதும் மது மற்றும் போதைப் பொருட்களால் ஒவ்வொரு வருடமும் சுமார் 32 லட்சம் மக்கள் இறக்கின்றனர் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
  • நோட்டோ அமைப்பின் பொதுச் செயலாளராக நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டே நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது பொதுச் செயலாளராக இருக்கும் நர்வேயின் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் பதவிக்காலம் ஆகஸ்ட் 31ஆம் தேதி முடிவடையும் நிலையில், ரூட்டே பதவியேற்பார்.
  • அமெரிக்காவின் வாஷிங்டனில் தொடக்கப்பள்ளி வளாகத்தில் 6 அடி உயரத்தில் இருக்கும் 16வது குடியரசுத் தலைவர் ஆபிரகாம் லிங்கனின் மெழுகு சிலை உருகியுள்ளது. அங்கு கடுமையான வெப்பம் நிலை வரும் நிலையில், குடியரசுத் தலைவர் ஆபிரகாம் லிங்கனின் மெழுகு சிலை உருகி சேதம் அடைந்துள்ளது.

விளையாட்டு:

  • யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நெதர்லாந்து அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஆஸ்திரேலியா வென்று சாதனை படைத்துள்ளது. சுமார் 34 ஆண்டுகளுக்கு மேலாக நெதர்லாந்து அணியை வீழ்த்த முடியாமல் ஆஸ்திரேலிய அணி திணறிய நிலையில், இன்று சாதனை படைத்துள்ளது.
  • இங்கிலாந்தில் நடந்து வரும் கவுன்ட்டி சாம்பியன்ஷிப் போட்டி வரலாற்றில் ஒரே ஓவரில் அதிக ரன்களை விட்டு கொடுத்த வீரர் என்ற மோசமான சாதனையை இங்கிலாந்து வேகபந்து வீச்சாளர் ஆலி ராபின்சன் படைத்துள்ளார்.

Also Read: சாதிவாரி கணக்கெடுப்பு.. பிரதமர் மோடிக்கு பறந்த முதல்வர் ஸ்டாலினின் கடிதம்!

நட்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!
தாமரை விதை எனப்படும் மக்கானாவில் இப்படி ஒரு விஷயம் இருக்கா?
மோட்டோ போன்களுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கும் பிளிப்கார்ட்!