Traffic Diversion: சென்னையின் முக்கிய சுரங்கப்பாதையில் போக்குவரத்து மாற்றம்.. எங்கே தெரியுமா? - Tamil News | Traffic diversion from november 6 at chennai Ganeshapuram Railway Subway area | TV9 Tamil

Traffic Diversion: சென்னையின் முக்கிய சுரங்கப்பாதையில் போக்குவரத்து மாற்றம்.. எங்கே தெரியுமா?

Updated On: 

05 Nov 2024 08:37 AM

Chennai: நவம்பர் 6ஆம் தேதி முதல் பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் அப்பகுதியில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது ஒரு வார காலத்திற்கு சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள ஒருவழிப் போக்குவரத்தும், இதனைத் தொடர்ந்து மாற்றம் செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்று பாதைகளும் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

1 / 6சென்னை

சென்னை வியாசர்பாடியில் உள்ள கணேசபுரம் சுரங்கப்பாதையில் பாலம் கட்டும் பணிக்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மழைக்காலத்தில் தண்ணீர் தேங்காமல் இருக்காமல் இருக்க மறுசீரமைப்பு பணிகளும் நடப்பதால் பாதை மூடப்பட்டுள்ளது.

2 / 6

இது தொடர்பாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மேம்பாலம் கட்டும் பணி ஆனது கணேசபுரம் ரயில்வே சுரங்கப்பாதை பகுதியில் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதன் காரணமாக நவம்பர் 6ஆம் தேதி முதல் பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் அப்பகுதியில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

3 / 6

இது ஒரு வார காலத்திற்கு சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள ஒருவழிப் போக்குவரத்தும், இதனைத் தொடர்ந்து மாற்றம் செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்று பாதைகளும் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

4 / 6

அதன்படி ஸ்டீபன்சன் சாலை சந்திப்பு முதல் கணேசபுரம் சுரங்கப்பாதை வரை தற்காலிகமாக மூடப்படுகிறது. மேல்பட்டி பொன்னப்பன் தெருவிலிருந்து புளியந்தோப்பு நோக்கி செல்லும் வாகனங்கள் அனைத்தும் ஸ்டீபன்சன் சாலை வழியாக திருப்பி விடப்படுகிறது.

5 / 6

மேலும் இந்த வாகன ஓட்டிகள் சாலை பெரம்பூர் நெடுஞ்சாலை பெரம்பூர் மேம்பாலம், ஜமாலியா சாலை, குக்ஸ் சாலை சந்திப்பு, ஸ்டீபன்சன் சாலை, செங்கை சிவன் பாலம், டாக்டர் அம்பேத்கர் கல்லூரி சாலை வழியாக புளியந்தோப்பை அடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

6 / 6

மேலும் கணேசபுரம் சுரங்கப்பாதை வழியாக வியாசர்பாடி மற்றும் கொடுங்கையூர் நோக்கி செல்லும் வாகனங்கள் அனைத்தும் புளியந்தோப்பு நெடுஞ்சாலை, காந்தி ரவுண்டானா சென்று பேசின் பாலம், வியாசர்பாடி புதிய பாலம், மார்க்கெட், ,முத்து தெரு, மூர்த்திங்கர் தெரு, வலது எருக்கஞ்சேரி சாலை வழியாக இலக்கை அடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

இரவில் டீ குடிப்பதால் இவ்வளவு பிரச்னையா?
தேங்காய் எண்ணெய் முகத்தில் தடவலாமா?
ஆரோக்கியமாக வாழ தினமும் செய்ய வேண்டிய 7 விஷயங்கள்..!
இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி செய்த டாப் 7 சாதனைகள்..!