பெண்களுக்கு மட்டுமல்ல.. இனி உங்களுக்கும் பேருந்தில் இலவசம்.. அமைச்சர் முக்கிய உத்தரவு!

சுதந்திரப் போராட்ட வீரர்கள், மொழிப்போர் தியாகிகள், தமிழறிஞர்கள், அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் மற்றும் விருதாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு வழங்கப்படும் கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகளில், ஏற்கனவே நடைமுறையில் உள்ளவாறு அனுமதிக்கவும், எந்தவித தொய்வுமின்றி முறையாக இந்த சிறப்பு பயணச் சலுகைகளை வழங்க வேண்டுமென்று ஊழியர்களுக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் உத்தரவிட்டுள்ளார். 

பெண்களுக்கு மட்டுமல்ல.. இனி உங்களுக்கும் பேருந்தில் இலவசம்.. அமைச்சர் முக்கிய உத்தரவு!

பேருந்து

Published: 

10 Oct 2024 18:56 PM

சுதந்திரப் போராட்ட வீரர்கள், மொழிப்போர் தியாகிகள், தமிழறிஞர்கள், அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் மற்றும் விருதாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு வழங்கப்படும் கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகளில், ஏற்கனவே நடைமுறையில் உள்ளவாறு அனுமதிக்கவும், எந்தவித தொய்வுமின்றி முறையாக இந்த சிறப்பு பயணச் சலுகைகளை வழங்க வேண்டுமென்று ஊழியர்களுக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் உத்தரவிட்டுள்ளார்.  தமிழக அரசு எழை, நடுத்தர மக்களுக்கு ஏற்றவாறு பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. குறிப்பாக சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை பலரும் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறது. இதில் முக்கியமானது பேருந்தில் பெண்களுக்கு இலவச பயண திட்டம். இந்த திட்டம் திமுக அரசு பொறுப்பேற்ற 2021ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது பெண்கள் மத்தியில் பெறும் வரவேற்பை பெற்றது.

கட்டணமில்லா பேருந்து பயணம்

இது பெண்களுக்கு மட்டுமில்லாமல், தமிழ் வளர்ச்சி, தமிழ் பண்பாட்டிற்கு தொண்டாற்றிய தமிழறிஞர்கள், எல்லைக் காவலர்களுக்கும் பேருந்தில் இலவச பயணம் மேற்கொள்ளலாம். இது கடந்த 2010ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.

இதை பலரும் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், சமீப காலமாக தமிழ் வளர்ச்சி, தமிழ் பண்பாட்டிற்கு தொண்டாற்றிய தமிழறிஞர்கள் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகளை நடத்துனர்கள் சரியாக பின்பற்றவில்லை என்று புகார் எழுந்துள்ளது.

Also Read: “நொறுங்கிவிட்டேன்” முரசொலி செல்வம் காலமானார்.. முதல்வர் ஸ்டாலின் வேதனை.. அரைக் கம்பத்தில் பறக்கும் திமுக கொடி!

இதற்கு தற்போது போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அரசு பேருந்து ஊழியர்களுக்கு முக்கிய உத்தரவை பிறபித்துள்ளார்.   இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாட்டின் விடுதலைக்காக அரும்பாடுபட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள், மொழிப்போர் தியாகிகள், தமிழ் மொழி, தமிழ் வளர்ச்சி மற்றும் தமிழ் பண்பாட்டிற்கு பெருந்தொண்டாற்றிய தமிழறிஞர்கள், அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் மற்றும் விருதாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில், தமிழ்நாடு முழுவதும் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டு, பேருந்துகளில் பயணம் மேற்கொண்டு வருகிறார்கள்.

அமைச்சர் முக்கிய அறிவிப்பு:

இந்நிலையில், 60 வயதுக்கு மேற்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள், மொழிப்போர் தியாகிகள், தமிழ் மொழி, தமிழ் வளர்ச்சி மற்றும் தமிழ் பண்பாட்டிற்கு பெருந்தொண்டாற்றிய தமிழறிஞர்கள் உள்ளிட்டோர் வயது முதிர்வு காரணமாக, தனியாக பேருந்தில் பயணம் செய்திட இயலாத நிலையில், உடன் பயணிக்கும் உதவியாளருக்கும் பேருந்துகளில் கட்டணமில்லா பயண சலுகைகள் குறித்து 2010, 2020 மற்றும் 2023-ம் ஆண்டுகளில் அரசாணைகள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், 01.06.2024 முதல் சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் கட்டணமில்லா பயண சலுகை இணையதளம் வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது. மேற்குறிப்பிட்டுள்ள பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகளை முறையாக நடத்துநர்கள் பின்பற்றவில்லை எனத் தெரிய வருகிறது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சுதந்திரப் போராட்ட வீரர்கள், மொழிப்போர் தியாகிகள், தமிழ் மொழி, தமிழ் வளர்ச்சி மற்றும் தமிழ் பண்பாட்டிற்கு பெருந்தொண்டாற்றிய தமிழறிஞர்கள் உள்ளிட்டோர்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளார்.

Also Read: அடுத்த 4 நாட்களுக்கு பிச்சு உதறபோகுது மழை.. எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை மையம் அலர்ட்!

இதன் காரணத்தால் இனிவரும் காலங்களில் பயனாளிகள் எவ்வித சிரமமின்றி, பேருந்தில் பயணம் மேற்கொள்ளும் வகையில் அனைத்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்களுக்கும், உயர் அலுவலர்களுக்கும் மற்றும் ஓட்டுநர் / நடத்துநர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில், பயனாளிகள் எவ்வித சிரமமின்றி, பேருந்தில் பயணம் மேற்கொள்ளலாம் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மன அழுத்த பாதிப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி?
குளிர்காலத்தில் நாம் செல்ல முடியாத இந்தியாவின் இடங்கள்!
இஞ்சியை உணவில் சேர்ப்பதால் இவ்வளவு நன்மைகளா?
கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டிய உணவுகள்