5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

NTK Party : நாம் தமிழர் கட்சி ஒரு பிரிவினைவாத கட்சி.. திருச்சி எஸ்.பி பரபரப்பு குற்றச்சாட்டு!

IPS Varun Kumar | சண்டிகர் பகுதியில் ஐந்தாவது தேசிய ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு நாடு முழுவது உள்ள பல்வேறு மாநிலங்களில் பணி செய்து வரும் இளம் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி, இந்த மாநாட்டில் ஏராளமான இளம் ஐபிஎஸ் அதிகாரிகள் பங்கேற்றனர்.

NTK Party : நாம் தமிழர் கட்சி ஒரு பிரிவினைவாத கட்சி.. திருச்சி எஸ்.பி பரபரப்பு குற்றச்சாட்டு!
மேடையில் பேசிய வருண் குமார்
vinalin
Vinalin Sweety | Updated On: 04 Dec 2024 22:39 PM

தமிழகத்தில் மிகவும் பிரபலமாக உள்ள நாம் தமிழர் கட்சி கண்காணிக்கப்பட வேண்டிய ஒரு பிரிவினைவாத இயக்கம் என்று திருச்சி எஸ்.பி வரும் குமார் ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாநாட்டில் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. நாம் தமிழர் கட்சியை பிரிவினை வாத கட்சி என்று கூறியது மட்டுமல்லாமல் அதன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளையும் அவர் முன்வைத்துள்ளார். திருச்சி எஸ்.பி நாம் தமிழர் கட்சி குறித்து குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அந்த வீடியோவில் அவர் என்ன பேசியுள்ளார் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

நாதக மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்த திருச்சி எஸ்.பி

நாம் தமிழர் கட்சி தமிழகத்தில் மக்கள் மத்தியில் சிறப்பு வாய்ந்த கட்சியாக அறியப்படுகிறது. மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பது மட்டுமன்றி, தமிழகத்தின் மூன்றாவது மிகப்பெரிய கட்சியாகவும் உள்ளது. இந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக சீமான் உள்ளார். நாதக தலைவர் சீமான் அவ்வப்போது சில சர்ச்சை கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இதனால் நாம் தமிழர் கட்சியுடன் பல கட்சிகளுக்கு கருத்து வேறுபாடுகள் நிலவி வருகிறது. இந்த நிலையில், நாம் தமிழர் கட்சி குறித்து ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர் சரமாரி குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது கடும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : CM MK Stalin : வானிலை கணிப்புகளை விட அதிக அளவு பெய்த மழை.. புயல் பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் விளக்கம்!

நாதக ஒரு பிரிவினைவாத கட்சி – திருச்சி எஸ்.பி

சண்டிகர் பகுதியில் ஐந்தாவது தேசிய ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் பணி செய்து வரும் இளம் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி, இந்த மாநாட்டில் ஏராளமான இளம் ஐபிஎஸ் அதிகாரிகள் பங்கேற்றனர். அதன்படி, திருச்சி மாவட்ட எஸ்.பி வருண் குமார் மத்திய உள்துறை அமைச்சகத்தின் அழைப்பின் அடிப்படையில் மாநாட்டில் கலந்துக்கொண்டார். இந்த மாநாட்டில் ஐபிஎஸ் வருண் குமாருக்கு நாடு முழுவதும் உள்ள 22 ஐபிஎஸ் அதிகாரிகளை கொண்ட குழுவிற்கு தலைமை ஏற்கவும், சைபர் குற்றங்கள், இணையதள அச்சுறுத்தல்கள் ஆகிய விவரங்களை குறித்து கற்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, சைபர் குற்றங்கள் மற்றும் சைபர் அச்சுறுத்தல்களை எப்படி தடுக்க வேண்டும் என்று கறிபிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

இதையும் படிங்க : ISRO : கடைசி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பிரச்னை.. தடுத்து நிறுத்தப்பட்ட ராக்கெட்.. இஸ்ரோவில் பரபரப்பு சம்பவம்!

மாநாட்டில் எஸ்.பி வரும் குமார் பேசியது என்ன?

மத்திய உள்துறை அமைச்சகத்தின் அழைப்பின் பேரில் மாநாட்டில் கலந்துக்கொண்ட திருச்சி எஸ்.பி வருண் குமார், ஐபிஎஸ் அதிகாரிகள் மத்தியில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், நாம் தமிழர் கட்சியை மிக கடுமையாக விமர்சனம் செய்தும் அதன் மீது பல குற்றச்சாட்டுகளையும் முன்வைத்துள்ளார். அதாவது, நாம் தமிழர் கட்சி கண்காணிக்க வேண்டிய ஒரு பிரிவினை வாத இயக்கம் என்று கூறியுள்ளார். நாம் தமிழர் கட்சியால் தானும், தனது குடும்ப உறுப்பினர்களும் இணையதள குற்றத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், இணையத்தில் குற்ற சம்பவங்களை செய்து வரும் நபர்களை கண்காணிக்க 14சி என்ற ஒரு புதிய அமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் அந்த மாநாட்டில் அவர் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest News