5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Ammonia Gas Leakage: அமோனியா வாயு கசிவு… 30 பேருக்கு மூச்சுதிணறல், மயக்கம்.. தூத்துக்குடியில் பதற்றம்!

தூத்துக்குடியில் தனியார் ஆலையில் இருந்து அமோனியா வாயு கசிந்ததில் அங்கிருக்கும் ஊழியர்களுக்கு மூச்சு திணறல், மயக்கம் ஏற்பட்டிருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் புதூர் பாண்டியாபுரத்தில் தனியார் மீன் பதன ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று இரவு 11 மணியளவில் கேஸ் சிலிண்டர் வெடித்து அமோனியா வாயு கசிந்ததாக தெரிகிறது. இதனால் அங்கிருந்த ஊழியர்களுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Ammonia Gas Leakage: அமோனியா வாயு கசிவு… 30 பேருக்கு மூச்சுதிணறல், மயக்கம்.. தூத்துக்குடியில் பதற்றம்!
அமோனியா வாயு கசிவு
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 20 Jul 2024 09:05 AM

அமோனியா வாயு கசிவு: தூத்துக்குடியில் தனியார் ஆலையில் இருந்து அமோனியா வாயு கசிந்ததில் அங்கிருக்கும் ஊழியர்களுக்கு மூச்சு திணறல், மயக்கம் ஏற்பட்டிருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் புதூர் பாண்டியாபுரத்தில் தனியார் மீன் பதன ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு மீன்களை பதப்படுத்தும் பணிகள் நடந்து கொண்டிருக்கும். இங்கிருந்து வெளிநாடுகளுக்கு மீன்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த ஆலையில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களை சேர்ந்த ஏராளமான பெண்கள், ஆண்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று வழக்கம் போல் பணியில் ஊழியர்கள் பணியாற்றி கொண்டிருந்தனர்.  அப்போது, இரவு 11 மணியளவில் கேஸ் சிலிண்டர் வெடித்து அமோனியா வாயு கசிந்ததாக தெரிகிறது. இதனால் அங்கிருந்த ஊழியர்களுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சுமார் 30க்கும் மேற்பட்டோருக்கு மூச்சுதிணறல், மயக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதனால், பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அமோனியா வாயு கசிந்ததில் 30க்கும் மேற்பட்டோருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Also Read: மிஸ் பண்ணிடாதீங்க.. குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

இதே ஆலையில் கடந்த 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் அமோனியா வாயு கசிந்த சம்பவம் நடந்திருக்கிறது. அப்போது 50க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டிருக்கிறது. இவர்களுக்கு உடனே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாமல் அனைவரும் சிகிச்சைக்காக வீடு திரும்பினர்.

அமோனியா என்பது என்ன?

அமோனியா என்பது உரத் தயாரிப்பிற்கு பயன்படுத்தப்படுகிறது. இது நச்சுத் தன்மை கொண்டது. இதனை சுவாசித்தால் கண் எரிச்சல், மயக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்படும். இந்த வாயு ரத்தத்தில் கலக்கும்போது தான் மக்கள் மயங்கி விழுந்து விழுகின்றனர்.   அதிக அளவில் சுவாதிச்சால் மூச்சுதிணறல் உண்டாகும்.  இதனால், நுரையீரல் கடுமையாக பாதிக்கும்.   ரத்தத்தில் அம்மோனியாவின் அளவு எவ்வளவு இருக்கிறது என்பதை கண்டறிந்து அமோனியாவை அகற்றுவதற்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்.  இல்லையென்றால் உயிரிழப்புகள் ஏற்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: இன்றைய முக்கியச் செய்திகள்.. கடந்த 24 மணி நேரத்தில் நடந்தது என்ன?

Latest News