Crime News : வன்கொடுமை செய்து சிறுவன் கொலை.. பகீர் வாக்குமூலம்.. கோவில்பட்டியில் ஷாக்!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 10 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது, சிறுவன் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக கைதான ஆட்டோ ஓட்டுநர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Crime News : வன்கொடுமை செய்து சிறுவன் கொலை.. பகீர் வாக்குமூலம்.. கோவில்பட்டியில் ஷாக்!

மாதிரிப்படம்

Published: 

15 Dec 2024 08:22 AM

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 10 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது, சிறுவன் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக கைதான ஆட்டோ ஓட்டுநர் வாக்குமூலம் அளித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி பாலசுந்தரி. இந்த தம்பதிக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில், இரு மகன்கள் உள்னர். பாலமுருகன் கூலி வேலை செய்து வரும் நிலையில், பாலசுந்தரியும் அருகில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார்.

கோவில்பட்டி சிறுவன் கொலை வழக்கு

இதனால் பகல் நேரங்களில் இருவரும் வீட்டில் இருக்க மாட்டார்கள். இதற்கிடையே, இவர்களது இளைய மகன் கருப்பசாமி.  அவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வந்தார். சிறுவன் கடந்த 7ஆம் தேதி உடல்நிலை சரியில்லாததால் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார்.

அம்மை போட்டு இருந்ததால் சிறுவன் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் ஓய்வு எடுத்திருந்தார். இந்த நிலையில், கடந்த 9ஆம் தேதி சிறுவனின் பெற்றோர்கள் வேலை சென்றுள்ளனர். இதனால் வீட்டில் சிறுவன் தனியாக இருந்துள்ளார். வேலைக்கு சென்று வீட்டிற்கு வந்தபோது சிறுவன் வீட்டில் இல்லை.

அக்கம் பக்கத்தில் சிறுவனை அவர்கள் தேடியும் கிடைக்கவில்லை. இறுதியாக பக்கத்து வீட்டின் மொட்டை மாடியில் மயங்கிய நிலையில் சிறுவன் கிடந்துள்ளார். அப்போது சிறுவன் கழுத்தில் அணிந்திருந்த தங்க நகைகளும் காணவில்லை. இதனை அறிந்த பெற்றோர்கள் உடனே காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

Also Read : தமிழகத்தை உலுக்கிய அரசியல் கொலைகள்.. 2024-ல் என்ன நடந்தது?

வெளியான திடுக்கிடும் தகவல்கள்

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுவனின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது சீறுவன் உயிரிழந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதற்கிடையில் பிரேத பரிசோதனையில் சிறுவனின் ஆசனவாய் மற்றும் வாய் பகுதிகளில் காயங்கள் இருந்தது தெரியவந்தது.  இதனால் தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.    இந்த நிலையில், சிறுவன் கொலை வழக்கில் ஆட்டோ ஓட்டுநர் கருப்பசாமி என்பவரை போலீசார் கைது செய்தனர். இவரிடம் நடத்திய விசாரணையில் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

Also Read : தமிழக அரசியலில் தவிர்க்க முடியாதவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்.. ஏன் தெரியுமா?

அதாவது, சிறுவனை ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து சென்று வன்கொடுமை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், தன்மீது சந்தேகம் வராமல் இருக்கும் சிறுவனை அவரது குடும்பத்தினருடன் தேடுவது போல் நடத்திருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. கைதான ஆட்டோ ஓட்டுநர் கருப்பசாமியிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எந்த பிரச்சனை உள்ளவர்கள் காபி குடிக்கக்கூடாது..?
அதிகளவில் உப்பு சேர்ப்பதால் ஏற்படும் பிரச்சனைகள்..!
புடவையில் சொக்க வைக்கும் நடிகை மாளவிகா மோகனன்
ஒரு நாளைக்கு எத்தனை பாதாம் பருப்பு சாப்பிட வேண்டும் - உங்களுக்கு தெரியுமா?