TVK Conference: அலை அலையாக கூடும் மக்கள்.. த.வெ.க மாநாட்டிற்கு வந்த 80க்கும் மேற்பட்டோர் மயக்கம்.. - Tamil News | tvk-conference-as-more-cadre-are-coming-more-than-80-people-fainted-and-treatment-given | TV9 Tamil

TVK Conference: அலை அலையாக கூடும் மக்கள்.. த.வெ.க மாநாட்டிற்கு வந்த 80க்கும் மேற்பட்டோர் மயக்கம்..

மாநாட்டிற்கான அனுமதி வழங்கப்பட்ட பின் கடந்த மாதம் முதல் இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக 27 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டிற்கு 50 ஆயிரம் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வருகை தருவார்கள் என எதிர்ப்பர்க்கப்படுகிறது.

TVK Conference: அலை அலையாக கூடும் மக்கள்.. த.வெ.க மாநாட்டிற்கு வந்த 80க்கும் மேற்பட்டோர் மயக்கம்..

தவெக மாநாடு

Updated On: 

27 Oct 2024 12:58 PM

தமிழக வெற்றிக் கழக்த்தின் மாநாடு இன்று மாலை விழுப்புரம் மாவட்டத்தில் விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நேற்று மாலை நிறைவு பெற்றது. இந்நிலையில் மாநாடு ஏற்பாடுகளை நேற்று இரவு கேரவானில் வந்து விஜய் ஆய்வு செய்தார். மேலும் இந்த மாநாட்டிற்காக பல்வேறு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக வி.சாலை பகுதியில், அதாவது த.வெ.க மாநாட்டிற்கு வரும் அனைத்து வாகனங்களுக்கும் சுங்கச் சாவடியில் கட்டணம் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக பிரத்யேகமாக இரண்டு பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு மாலை நடைபெற இருக்கும் நிலையில் காலை முதலே தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.

மாநாடு ஏற்பாடுகள்:

மாநாட்டிற்கான அனுமதி வழங்கப்பட்ட பின் கடந்த மாதம் முதல் இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக 27 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டிற்கு 50 ஆயிரம் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வருகை தருவார்கள் என எதிர்ப்பர்க்கப்படுகிறது. மாமன்னன் ராஜராஜ சோழன், அழகு முத்துக்கோன், வீரபாண்டிய கட்டபொம்மன், சுந்தரலிங்கம், ஒண்டிவீரன், மருது சகோதரர்கள், புலித்தேவன், தீரின் சின்னமலை ஆகியோரின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், மாநாடு மேடைக்கு இடதுபுறம் சட்டமேதை அம்பேத்கர், தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர் ஆகியோருடன் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கட் ஆவுட் தலைமை செயலக வளாகம் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை – திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் இருந்து திருச்சி நோக்கி செல்லும் அரசு பேருந்துகள் திண்டிவனத்தில் இருந்து செஞ்சி வழியாக திருப்பி விடப்படுகின்றன.

சென்னையில் இருந்து திருச்சி செல்லும் கனரக வாகனங்கள், திண்டிவனத்தில் இருந்து வில்லியனூர் வழியாக விழுப்புரம் செல்லலாம். சென்னையில் இருந்து திருச்சி செல்லும் கார்கள், திண்டிவனத்தில் இருந்து மயிலம், பெரும்பாக்கம் வழியாக விழுப்புரம் செல்லலாம்.

மேலும் படிக்க: பொது மக்கள் பிரச்சனைக்காக குரல் கொடுக்கும் தலைவர் விஜய்.. மாநாட்டில் இன்று பேசப்போவது என்ன?

திருச்சியில் இருந்து சென்னை வரும் பேருந்து, கார்கள் செஞ்சி, திண்டுவனம் வழியாக சென்னைக்கு வரலாம். மேலும், திருச்சியில் இருந்து வரும் கனராக வாகனங்கள், வில்லியனூர், திண்டிவனம் வழியாக சென்னை வரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலைமோதும் தொண்டர்கள் கூட்டம்:

தொண்டர்கள் கூட்டம் நேற்று இரவு முதலே வருகை தந்த நிலையில் இன்று அதிகாலை முதல் வளாகத்தில் திரண்டனர். காலை முதலே தொண்டர்கள் வருவதால் வி.சாலை முழுவதுமே ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் சுமார் 2 கி.மீ தூரம் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

80க்கும் மேற்பட்டோர் மயக்கம்:

மாலை 4 மணிக்கு தொடங்கும் மாநாட்டிற்கு காலை முதல் தொண்டர்கள் வெயிலில் திரண்டதால் சுமார் 80 க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்ததாக கூறப்படுகிறது. அத்துடன் அவர்களுக்கு அங்கு இருக்கும் மருத்துவ குழு சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் சென்னையில் இருந்து மாநாட்டிற்கு ரயில் மூலம் சென்ற நிதிஷ் குமார் என்பவர் மாநாடு நடக்கும் இடத்தை பார்த்ததும், ரயிலில் இருந்து குதித்துள்ளார். அப்போது படுகாயம் அடைந்த அவர் அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க: த.வெ.க தொண்டர்களால் ஸ்தம்பிக்கும் வி.சாலை..டாஸ்மாக் கடைகள் திறக்க வேண்டாம் என அறிவுறுத்தல்..

மேலும் தொண்டர்கள் கூட்டம் அதிகமாக உள்ளதால் விக்கிரவாண்டி, விழுப்புரம், முண்டியம்பாக்கம் ஆகிய பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்க வேண்டாம் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டாலும் அதிகப்படியான மக்கள் கூட்டம் இருப்பதால் விக்கிரவாண்டி வி.சாலை ஸ்தம்பித்துள்ளது.

 

பப்பாளி சாப்பிட்டால் என்னாகும்?
தியானம் செய்வதால் இவ்வளவு பயன்களா?
சிம்பிளாக நடந்த நடிகை அஞ்சு குரியன் நிச்சயதார்த்தம்
உடலில் வைட்டமின் பி12 அதிகரிக்க என்ன சாப்பிட வேண்டும்?