5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

TVK Conference: பெரியார், அம்பேத்கர், காமராஜர் வழியில் விஜய்.. அனல் பறக்கும் மாநாட்டு ஏற்பாடுகள்!

Tamilaga Vettri Kazhagam: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு வரும் அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி சாலையில் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் இரவு பகலாக முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், மாநாடு நடைபெறும் இடத்தில் வைக்கப்பட்டுள்ள கட் அவுட் புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.

TVK Conference: பெரியார், அம்பேத்கர், காமராஜர் வழியில் விஜய்.. அனல் பறக்கும் மாநாட்டு ஏற்பாடுகள்!
மாநாட்டு திடலில் வைக்கப்பட்டுள்ள கட் அவுட்டுகள்
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Updated On: 23 Oct 2024 22:17 PM

தமிழக வெற்றிக் கழகம்: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு வரும் அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி சாலையில் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் இரவு பகலாக முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், மாநாடு நடைபெறும் இடத்தில் வைக்கப்பட்டுள்ள கட் அவுட் புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது. காமராஜர் தந்தை பெரியார் மற்றும் அம்பேத்கர் உடன் விஜய்யின் கட் அவுட்டும் வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விஜய்யின் அரசியல் பாதை இவர்கள் வழியில் தான் இருக்கும் என்பது தெளிவாகியுள்ளதாக அவரது தொண்டர்கள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Also Read: Zomato : தீபாவளியை முன்னிட்டு பிளாட்ஃபார்ம் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ.. எவ்வளவு தெரியுமா?

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்று கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கினார். நீண்ட காலமாக அவர் அரசியலுக்கு வரப்போகிறார் என பல்வேறு செயல்கள் மூலம் மறைமுகமாக வெளிப்படுத்தி வந்த விஜய், இந்த முறை வெளிப்படையாகவே கட்சி தொடங்குவதாகவும் அதற்கு தமிழக வெற்றிக் கழகம் என பெயரிடுவதாகவும் அறிவித்தார். 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல்தான் தன்னுடைய இலக்கு என்ற நோக்கத்தில் ஒவ்வொரு அரசியல் அடியையும் மெதுவாக எடுத்து வைத்து வருகிறார்.

இதனிடையே தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வரும் அக்டோபர் 27ஆம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழ்நாடு முழுவதும் இருந்து தொண்டர்கள் விழுப்புரத்தை நோக்கி படையெடுப்பதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். திரும்பும் திசை எங்கும் போஸ்டர்கள்,  பேனர்கள் என தமிழக வெற்றிக் கழகத்தை எட்டுத்திக்கும் பரப்புவதில் தொண்டர்கள் ஆர்வமுடன் செயல்பட்டு வருகின்றனர். தனது முதல் அரசியல் பேச்சில் விஜய் பேசப்போவது என்ன என்பது அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக எழுந்துள்ளது.

இதனிடையே இந்த மாநாடு தொடர்பாக தொண்டர்களுக்கு விஜய் 2 முறை கடிதம் எழுதியுள்ளார். அதில் மாநாட்டை கண்ணியமாக நடத்தி நாம் யாரென்று மற்ற அரசியல் கட்சியினருக்கு காட்ட வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் அனைவரின் பாதுகாப்பும் மிக முக்கியம் என தெரிவித்துள்ள அவர், கர்ப்பிணிகள், முதியவர்கள், பள்ளி செல்லும் குழந்தைகள் என யாரும் மாநாட்டிற்கு வர வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார். அனைவரின் ஆவலை நான் மிகவும் மதிக்கிறேன். ஆனால் எல்லாவற்றையும் விட உங்கள் நலன் எனக்கு மிக முக்கியம் என தனது  கடிதத்தின் வாயிலாக தெரிவித்துள்ளார்.

கடந்த அக்டோபர் முதல் வாரம் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடைபெறும் இடத்தில் பூமி பூஜை போடப்பட்ட நிலையில் இரண்டாவது வாரம் பெய்த கனமழையால் மாநாடு நடைபெறும் இடம் சேறும் சகதியுமாக மாறியது.  இதனால் மாநாடு நடைபெறுமா என்ற கேள்வி எழுந்த நிலையில் விறுவிறுப்பாக இரவும் பகலாக அனைத்து பணிகளும் நிறைவு பெற்று 100% மாநாட்டுக்கு நாங்கள் தயார் என்பதை தமிழக வெற்றி கழகம் வெளிக்காட்டியுள்ளது.

Also Read: Actor Bala: சொன்னபடி 3வது கல்யாணம் செய்த நடிகர் பாலா.. பொண்ணு யாரு தெரியுமா?

தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டில் கட்சியின் கொள்கை கோட்பாடுகள் குறித்தும், கட்சிக் கொடியில் இருக்கும் யானை மற்றும் வாகை மலர் குறித்தும் தெளிவுபடுத்தப்படும் என கூறப்படுகிறது. மேலும் இந்த மாநாட்டில் தலைவர் விஜய் 2 மணி நேரம் பேச உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. மாலை 6:00 மணி அளவில் விஜய் பேச தொடங்கி விரைவாக தனது பேச்சினை முடித்து அனைவரையும் பாதுகாப்பாக வழியனுப்பி வைக்கும் முடிவில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாடு முடிந்த பிறகு விழுப்புரம் பகுதியில் இருந்து சென்னை செல்லவும், தென்மாவட்டங்கள் போகவும் தொண்டர்கள் வாகனம் செல்ல போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest News