TVK Conference : அக்டோபர் 27-ல் தவெக மாநாடு.. தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்த விஜய்.. அறிக்கையில் கூறியிருப்பது என்ன?

Vijay | தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருந்து தற்போது அரசியல் தலைவராக அவதாரம் எடுத்திருக்கிறார் விஜய். கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை குறித்து வைத்து தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியைத் தொடங்கி இருக்கிறார்.

TVK Conference : அக்டோபர் 27-ல் தவெக மாநாடு.. தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்த விஜய்.. அறிக்கையில் கூறியிருப்பது என்ன?

விஜய் அறிக்கை

Updated On: 

20 Sep 2024 10:57 AM

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வரும் அக்டோபர் 27 ஆம் தேதி மாலை நடைபெற உள்ளதாக விஜய் அறிவித்துள்ளார். விக்கிரவாண்டியில் நடைபெற உள்ள மாநாட்டிற்கு தொண்டர்களுக்கு தலைவர் விஜய் அழைப்பு விடுத்துள்ளார். ஏற்கனவே செப்டம்பர் 23 ஆம் தேதி தவெகவின் முதல் மாநாடு நடைபெறும் என தகவல் வெளியான நிலையில், வரும் அக்டோபர் 27 ஆம் தேதி நடைபெற உள்ளதாகவிஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த நிலையில் அறிக்கை மூலம் விஜய் தனது தொண்டர்களுக்கு என்ன கூறியுள்ளார் என்பதை விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : Armstrong Murder Case : ”ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு”.. ராகுல் காந்திக்கு பகுஜன் சமாஜ் பரபரப்பு கடிதம்!

தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கை

விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகப்படுத்திய நாள் முதல் நம் கழகத் தோழர்களின் எண்ணங்களுக்கு ஏற்ப தமிழ்நாட்டு மக்களின் பேரன்புடனும், பேராதரவுடனும் நமது அரசியல் வெற்றிக்கான காலம் விரிவடைந்து கொண்டே வருகிறது. கழக கொடி ஏற்றிய விழாவின் போது நமது முதல் மாநில மாநாட்டு தேதியை அறிவிப்பதாக கூறியிருந்தோம்.

நமது மக்களின் பெரும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் தமிழக அரசியல் களத்தில் புதிய நம்பிக்கை விதைக்கக்கூடிய நமது கழகத்தின் கொள்கைத் தலைவர்கள், கொள்கைகள் மற்றும் கொள்கை சார்ந்த செயல் திட்டங்களை பிரகடனப்படுத்தும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வருகின்ற அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி மாலை 4 மணி அளவில் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளது என்பதை பெருமகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

நமது வெற்றிக் கொள்கை மாநாடு, நம்மை வழி நடத்தும் கொள்கையாகவும் நாம் அடையப்போகும் இலக்குகளையும் ழுழங்கும் அரசியல் திருவிழாவாகவும், பெருவிழாவாகவும் கொண்டாடப்பட உள்ளது. தமிழக மக்களின் மனங்களை தீர்க்கமாக வெல்லும் நோக்கில் அமையவுள்ள மாநாட்டிற்கான ஆயத்த பணிகள் ஏற்கனவே நடந்து வரும் நிலையில், அதற்கான களப்பணிகளும் தொடங்க உள்ளன.

இந்த மாநாட்டில் இருந்து வலிமையான அரசியல் பெரும்பான்மை அமைப்போம். இந்நிலையில்,  நமது முதல் மாநில மாநாட்டை எல்லா வகையிலும் வெற்றிகரமாக நடத்துவதற்காக தமிழ்நாட்டு மண்ணை சேர்ந்த மகனாக, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் ஆதரவையும், ஆசிளையும் உரிமையுடன் கூறுகின்றேன் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : Happy Birthday Rashid Khan: அகதிகள் முகாமில் கிரிக்கெட்.. 17 வயதில் அறிமுகம்.. போரில் முளைத்த ரஷித் கானின் போராட்ட வாழ்க்கை!

அரசியல் தலைவராக அவதாரம் எடுத்த விஜய்

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருந்து தற்போது அரசியல் தலைவராக அவதாரம் எடுத்திருக்கிறார் விஜய். கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை குறித்து வைத்து தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியைத் தொடங்கி இருக்கிறார். அரசியல் கட்சி தொடங்கிய பிறகு சமூக பிரச்னைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

இதையும் படிங்க : iPhone 16 Series : ஐபோன் 16 சீரீஸ் ஸ்மார்ட்போன்.. இன்று முதல் இந்தியாவில் விற்பனை தொடக்கம்!

இந்த நிலையில், விஜய் தனது கட்சியின் முதல் மாநாட்டை நடத்த அனுமதி கேட்டு த.வெ.க சார்பில் அனுமதி கோரப்பட்டு இருந்தது. காவல்துறை தரப்பில் இருந்து கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் தெவக முறையாக விளக்கம் அளித்ததை தொடர்ந்து தவெகவின் மாநாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதற்கிடையே தவெகவுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரமும் வழங்கியது. இந்த நிலையில் அக்டோபர் 27 ஆம் தேதி தவெகவின் முதல் மாநாடு நடைபெற உள்ளதாக விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை!
குளிர் காலத்தில் சாப்பிட வேண்டிய 6 வகை உணவுகள்!
நீங்கள் பயன்படுத்தும் கோதுமை தரமானதா - சோதிப்பது எப்படி?
உணவில் தக்காளி சேர்ப்பது ஆபத்தானதா? - ஆய்வுகள் கூறுவது என்ன?