5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

TVK Party | அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்வரை காத்திருங்கள்.. விக்கிரவாண்டி மாநாடு குறித்து நடிகர் விஜய் தகவல்!

Vijay Statement | விக்கிரவாண்டியில் மாநாடு நடத்த காவல்துறை அனுமதி வழங்காத பட்சத்தில் மாநாட்டை வருகிற ஜனவரி மாதத்திற்கு மேல் நடத்தவும் விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்தன. இந்த நிலையில், "காவல்துறை கேட்டுள்ள 21 கேள்விகளுக்கு நாங்கள் உரிய பதில் அளிப்போம் என புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

TVK Party | அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்வரை காத்திருங்கள்.. விக்கிரவாண்டி மாநாடு குறித்து நடிகர் விஜய் தகவல்!
நடிகர் விஜய்
vinalin
Vinalin Sweety | Updated On: 08 Sep 2024 15:12 PM

த.வெ.க கட்சி மாநாடுக்கு அனுமதி : நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாடு  வரும் செப்டம்பர் 23ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். விக்கிரவாண்டியில் மாநாடு நடத்த காவல்துறை அனுமதி வழங்காத பட்சத்தில் மாநாட்டை வருகிற ஜனவரி மாதத்திற்கு மேல் நடத்தவும் விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்தன. இந்த நிலையில், “காவல்துறை கேட்டுள்ள 21 கேள்விகளுக்கு நாங்கள் உரிய பதில் அளிப்போம். அதற்கான ஆலோசனையில் கட்சியின் சட்டப்பிரிவு நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர். எனவே, எங்கள் கட்சியின் மாநாடு தள்ளிப்போக வாய்ப்பில்லை. திட்டமிட்டபடி வரும் 23ஆம் தேதி நடைபெறும்” என்று புஸ்ஸி ஆனந்த் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் காவல்துறையின் 21 கேள்விகளுக்கு தவெக உரிய விளக்கம் அளித்த நிலையில், மாநாட்டுக்கு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. அதுமட்டுமன்றி தவெகவுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரமும் வழங்கியுள்ளது. இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் என்ன கூறப்பட்டுள்ளது என்பதை விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : CM MK Stalin Speech : “தனித்தனி தாயின் வயிற்றில் பிறந்த அன்பு உடன்பிறப்புகள் நாம்”.. வட அமெரிக்க தமிழ்ச் சங்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!

தவெகவுக்கு அங்கீகாரம் வழங்கிய இந்திய தேர்தல் ஆணையம்

விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழக வெற்றிக் கழகத்தை அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதற்காக, கடந்த பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்திருந்தோம். அதைச் சட்டப்பூர்வமாக பரிசீலித்து நமது நாட்டின் தேர்தல் ஆணையம் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தை ஒரு அரசியல் கட்சியாக பதிவு செய்து, தேர்தல் அரசியலில் பதிவு செய்யப்பட்ட கட்சியாக பங்குபெற அனுமதி வழங்கியுள்ளது. இதை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

இதையும் படிங்க : Accident : அரசுப் பேருந்து மீது கார் மோதி விபத்து.. 5 பேர் பலியான சோகம்.. ராமேஸ்வரத்தில் அதிர்ச்சி சம்பவம்!

மாநாடு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை காத்திருங்கள் – தவெக தலைவர் விஜய்

திசைகளை வெல்லப் போவதற்காக முன்னறிவிப்பாக, இப்போது முதற்கதவு நமக்காகத் திறந்திருக்கிறது. இந்த சூழலில், நமது கழகத்தின் கொள்கையைப் பிரகடன முதல் மாநாட்டிற்கான ஆயத்த பணிகள் தொடங்கியுள்ள நிலையில், அது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருங்கள் என்று தெரிவித்துள்ளார். மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி வழங்கியும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை காத்திருங்கள் என்று விஜய் குறிப்பிட்டுள்ள நிலையில் மாநாட்டு தேதி மாற்றப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் கூறுவது குறிப்பிடத்தக்கது.

Latest News