5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

TVK Vijay: தேதி குறித்த விஜய்.. போலீஸிடம் அனுமதி கேட்ட புஸ்ஸி ஆனந்த்.. களைகட்டும் த.வெ.க மாநாடு!

த.வெ.க மாநாடு: அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழக மாநாடு நடத்தப்படும் என விஜய் அதிகாரப்பூர்வ அறிவித்திருந்தார்.  இந்ந நிலையில், அக்டோபர் 27ஆம் தேதி விக்கிவாண்டியில் மாநாடு நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று புஸ்ஸி ஆனந்த் விழுப்புரம் எஸ்பியிடம் மனு அளித்துள்ளார். ஏற்கனவே, செப்டம்பர் 23ஆம் தேதி மாநாடு நடத்துவதற்காக காவல்துறையிடம் அக்கட்சியினர் அனுமதி பெற்றிருந்தார்.

TVK Vijay: தேதி குறித்த விஜய்.. போலீஸிடம் அனுமதி கேட்ட புஸ்ஸி ஆனந்த்.. களைகட்டும் த.வெ.க மாநாடு!
த.வெ.க விஜய்
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 25 Oct 2024 11:01 AM

விழுப்புரம் விக்கிரவாண்டி மாநாடு தொடர்பாக காவல்துறை எழுப்பிய கேள்விகளுக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. காவல்துறை விதித்த 32 நிபந்தனைகளுக்கான பதில் கடிதத்தை தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலளார் ஆன்ந்த் விழுப்புரம் காவல் கண்காணிப்பாளரிடம் வழங்கினார். மேலும், மாநாட்டுக்கு அனுமதி கிடைத்த நிலையில், தேதி மாற்றம் குறித்த கடிதத்தையும் த.வெ.க வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, செப்டம்பர் 23ஆம் தேதி மாநாடு நடத்துவதற்காக காவல்துறையிடம் அக்கட்சியினர் அனுமதி பெற்றிருந்த நிலையில், தற்போது மாநாடு நடைபெறும் தேதி மாற்றப்பட்டுள்ளதால் அந்த தகவலை மீண்டும் கடிதம் மூலம் விழுப்புரம் எஸ்பியிடம் கொடுத்துள்ளனர்.

த.வெ.க மாநாடு:

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருந்து தற்போது அரசியல் தலைவராக அவதாரம் எடுத்திருக்கிறார் விஜய். கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை குறித்து வைத்து தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியைத் தொடங்கி இருக்கிறார். அரசியல் கட்சி தொடங்கிய பிறகு சமூக பிரச்னைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

மேலும், 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு தனது ஒவ்வொரு நகர்வையும் எடுத்து வருகிறார். அந்த வகையில் கடந்த மாதம் விஜய் கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தினார். இந்த கொடி மிகப்பெரிய அளவில் விமர்சனங்களை பெற்றது. சமீபத்தில் கூட, அண்ணா பிறந்தநாளுக்கு வாழ்த்து, பெரியார் பிறந்தநாளுக்கு அவரது சிலைக்கு மரியாதை செலுத்தியது திராவிட சித்தாந்தத்தை கையில் எடுப்பதை உறுதிப்படுத்தி உள்ளார்.

இதன் மூலம், விஜய் என்ன மாதிரியான அரசியலை நோக்கி பயணிக்கப்போகிறார் என்பதை தெளிவுப்படுத்தியுள்ளார். இதற்கிடையில்,  தமிழக வெற்றிக் கழகத்தில் முதல் அரசியல் மாநாட்டை நடத்தி திட்டமிட்டிருந்த விஜய், இதற்கான பணியிகளை கட்சி பொதுச் செயலாளர் பூஸ்ஸி ஆனந்திடம் ஒப்படைத்தார். மாநாடு நடத்துவதற்கு பல்வேறு இடங்களை ஆய்வு செய்ததில் கடைசியாக விக்கிரவாண்டி தேர்வு செய்யப்பட்டது.

Also Read: ”பிரதமர் பதவியே நிரந்தரமல்ல” மோடியை சீண்டுகிறாரா கமல்? பொதுக்குழு கூட்டத்தில் பரபர!

சென்னை, திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சாலை என்ற இடத்தில் 85 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலம் தேர்வு செய்யப்பட்டு, கடந்த செப்டம்பர் 23ஆம் தேதி காவல்துறையிடம் அனுமதி கோரி மனுவும் கொடுக்கப்பட்டிருந்தது. இவர்களின் மனுவிற்கு காவல்துறையினர் த.வெ.க மாநாடு நடத்துவது தொடர்பாக பல்வேறு கேள்விகள் கேட்டு த.வெ.க கட்சிக்கு கடிதம் எழுதினர். இதற்கான பதில் கடிதமும் அளிக்கப்பட்டு மாநாட்டுக்கான ஒப்புதலை காவல்துறை வழங்கியது.

போலீஸிடம் மீண்டும் சென்ற ஆனந்த்:

இதனிடையே வரும் அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழக மாநாடு நடத்தப்படும் என விஜய் அதிகாரப்பூர்வ அறிவித்திருந்தார்.  இந்ந நிலையில், அக்டோபர் 27ஆம் தேதி விக்கிவாண்டியில் மாநாடு நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று புஸ்ஸி ஆனந்த் விழுப்புரம் எஸ்பியிடம் மனு அளித்துள்ளார். ஏற்கனவே, செப்டம்பர் 23ஆம் தேதி மாநாடு நடத்துவதற்காக காவல்துறையிடம் அக்கட்சியினர் அனுமதி பெற்றிருந்த நிலையில், தற்போது மாநாடு நடைபெறும் தேதி மாற்றப்பட்டுள்ளதால் அந்த தகவலை மீண்டும் கடிதம் மூலம் விழுப்புரம் எஸ்பியிடம் கொடுத்து அனுமதி பெற வேண்டும்.

இதையடுத்து, அக்டோபர் 27ஆம் தேதி விக்கிவாண்டியில் மாநாடு நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று புஸ்ஸி ஆனந்த் விழுப்புரம் எஸ்பியிடம் மனு அளித்துள்ளார். செப்டம்பர் 23ஆம் தேதி மாநாடு நடத்த ஏற்கனவே நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், மாநாட்டுக்கான ஏற்பாடுகளை செய்ய போதிய கால அவகாசம் இல்லை என்பதால் அக்டோபர் 27ஆம் தேதி மாநாட்டை நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Also Read: சென்னையில் மின்சார ரயில்களை நாளை ரத்து.. எந்தெந்த ரூட் தெரியுமா?

முன்னதாக மாநாடு குறித்து அறிவிப்பு வெளியிட்ட விஜய், நமது முதல் மாநில மாநாட்டை எல்லா வகையிலும் வெற்றிகரமாக நடத்துவதற்காக தமிழ்நாட்டு மண்ணை சேர்ந்த மகனாக, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் ஆதரவையும், ஆசிளையும் உரிமையுடன் கூறுகின்றேன். இந்த மாநாட்டில் இருந்து வலிமையான அரசியல் பெரும்பான்மை அமைப்போம் என்றும் நமது வெற்றிக் கொள்கை மாநாடு, நம்மை வழி நடத்தும் கொள்கையாகவும் நாம் அடையப்போகும் இலக்குகளையும் ழுழங்கும் அரசியல் திருவிழாவாகவும், பெருவிழாவாகவும் கொண்டாடப்பட உள்ளது என்றும் தெரிவித்திருந்தார்.

 

Latest News