TVK Vijay: த.வெ.க மாநாட்டிற்கு வந்த 6 பேர் உயிரிழப்பு.. இரங்கல் தெரிவித்த கட்சி தலைவர் விஜய்.. - Tamil News | tvk leader vijay has conveyed his condolence to the party cadres who lost their lives | TV9 Tamil

TVK Vijay: த.வெ.க மாநாட்டிற்கு வந்த 6 பேர் உயிரிழப்பு.. இரங்கல் தெரிவித்த கட்சி தலைவர் விஜய்..

ஆகஸ்ட் 22 ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் கொடி அறிமுகப்படுத்தினார். கட்சி கொடியில் சிவப்பு மஞ்சள் வண்ணத்தில் இரண்டு யானைகளுக்கு நடுவே வாகை பூ இடம்பெற்றிருந்தது. கட்சி கொடியில் யானை இருப்பது தொடர்பாக பகுஜன் சமாஜ் தரப்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் அதனை தேர்தல் ஆணையம் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. பின்னர் கட்சியின் முதல் மாநாடு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

TVK Vijay: த.வெ.க மாநாட்டிற்கு வந்த 6 பேர் உயிரிழப்பு.. இரங்கல் தெரிவித்த கட்சி தலைவர் விஜய்..

கோப்பு புகைப்படம்

Published: 

28 Oct 2024 21:14 PM

நேற்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இருக்கும் வி சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் முதல் மாநாடு நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான மக்கள் வருகை தந்தனர். இதில் மாநாட்டிற்கு சென்ற 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலும், சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். பின்னர் படிப்படியாக கட்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

கட்சி கொடி முதல் மாநாடு வரை:

இதற்கிடையில் ஆகஸ்ட் 22 ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் கொடி அறிமுகப்படுத்தினார். கட்சி கொடியில் சிவப்பு மஞ்சள் வண்ணத்தில் இரண்டு யானைகளுக்கு நடுவே வாகை பூ இடம்பெற்றிருந்தது. கட்சி கொடியில் யானை இருப்பது தொடர்பாக பகுஜன் சமாஜ் தரப்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் அதனை தேர்தல் ஆணையம் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. பின்னர் கட்சியின் முதல் மாநாடு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. முதலில் இந்த மாநாடு திருச்சி அல்லது மதுரையில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் அனுமதி கிடைக்காத நிலையில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த மாநாட்டிற்கு பல்வேறு கிடுக்குப்புடி போடப்பட்டு அனுமதி வழங்கப்பட்டது. அந்த வகையில் நேற்றைய தினம் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடத்தப்பட்டது. இதற்காக பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இந்த மாநாட்டில் கட்சி தலைவர் விஜய் கட்சி கொள்கை மற்றும் ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் குறித்து எடுத்துரைத்தார். மேலும் கொடியில் இடம்பெற்றிருக்கும் யானை மற்றும் வாகை மலருக்கான விளக்கமும் அளித்தார்.

உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த தலைவர் விஜய்:


தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடிற்காக லட்சக்கணக்கான மக்கள் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்தனர். இதில் துரதிஷ்டவசமாக விபத்தில் சிக்கி 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதற்கு இரங்கல் தெரிவித்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ” நமது தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக, விக்கிரவாண்டி வி.சாலை நோக்கி வரும் போது, எதிர்பாராமல் நிகழ்ந்த சாலை விபத்துகளில் உயிரிழந்த கழகத் தோழர்கள், மற்றும் மருத்துவ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர் இன்று நம்மிடையே இல்லை என்பது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. ஈடு செய்யவே இயலாத, தாங்கொணா இத்துயரில் இருந்து வெளிவரவே இயலாமல் மனம் தவிக்கிறது.

மேலும் படிக்க: வெப்ப அலையை மாநில பேரிடராக அறிவித்த தமிழக அரசு.. உயிரிழப்பு ஏற்படும் நிலையில் நிவாரணம் அறிவிப்பு..

கழகத்திற்காக இவர்கள் ஆற்றிய பணிகள் கழக வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும். கழகத் தோழர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டுகிறேன். மேலும், சாலை விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கழகத் தோழர்கள் விரைவில் முழுவதும் குணமடைந்து, வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

ஐபோன் 16-க்கு தடை விதித்த இந்தோனேசியா - ஏன் தெரியுமா?
உடலில் உள்ள கொழுப்பை குறைக்க உதவும் பூண்டு!
நடிகை சினேகாவிற்கு பிடித்த நடிகர் இவர்தான்!
மாஸ் ஹீரோதான் இந்தப் பையன்... யார் தெரியுதா?