Vijay Statement : தொடர்ந்து மக்களை கைவிடும் அரசு!.. ஃபெஞ்சல் பாதிப்பு குறித்து விஜய் அறிக்கை!
Fengal Cyclone | புயல் எப்போதும் பேரிடரை உருவாக்கும் ஒரு இயற்கை சீற்றம். அதில் மாற்றுக் கருத்துக்கள் எதுவும் இல்லை என்றாலும், நான் வாக்களித்த ஆட்சியாளர்கள் நம்மை காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கையில் தான் மக்கள் இருப்பார்கள் என்று தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.
தமிழகத்தில் ஃபெஞ்சல் புயல் காரணமாக, சென்னை மற்றும் தமிழகத்தின் வட மாவட்டங்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இன்னும் பல பகுதிகள் இயல்பு நிலைக்கு திரும்பாமல் உள்ளன. இந்த நிலையில் சென்னையில் மழையால் பாதிகப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிய தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், அதனை தொடர்ந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழக அரசு புயல் குறித்து குறைந்த பட்ச முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கூட எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். மேலும், இக்கட்டான சூழல்களில் அரசு தொடர்ந்து மக்களை கைவிட்டு வருவதாகவும் அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார். இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அறிக்கை குறித்து விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிங்க : Flood Relief : 6 மாவட்டங்களுக்கு வெள்ள நிவாரணம்.. முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
ஃபெஞ்சல் புயல் குறித்து விஜய் வெளியிட்டுள்ள அறிக்கை
புயல் எப்போதும் பேரிடரை உருவாக்கும் ஒரு இயற்கை சீற்றம். அதில் மாற்றுக் கருத்துக்கள் எதுவும் இல்லை என்றாலும், நாம் வாக்களித்த ஆட்சியாளர்கள் நம்மை காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கையில் தான் மக்கள் இருப்பார்கள். ஆனால் மக்கள் தேர்ந்தெடுத்த ஆட்சியாளர்களே அவர்களை கைவிடும் போது அது சொல்ல முடியாத வலியை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார். தங்களை ஆட்சியில் அமர வைத்து அழகு பார்த்த மக்களை பாதுகாக்க அரசு முறையான திட்டங்களை தீட்டவில்லை என்றும் மக்களை பாதுகாக்க குறைந்தபட்ச முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கூட எடுக்கப்படவில்லை என்றும் விஜய் தனது அறிக்கையில் குற்றம் சாட்டி உள்ளார். அதுமட்டுமன்றி, இது மக்களை பரிதவிக்க விடும் ஆட்சி என்றும் அவர் சுட்டிக் காட்டி உள்ளார்.
இதையும் படிங்க : Manjolai Tea Estate : மாஞ்சோலை தேயிலை தோட்ட விவகாரம்.. அரசே ஏற்று நடந்தக்கோரிய மனுக்கள் தள்ளுபடி!
மக்கள் மன்றத்தில் நிலைத்த வரலாறு இல்லை – விஜய்
ஒவ்வொரு வருடமும் புயல் மற்றும் பேரிடர் காலங்களில் ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகள் தற்காலிக நிவாரணம் வழங்கி பொதுமக்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வது வழக்கமாக வைத்துள்ளனர். ஆபத்து காலங்களில் மக்களை பாதுகாப்பதே ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளின் தலையாய கடமை. ஆனால் அவர்கள் அதை முழுவதுமாக மறந்து விடுகின்றனர் என்று கூறியுள்ளார். எப்படியாவது மக்களை ஏமாற்றி ஆட்சியைப் பிடித்து விடலாம் என்றும் மக்கள் எல்லாவற்றையும் மறந்து விடுவார்கள் என்று என்று நினைப்பவர்கள் மக்கள் மன்றத்தில் நீடித்ததாக வரலாறு எதுவும் இல்லை என்றும் அவர் தனது அறிக்கையின் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : TN Weather Report : 11 மாவட்டங்களில் கொட்டித் தீர்க்க போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்!
பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய விஜய்
ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னையில் மழையால் பாதித்த பகுதிகளை சேர்ந்த பொது மக்களுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நிவாரண பொருட்களை வழங்கினார். அதாவது சென்னையை சேர்ந்த சுமார் 250 குடும்பங்களை சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றி கழகத்தின் அலுவலகத்திற்கு வரவழைத்து, பொதுமக்களை நேரில் சந்தித்து அவர் நிவாரண பொருட்களை வழங்கினார். மக்களை நேரில் சந்தித்து இந்த நிவாரண பொருட்களை வழங்கியதற்கு பிறகு, புயல் பாதிப்புகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து விஜய் இந்த அறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது