5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Vijay Wishes | அரசியல் களத்தில் புதிய வரலாறு படைத்தவர் அண்ணா.. விஜய் புகழாரம்!

Anna Birthday | தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்தநாள் ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் உருவ சிலைக்கு மாலை அணிவிப்பது, வாழ்த்து தெரிவிப்பது மற்றும் சிறப்பு திட்டங்களை செயல்படுத்துவது என தமிழக அரசு கடைபிடித்து வருகிறது.

Vijay Wishes | அரசியல் களத்தில் புதிய வரலாறு படைத்தவர் அண்ணா.. விஜய் புகழாரம்!
விஜய் வாழ்த்து
vinalin
Vinalin Sweety | Published: 15 Sep 2024 15:10 PM

அண்ணா பிறந்தநாள் : தமிழ்நாட்டின் முன்னாள் முதலர் பேரறிஞர் அறிஞர் அண்ணாவின் 116வது பிறாந்தநாளை முன்னிட்டு நடிகரும், தவெக கட்சி தலைவருமான விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். தொடர்சியாக அண்ணா, பெரியார் உள்ளிட்ட தலைவர்களை முன்னிலைப்படுத்தி வரும் விஜய், அவர்களின் வழியில் கட்சியை நடத்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. சமீபத்தில் கொண்டாடப்பட்ட விநாயகர் சதூர்த்தி விழாவிற்கும் விஜய் வாழ்த்து தெரிவிக்காத நிலையில், தற்போது அண்ணாவின் பிறந்தநாளுக்கு வாத்து தெரிவித்துள்ளது அரசியல் களத்தில் கவனம் பெற்றுள்ளது.

இதையும் படிங்க : முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் அரவிந்த் கெஜ்ரிவால்.. உச்சக்கட்ட அரசியல் பரபரப்பு..

பேரறிஞர் அண்ணாவின் 116 வது பிறந்த நாள் விழா

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்தநாள் ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் உருவ சிலைக்கு மாலை அணிவிப்பது, வாழ்த்து தெரிவிப்பது மற்றும் சிறப்பு திட்டங்களை செயல்படுத்துவது என தமிழக அரசு கடைபிடித்து வருகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட அமைச்சர்கள் அறிஞர் அண்ணாவின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிலையில் நடிகரும் தவெக கட்சியின் தலைவருமான விஜய் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். விஜயின் இந்த வாழ்த்து செய்தி தவெகவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : தீபாவளி பண்டிகைக்கு கங்கையில் நீராட வேண்டுமா? சிறப்பு ரயில் அறிவிப்பு.. விவரங்கள் இதோ..

அண்ணாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த விஜய்

அதில் அண்ணா குறித்து விஜய் கூறியிருப்பதாவது, சுயமரியாதைத் திருமணங்களைச் சட்டப்பூர்வமாக்கியது, “மதராஸ் மாநிலம்” என்ற பெயரை “தமிழ்நாடு” என மாற்றியது, தமிழ் மற்றும் ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கையைச் செயல்படுத்தியது என்று தமிழக அரசியல் களத்தில் புதிய வரலாறு படைத்த பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளில் அவர் தமிழ்நாட்டுக்கு ஆற்றிய பணிகளை என்றென்றும் போற்றி மகிழ்வோம் என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : Tamilnadu Weather Alert: வாட்டி வதைக்கும் வெயில்.. இனி வறண்ட வானிலையே இருக்கும்..

தவெகவுக்கு அங்கீகாரம் வழங்கிய தேர்தல் ஆணையம்

விஜய் கட்சி தொடங்கியது, கட்சி கொடியை அறிமுகப்படுத்தியது என பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தவெக-க்கு இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியது. இது குறித்து அறிக்கை வெளிட்டிருந்த விஜய, தமிழக வெற்றிக் கழகத்தை அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதற்காக, கடந்த பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்திருந்தோம். அதைச் சட்டப்பூர்வமாக பரிசீலித்து நமது நாட்டின் தேர்தல் ஆணையம் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தை ஒரு அரசியல் கட்சியாக பதிவு செய்து, தேர்தல் அரசியலில் பதிவு செய்யப்பட்ட கட்சியாக பங்குபெற அனுமதி வழங்கியுள்ளது. இதை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

இதையும் படிங்க : வெளிய போறீங்களா மக்களே..! சென்னையில் போக்குவரத்து மாற்றம்.. எங்கே தெரியுமா?

அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை தொண்டர்களை காத்திருக்க கூறிய விஜய்

திசைகளை வெல்லப் போவதற்காக முன்னறிவிப்பாக, இப்போது முதற்கதவு நமக்காகத் திறந்திருக்கிறது. இந்த சூழலில், நமது கழகத்தின் கொள்கையைப் பிரகடன முதல் மாநாட்டிற்கான ஆயத்த பணிகள் தொடங்கியுள்ள நிலையில், அது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருங்கள் என்று தெரிவித்துள்ளார். மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி வழங்கியும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை காத்திருங்கள் என்று விஜய் குறிப்பிட்டுள்ள நிலையில் மாநாட்டு தேதி மாற்றப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியானது.

இதையும் படிங்க : Tamilnadu Weather Alert: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு..

நடிகர் விஜய் கூறியது போல மாநாட்டை குறித்த எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகாமல் உள்ளது. இதன் மூலம் திட்டமிட்டப்படி செப்டம்பர் 23 ஆம் தேதி தவெகவின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெறுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest News