TVK Party : தவெகவுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்?.. முதல் மாநாடு எப்போது?.. இன்று முக்கிய அறிவிப்பை வெளியிடும் நடிகர் விஜய்..
Important Announcement | விக்கிரவாண்டியில் மாநாடு நடத்த காவல்துறை அனுமதி வழங்காத பட்சத்தில் மாநாட்டை வருகிற ஜனவரி மாதத்திற்கு மேல் நடத்தவும் விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. அக்டோபர், நவம்பர் மாதங்களில் மழைக்காலம் என்பதால் அப்போது மாநாடு நடத்துவது உகந்தது அல்ல என அவர் கருதுகிறார். எனவே, மாநாடு தள்ளிப்போகும் பட்சத்தில் வருகிற ஜனவரி மாதத்திற்கு மேல் மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
த.வெ.க கட்சி மாநாடு: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாடு வரும் 23ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டியில் மாநாடு நடத்த காவல்துறை அனுமதி வழங்காத பட்சத்தில் மாநாட்டை வருகிற ஜனவரி மாதத்திற்கு மேல் நடத்தவும் விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. அக்டோபர், நவம்பர் மாதங்களில் மழைக்காலம் என்பதால் அப்போது மாநாடு நடத்துவது உகந்தது அல்ல என அவர் கருதுகிறார். எனவே, மாநாடு தள்ளிப்போகும் பட்சத்தில் வருகிற ஜனவரி மாதத்திற்கு மேல் மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கு பதில் அளித்துள்ள அவர், ”காவல்துறை கேட்டுள்ள 21 கேள்விகளுக்கு நாங்கள் உரிய பதில் அளிப்போம். அதற்கான ஆலோசனையில் கட்சியின் சட்டப்பிரிவு நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர். எனவே, எங்கள் கட்சியின் மாநாடு தள்ளிப்போக வாய்ப்பில்லை. திட்டமிட்டபடி வரும் 23ஆம் தேதி நடைபெறும்” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : Today’s Top News Headlines: உங்களை சுற்றி நடந்தது என்ன? – இன்றைய முக்கிய செய்திகள்!
அரசியல் தலைவராக அவதாரம் எடுத்த விஜய்
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருந்து தற்போது அரசியல் தலைவராக அவதாரம் எடுத்திருக்கிறார் விஜய். கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை குறித்து வைத்து தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியைத் தொடங்கி இருக்கிறார். அரசியல் கட்சி தொடங்கிய பிறகு சமூக பிரச்னைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இந்த நிலையில், விஜய் தனது கட்சியின் முதல் மாநாட்டை நடத்த உள்ளதாக தகவல் வெளியான வண்ணம் உள்ளது. மாநாட்டை நடத்த அனுமதி கேட்டு த.வெ.க சார்பில் அனுமதி கோரப்பட்டுள்ளது. ஆனால், இன்னும் அனுமதி கொடுக்கப்படவில்லை என்றும் அதில் தொடர் இழுபறி நீடித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது ஒரு பக்கம் இருக்க விஜய்யின் கட்சிக்கு தேர்தல் ஆணையம் தரப்பில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க : விசாரணை வளையத்தில் மகாவிஷ்ணு.. சென்னையில் காலடி எடுத்து வைத்தவுடன் கைது செய்த போலீஸ்..
இன்று முக்கிய அறிவிப்பை வெளியிடும் நடிகர் விஜய்
தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, பாஜக கூட்டணி கட்சிகள், நாம் தமிழர் என் நான்கு முணை போட்டி நடந்து வருகிறது. இதற்கிடையில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை குறி வைத்து விஜய்யின் த.வெ.க கட்சி களமிறங்க உள்ளது. ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்கும் தவெக கட்சி அதன் முதல் மாநாடு எப்போது என்பது குறித்து முக்கிய தகவல்கள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தவெகவை தேர்தலை ஆணையம் அங்கீகரித்துள்ளதாக வெளியாகும் தகவல் குறித்தும், தேவெகவின் முதல் மாநாடு குறித்து அக்கட்சித் தலைவர் விஜய் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.