தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் விஜய் பேசிய டாப் விஷயங்கள் இதோ! - Tamil News | TVK Leader Vijays Full speech in Vikravandi Maanadu | TV9 Tamil

தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் விஜய் பேசிய டாப் விஷயங்கள் இதோ!

ஊழல்வாதிகளை நாம ஜனநாய போர்களத்தில் நாம சந்திக்கிற நாள் ரொம்ப தூறத்தில இல்ல. 2026-ல் தேர்தல் ஆணையம் அந்த போருக்கான நாள் குறிக்கும் அப்போ தமிழ்நாட்டில் இருக்கு 234 தொகுதியிலும் ஒவ்வொரு ஓட்டும் அணுகுண்டா மாறும்.

தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் விஜய் பேசிய டாப் விஷயங்கள் இதோ!

விஜய்

Published: 

27 Oct 2024 21:55 PM

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தனது கட்சியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதனை தொடர்ந்து இன்று முதல் முறையாக நேரடியாக மக்களை சந்தித்தார். விக்ரவாண்டியில் நடைப்பெற்ற தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் தலைவர் விஜய் உட்பட பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். இதில் விஜய் பேசிய கட்சியின் கொள்கைகள், அரசியலில் யார் எதிரி தங்களுடைய அரசியல் பாதைகள் குறித்தும் விஜய் பேசியுள்ளார். விஜய் பேசியவற்றில் முக்கிய விஷயங்கள் இதோ…

  • ஒரு குழந்தை முதல்முதலா தனது அம்மாவை அம்மா என்று அழைக்கும் போது அந்த அம்மாவிற்கு ஒரு சிலிர்ப்பு ஏற்படும். அந்த குழந்தையிடம் அம்மா என்று சொல்லும் போது ஏற்பட்ட உணர்வை விளக்க சொன்னால் அந்த குழந்தைக்கு அதை விளக்க முடியாது. குழந்தைக்கிட்ட என்ன கேட்டாலும் அதுக்கு மழலை மாறாத சிரிப்பு மட்டும் தான் வரும். அப்படி தான் இருக்கிறது எனக்கு.
  • ஒரு குழந்தை முன்னாடி ஒரு பாம்பு படம் எடுத்து நின்னாலும் அந்த குழந்தை தனது அம்மா முன்னாடி எப்படி சிரிச்சுதோ அப்படிதான் அந்த பாம்பையும் எடுத்தும் விளையாடும். இங்க அந்த பாம்புதான் அரசியல் அதை கையில பிடிச்சு விளையாட ஆரம்பிக்கிறதுதான் உங்க… (தொண்டர்களின் தளபதி குரல்). பாம்பா இருந்தாலும் பாலிடிக்ஸா இருந்தாலும் சிரிச்சுக்கிட்டே சீரியஸா விளையாடுறதுதான் முக்கியம்.
  • இந்த உணர்ச்சிமயமான தருணத்தில் மேடைப்பேச்சின் ஃபார்மெட்டை மறந்துவிட்டேன் என்று பொதுச்செயலாளர் ஆனந்த் அவர்களே, இணை கொள்கை பரப்புச் செயலாளர் தாகீரா அவர்களே… என்று காமெடியாக பேசிய அவர் இங்க எதுக்கு அவர்களே இவர்களே எல்லாம் நம் கட்சியின் கொள்கையே “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” அறிவிச்சுட்டு அவங்க இவங்கனு எதுக்கு பிரிச்சு பாக்கனும்.
  • மேடையில் இருந்தாலும் சரி, மேடைக்கு முன்பு இருந்தாலும் சரி, இந்த நான் நீ நாங்க நீங்க அப்படின்றது கிடையாது நாம… இங்க யார் மேல யார் கீழ என்ற பாகுபாடு எல்லாம் நாம எப்பவும் பாக்க போறது இல்ல. நம்மல பொருத்த வரை எல்லாருமே ஒன்னுதான். எல்லாரும் சமம் தான். அதனால ‘என் நெஞ்சில் குடியிருக்கும் ஒட்டுமொத்தமான உங்க எல்லாருக்கும் என்னுடைய உயிர் வணக்கங்கள்’.
  • பிளவுவாதிகளும் ஊழல்வாதிகளும் நமக்கு எதிரிகள் என்று மத்திய அரசான பாஜகவையும், மாநில அரசான திமுகவையும் நேரடியக சாடினார் விஜய். மேலும் இந்த பிளவு வாத சக்திகளை கூட நாம ஈஸியா கண்டுபிடிச்சுடலாம். ஏன்னா அது ஒரு மதம் பிடிச்ச யானை மாதிரி. அது பன்ற அராஜத்துலேயே அது நம்ம கண்ணுக்கு தெரிஞ்சுடும். ஆனா இந்த ஊழல் இருக்கே.. அது எங்க ஒளிஞ்சு இருக்கு, எப்படி ஒளிஞ்சு இருக்கு, எந்த ஃபார்ம்ல ஒளிஞ்சுருக்குனு கண்டுபிடிக்கவே முடியாது.
  • கருத்தியல் பேசி கொள்கை நாடகம் போடும், களாச்சார பாதுகாப்பு வேஷமும் போடும், அதுக்கு முகமே இருக்காது. முகமூடிதான் போடும் முகமூடிதான் முகமே. இப்படி முகமூடி போட்ட ஊழல்வாதிகள் தான் இப்ப நம்ம கூடவே இருந்துகிட்டு நம்மல ஆட்சி செய்துக் கொண்டிருக்கிறார்கள். ஆமா, நான் திரும்ப சொல்கிறேன் நம்முடைய ஒரு எதிரி பிளவுவாத சக்திகள். நம்முடைய இன்னொரு எதிரி இந்த ஊழல்வாதிகள்.
  • கூத்து தான் அரசியல், அறிவியல் என பல விஷயங்களை பேசியிருக்கிறது. அன்று கூத்தாக இருந்தது தான் இன்று சினிமாவமாக மாறியிருக்கிறது.  ஒரு கூத்தாடியின் கோபத்தை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. கூத்தாடியை பார்த்தால் மக்கள் கை தட்டும், கண் கலங்கும். சினிமாவில் எனக்கு கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் பிடித்து போராடித்தான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன். ஒவ்வொரு வாய்ப்புக்காகவும், ஒவ்வொரு சூழலுக்காகவும் காத்திருந்து உழைத்து சுற்றிச் சுழன்று மேலே வந்தவன் நான்.
  • இது எதோ சோசியல் மீடியாவில் கம்பு சுத்தவந்த கூட்டம் இல்ல, இந்த சமூகத்திற்காக வால் ஏந்தி நிக்கப்போற கூட்டம். நம்ம மண்ணை வாழ வைப்பதற்காக அரசியல் வால் ஏந்தி நிக்கப்போற கூட்டம். மாநாட்டில் கூடியிருப்பவர்கள் மட்டும் எங்கள் தொண்டர்கள் அல்ல. தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வீட்டில் டிவி முன்பு அமர்ந்து இந்த கூட்டத்தைப் பல தொண்டர்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
  • ஜனநாயகம், சமூகநீதி, சகோதரத்துவம், சமத்துவம், சமய நல்லிணக்கம், பெண் கல்வி, பெண்கள் முன்னேற்றம், பகுத்தறிவு சிந்தனை மனப்பாண்மை, மாநில தன்னாட்சி, இருமொழி ஆட்சிக் கொள்கை, இயற்கை வள பாதுகாப்பு, கால நிலை மாற்றத்திற்கு ஏற்ற வளர்ச்சி, உற்பத்தி திறன், உடல் நலனை கெடுக்கும் எவ்வகை போதையும் இல்லா தமிழகம் என்ற கொள்கைகளின் அடிப்படையில், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கின்ற புரட்சிகர தத்துவத்தின் அடிப்படையில் சமதர்ம சமூகத்தை உருவாக்குவது நம்ம மெயின் டார்கெட்.
  • இந்த அரசியல் சரியா வருமா, நாம இயல்புக்கு இது செட்டாகுமானு நிறைய கேள்வி வந்துச்சு ஆனா இதெல்லாம் யோசிட்டு இருந்தா எதும் செய்ய முடியாது. சில விசயங்களை பின்விளைவுகள் பார்க்காம எறங்கி செஞ்சாதான் நம்மள நம்புறவங்களுக்கு நல்லது செய்ய முடியும்னு தோனுச்சு. அதான் எறங்கிட்டேன் இனி எத பத்தியும் யோசிக்கப்போறது இல்ல.
  • ஊழல்வாதிகளை நாம ஜனநாய போர்களத்தில் நாம சந்திக்கிற நாள் ரொம்ப தூறத்தில இல்ல. 2026-ல் தேர்தல் ஆணையம் அந்த போருக்கான நாள் குறிக்கும் அப்போ தமிழ்நாட்டில் இருக்கு 234 தொகுதியிலும் ஒவ்வொரு ஓட்டும் அணுகுண்டா மாறும்.
  • தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பயணத்தில் முக்கிய பங்கு வகிக்கப்போது பெண்கள். என்னுடைய அம்மாக்கள், என்னுடைய அக்கா, தங்கைகள், என் நண்பிகள். என் கூட பிறந்த தங்கச்சி வித்யா இறந்த போது எனக்குள்ள ஒரு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. அதில் கொஞ்சம் கூட குறையாத பாதிப்பையும், வேதனையையும் ஏற்படுத்தியதுதான் தங்கச்சி அனிதா உடைய மரணம். தகுதி இருந்தும் தடையாக இருந்தது நீட்.
  • யார் அரசியலுக்கு வந்தாலும் குறிப்பிட்ட கலர் பூசுகிற பூச்சாண்டி காட்டிக் கொண்டு இருக்காங்க.. பாசிசம்.. பாசிசம்.. சிறுபாண்மை, பெரும்பான்மை என்று பேசுவதே வேலையாகிவிட்டது. அவங்க பாசிசம்னா.. நீங்க பாயாசமா? மக்கள் விரோத ஆட்சிய திராவிட மாடல் ஆட்சி என்று மக்களை ஏமாற்றுகிறீங்க. உங்களை எதிர்ப்பவர்களுக்கு கலர் பூசுவது என்று மோடி மஸ்தான் வேலை செய்ய முடியாது.
  • இந்த நாட்டையே பால்படுத்தும் பிளவுவாத அரசியல் செய்பவர்கள் தான் தமிழக வெற்றிக் கழகத்தின் முழு முதல் கொள்கை எதிரி. திராவிட மாடல் என்று சொல்லிக்கொண்டு தந்தை பெரியார், பேரரிஞர் அண்ணா பெயரை வைத்து தமிழ்நாட்டை சுரண்டி கொள்ளை அடிக்கிற ஒரு குடும்ப சுயநல கூட்டம்தான் நம்மளுடைய அடுத்த எதிரி. அரசியல் எதிரி.
  • 2026 சட்டப்பேரவை தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன்  மக்கள் வெற்றி பெற வைப்பார்கள். தமிழக வெற்றிக் கழக கட்சியுடன் கூட்டணி வைப்போருக்கு ஆட்சி, அதிகாரத்தில் பங்கு உண்டு. நம்முடன் வர நினைப்பவர்களுடன் இணைந்து பணியாற்ற தயார். நமது கொள்கைகளுக்கு உடன்பட்டு வருவோர்களுடன் கூட்டணி அமைப்போம்.
அதிகாலையில் சைக்கிளிங் செய்வதால் கிடைக்கும் பலன்கள்!
இந்த பிரச்சனைகள் இருந்தால் நிச்சயம் ஆப்பிள் பழம் சாப்பிடக்கூடாது..
வேர்க்கடலை குறித்து ஆய்வுகள் கூறும் தகவல்கள்!
சர்க்கரை நோயாளிகள் எந்த 4 பழங்களை சாப்பிடக்கூடாது?