5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

TVK Maanadu: தமிழக வெற்றிக் கழக மாநாடு பயணம்.. தொடரும் விபத்துகள்.. 4 பேர் உயிரிழப்பு!

பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தமிழக வெற்றிக் கழக மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வி.சாலையில் இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. மாலை 4 மணிக்கு மாநாடு தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், கடும் வெயில் காரணமாக முன்கூட்டியே 3 மணிக்கு தொடங்க உள்ளது.

TVK Maanadu: தமிழக வெற்றிக் கழக மாநாடு பயணம்.. தொடரும் விபத்துகள்.. 4 பேர் உயிரிழப்பு!
விபத்து
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 27 Oct 2024 14:46 PM

சென்னை, திருச்சியில் இருந்து தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு செல்லும் வழியில் ஏற்பட்ட விபத்தில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தமிழக வெற்றிக் கழக மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வி.சாலையில் இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. மாலை 4 மணிக்கு மாநாடு தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், கடும் வெயில் காரணமாக முன்கூட்டியே 3 மணிக்கு தொடங்க உள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்த ரசிகர்கள், தொண்டர்கள் என பலரும் வருகை தந்திருக்கின்றார்கள். காலை முதலே தொண்டர்கள், ரசிகர்கள் மாநாடு நடைபெறும் இடத்திற்கு குவிந்த வண்ணம் உள்ளனர். இன்று மாலை கூட்டம் நடக்ககிறது.

தமிழக வெற்றிக் கழக  மாநாடு

ஆனால் நேற்று இரவு முதலே கூட்டம் கூட்டமாக அங்கே வந்துள்ளனர். மக்களும் குடும்பம் குடும்பமாக காலையிலேயே வந்திருக்கின்றனர். மாநாட்டிற்கு இரு சக்கர வாகனங்கள், கார், மினிவேன், லாரி போன்றவற்றில் கூட்டம் கூட்டமாக வந்துள்ளார்.

இதனால் வி.சாலையில் கடுமையாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும், மாநாடு நடைபெறுவதற்கு முன்பே அங்கு போடப்பட்டிருக்கும் நாற்காலியில் அமர்ந்துள்ளனர். கொளுத்தும் வெயிலை பார்க்காமல் அங்கு அமர்ந்துள்ளனர்.

Also Read: நவம்பர் 2 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு.. சென்னையில் எப்படி?

மாநாடு நடைபெறும் இடத்தில் சுமார் 1 லட்சத்திற்கு மேற்பட்டோர் குவிந்துள்ளனர். இப்படியான சூழலில்,  மாநாட்டிற்கு பயணம் மேற்கொண்டவர்கள் அடுத்தடுத்த உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, மாநாட்டிற்கு செல்லும் வழியில்   சாலை விபத்துகளில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் இருந்து இரண்டு இளைஞர்கள் இருசக்கர வாகனங்கள் தமிழக வெற்றிக் கழக கொடியுடன் மாநாட்டிற்கு சென்றபோது விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இருவரும் படுகாயம் அடைந்த நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார். அதேபோல, திருச்சியில் இருந்து மாநாட்டிற்கு சென்ற வாகனம் உளுந்தூர்பேட்டை அருகே சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் நான்கு பேர் உயிரிழப்பு

இதில் மூன்று பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிகிச்சை பலனின்றி இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். ஏற்கனவே, சென்னை தாம்பரம் அருகே மாநாட்டிற்கு பயணம் மேற்கொண்டவர்களின் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 11 பேர் காயம் அடைந்துள்ளனர். முன்னதாக, சென்னையைச் சேர்ந்த நிதிஷ்குமார், தனது நண்பர்களுடன் ரயிலில் விழுப்புரத்திற்கு சென்றிருக்கிறார். ரயில் இன்று அதிகாலை விக்கிரவாண்டி அருகே சென்றபோது ரயில் செல்லும் தண்டவாளத்தையொட்டி சுமார் 50 மீட்டர் இடைவெளியில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு பந்தல் இருந்தது.

Also Read: அலை அலையாக கூடும் மக்கள்.. த.வெ.க மாநாட்டிற்கு வந்த 80க்கும் மேற்பட்டோர் மயக்கம்..

இதனை பார்த்து உற்சாகமடைந்த நிதிஷ்குமார் மற்றும் அவரது நண்பர்கள் 2 பேர் ஓடும் ரயிலில் இருந்த இறங்க முடிவு செய்தனர். அப்போது கீழே விழுந்த இருவரும் படுகாயம் அடைந்தனர். இதனை அறிந்த போலீசார் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதில் நிதிஷ்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாநாடு சற்று நேரத்தில் நடைபெறும் சூழல், அடுத்தடுத்த விபத்துகள் ஏற்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாலை 4 மணிக்கு தொடங்கும் மாநாட்டிற்கு காலை முதல் தொண்டர்கள் வெயிலில் திரண்டதால் சுமார் 80 க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்ததாக கூறப்படுகிறது.

அத்துடன் அவர்களுக்கு அங்கு இருக்கும் மருத்துவ குழு சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் தொண்டர்கள் கூட்டம் அதிகமாக உள்ளதால் விக்கிரவாண்டி, விழுப்புரம், முண்டியம்பாக்கம் ஆகிய பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்க வேண்டாம் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டாலும் அதிகப்படியான மக்கள் கூட்டம் இருப்பதால் விக்கிரவாண்டி வி.சாலை ஸ்தம்பித்துள்ளது.

Latest News