5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

TVK Maanadu: ”கூத்தாடினா கெட்ட வார்த்தையா?” மாநாட்டில் ஆவேசமான விஜய்!

த.வெ.க விஜய்: தன்னை கூத்தாடி என்று விமர்சிப்பவர்கள் குறித்து விஜய் மாநாட்டில் பதிலடி கொடுத்தார். அதாவது, "கூத்து என்றால் கெட்ட வார்த்தையா? கூத்து தான் இந்த மண்ணின் கலை. கூத்தாடியின் கோபத்தை யாராலும் கட்டுப்படுத்த முடியாது” என்று ஆவேசமாக பேசினார்.

TVK Maanadu: ”கூத்தாடினா கெட்ட வார்த்தையா?” மாநாட்டில் ஆவேசமான விஜய்!
கோப்பு புகைப்படம்
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 27 Oct 2024 22:03 PM

தமிழ் சினிமாவில் உச்சபட்ச நடிகராக உள்ள விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கிய, பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு இன்று விக்கிரவாண்டி பகுதிகளில் உள்ள வி.சாலையில் நடந்து முடிந்துள்ளது. கட்சி தொண்டர்களுக்கு மத்தியில் ரேம்ப் வாக் செய்தார். இருபுறமும் தொண்டர்கள் வீசிய கட்சி துண்டுகளை கழுத்தில் அணிந்து கொண்டு தொண்டர்களை நோக்கி கை அசைத்து மேடை நோக்கி விஜய் சென்றார். இதைத் தொடர்ந்து மாநாட்டு திடலில் இருந்த 101 அடி கொடி கம்பத்தில் கட்சிக் கொடியை ஏற்றினார் விஜய்.

”கூத்தாடினா கெட்ட வார்த்தையா?”

பின்னர், தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பாடல், கோட்பாடு, குறிக்கோள், செயல் திட்டம் ஆகியவை அறிவிக்கப்பட்டது. இதைத் அதைத் தொடர்ந்து த.வெ.க தலைவர் விஜய் உரையாற்றினார். அதில் தன்னை கூத்தாடி என்று விமர்சிப்பவர்கள் குறித்து விஜய் பேசினார். சினிமாவில் இருந்து வந்துள்ளதால் என்னை நிறைய பேர் கூத்தாடி என்று சொல்கிறார்கள்.

கூத்து என்றால் கெட்ட வார்த்தையா? கூத்து தான் இந்த மண்ணின் கலை. எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் அரசியலுக்கு வந்த போது சொன்னார்கள். ஆனால் இந்த கூத்தாடிகள் தான் அந்த இரண்டு மாநிலங்களையும் ஆண்டார்கள். அவர்களையே கூத்தாடி என்று சொல்லும்போது நம்மைச் சொல்லமாடார்களா? திராவிடம் வளர்ந்ததே கூத்தை வைத்துதான்.

Also Read: பிளவுவாதிகளும் ஊழல்வாதிகளும் நமக்கு எதிரிகள் – விஜய் பேச்சு

“கூத்தாடியின் கோபத்தை யாராலும் கட்டுப்படுத்த முடியாது”

கூத்து தான் அரசியல், அறிவியல் என பல விஷயங்களை பேசியிருக்கிறது. அன்று கூத்தாக இருந்தது தான் இன்று சினிமாவமாக மாறியிருக்கிறது.  ஒரு கூத்தாடியின் கோபத்தை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. கூத்தாடியை பார்த்தால் மக்கள் கை தட்டும், கண் கலங்கும்.

சினிமாவில் எனக்கு கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் பிடித்து போராடித்தான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன். ஒவ்வொரு வாய்ப்புக்காகவும், ஒவ்வொரு சூழலுக்காகவும் காத்திருந்து உழைத்து சுற்றிச் சுழன்று மேலே வந்தவன் நான்.

சாதாரண இளைஞனாக இருந்த விஜய் முதலில் ஒரு நடிகனாக மாறினான். தொடர்ந்து, வெற்றி பெற்ற நடிகனாக மாறினான். அதனைத் தொடர்ந்து, பொறுப்புள்ள மனிதனாகவும் மாறினான். பொறுப்புள்ள மனிதன் பொறுப்புள்ள தொண்டான மாறினான்.

”இரண்டே எதிரிகள் தான்”

பொறுப்புள்ள தொண்டனாக இன்று இருப்பவன் நாளை தலைவனாகவும் ஆவான்” என்றார். தொடர்ந்து பேசிய அவர், “அரசியலில் பிளவுவாதிகளும் ஊழல்வாதிகளும் நமக்கு எதிரிகள் இந்த பிளவு வாத சக்திகளை கூட நாம ஈஸியா கண்டுபிடிச்சுடலாம்.

ஏன்னா அது ஒரு மதம் பிடிச்ச யானை மாதிரி. அது பன்ற அராஜத்துலேயே அது நம்ம கண்ணுக்கு தெரிஞ்சுடும். ஆனா இந்த ஊழல் இருக்கே.. அது எங்க ஒளிஞ்சு இருக்கு, எப்படி ஒளிஞ்சு இருக்கு, எந்த ஃபார்ம்ல ஒளிஞ்சுருக்குனு கண்டுபிடிக்கவே முடியாது.

Also Read: “கூட்டணிக்கு அழைப்பு” 2026 தேர்தலுக்கு அஸ்திவாரம் போட்ட விஜய்!

கருத்தியல் பேசி கொள்கை நாடகம் போடும், களாச்சார பாதுகாப்பு வேஷமும் போடும், அதுக்கு முகமே இருக்காது. முகமூடிதான் போடும் முகமூடிதான் முகமே. இப்படி முகமூடி போட்ட ஊழல்வாதிகள் தான் இப்ப நம்ம கூடவே இருந்துகிட்டு நம்மல ஆட்சி செய்துக் கொண்டிருக்கிறார்கள். ஆமா, நான் திரும்ப சொல்கிறேன் நம்முடைய ஒரு எதிரி பிளவுவாத சக்திகள். நம்முடைய இன்னொரு எதிரி இந்த ஊழல்வாதிகள்” என்றும் விஜய் தெரிவித்துள்ளார்.

 

Latest News