5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

TVK Maanadu: தமிழக வெற்றிக் கழகம் மாநாடு.. இந்த ரூட்டில் செல்ல அனுமதியில்லை.. வந்தது முக்கிய அறிவிப்பு

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வி. சாலையில் தமிழக வெற்றிக் கழக மாநாடு நாளை (அக்டோபர் 27) நடைபெற உள்ள நிலையில், சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் இருந்து திருச்சி நோக்கி செல்லும் அரசு பேருந்துகள் திண்டிவனத்தில் இருந்து செஞ்சி வழியாக திருப்பி விடப்படுகின்றன.

TVK Maanadu: தமிழக வெற்றிக் கழகம் மாநாடு.. இந்த ரூட்டில் செல்ல அனுமதியில்லை..  வந்தது முக்கிய அறிவிப்பு
விஜய்
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 26 Oct 2024 21:30 PM

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நாளை (அக்டோபர் 27) நடைபெற உள்ளது.  விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வி.சாலையில் நாளை மாநாடு நடைபெற உள்ளது.  நாளை மாலை 4 மணிக்கு தொடங்கும் மாநாடு, இரவு 8.30 மணி வரை நடைபெறும் என்று கூறப்படுகிறது. இந்த மாநாட்டில் கட்சி நிர்வாகிகள், ரசிகர்கள், பொது மக்கள் என 50 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை – திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்:

இதனால் அப்பகுதி முழுவதும் போக்குவரத்து நெரிசல் இருக்கும். இதனால் சென்னை – திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் இருந்து திருச்சி நோக்கி செல்லும் அரசு பேருந்துகள் திண்டிவனத்தில் இருந்து செஞ்சி வழியாக திருப்பி விடப்படுகின்றன.

சென்னையில் இருந்து திருச்சி செல்லும் கனரக வாகனங்கள், திண்டிவனத்தில் இருந்து வில்லியனூர் வழியாக விழுப்புரம் செல்லலாம். சென்னையில் இருந்து திருச்சி செல்லும் கார்கள், திண்டிவனத்தில் இருந்து மயிம், பெரும்பாக்கம் வழியாக விழுப்புரம் செல்லலாம்.

திருச்சியில் இருந்து சென்னை வரும் பேருந்து, கார்கள் செஞ்சி, திண்டுவனம் வழியாக சென்னைக்கு வரலாம். மேலும், திருச்சியில் இருந்து வரும் கனராக வாகனங்கள், வில்லியனூர், திண்டிவனம் வழியாக சென்னை வரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: தீபாவளி ஷாப்பிங்.. தி.நகர் போறீங்களா? தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!

த.வெ.க மாநாடு ஏற்பாடுகள்:

இந்த மாநாடு நடைபெறும் இடத்தில் 100 அடி உயர கொடி கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கம்பத்தில் விஜய் நாளை கொடியேற்றி மாநாட்டை துவங்கி வைப்பார். ரேம்பில் நடந்து வந்த கட்சி கொடியை விஜய் ரிமோட் முலம் ஏற்றுவார்.

இந்த மாநாட்டில் விஜய் தனது கட்சியின் கொள்கை குறித்து பேச உள்ளதாக தெரிகிறது. அத்துடன் தான் அறிமுகப்படுத்திய மஞ்சள், சிவப்பு நிறத்துடன் நட்சத்திரங்கள், யானை குறியீட்டுடன் கூடிய கொடி குறித்த விளக்கத்தையும் இந்த மாநாட்டில் விஜய் பேச உள்ளதாகவும் தெரிகிறது.

மாநாட்டிற்கு இளைஞர்கள், பெண்கள், கல்லூரி மாணவர்கள், கட்சி தொண்டர்கள் என 50 ஆயிரத்திற்கும மேற்பட்டோர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்து வருகின்றனர். நாளை மாநாடு நடைபெறுவதையொட்டி, விஜய் கட்சி தொண்டர்களும், அவரது ரசிர்களும், உற்சாகத்தில் உள்ளனர்.

மாநாடு மேடை அருகை இணைய வசதி எளிதாக கிடைக்கும் வகையில், தனியார் கம்பெனியின் செல்போன் டவர் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், மாநாடு நிகழ்வுகளை பார்க்கின்ற வகையில் 600 பெரிய எல்.இ.டி திரைகள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளன.

Also Read: “தம்பி விஜய்க்கு பெருங்கனவு” த.வெ.க மாநாட்டுக்கு சீமான் வாழ்த்து!

மாநாட்டு வரும் தொண்டர்களுக்கு 3 லட்சம் வாட்டர் பாட்டில் நேற்று வரை இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் பிஸ்கட் பாக்கெட்டுகள், மிக்சர் என வரவழைத்து அப்பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

500க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டள்ளது. மேலும், பார்க்கிங் வசதி, கழிவறை வசதி, குடிநீர் வசதி போன்ற அத்தியாவசிய தேவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மாநாடு நடைபெறும் இடத்தில் 150க்கும் மேற்பட்ட மருத்துவ குழுக்களும் தயார் நிலையில் இருப்பதாகவும், ஆம்புலஸ் குழுவினர், கண்காணிப்பு குழுவினர் ஆகியார் இருப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

இன்று இரவு விழுப்புரம் செல்லும் விஜய்?

விஜய் சென்னையில் இருந்து விக்கிரவாண்டிக்கு எப்போது புறப்பட்டு செல்வார் என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் உள்ளது. இவர் இன்று நள்ளிரவில் சென்னையில் இருந்து புறப்பட்டு மாநாடு நடைபெறும் விக்கிரவாண்டி வி.சாலைக்கு செல்வார் என்று கூறப்படுகிறது.

ஏனெனில் நாளை காலை அவர் புறப்பட்டு செல்லும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அதை தவிர்ப்பதற்காகவே இத்தகையை நடவடிக்கை அவர் மேற்கொள்வார் என்று கூறப்படுகிறது.

மேலும், மாநாடு நடைபெறும் இடத்தில் அவர் தங்குவதற்கு வசதியாக அங்கு 6 கேரவண்கன் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், அனைத்து வசதிகளுடன் கூடிய விஐபி அறை ஒன்றும் தயார் நிலையில் உள்ளதாக தெரிகிறது.

 

Latest News