5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

TVK Vijay: அதிமுகவை சீண்டாத விஜய்.. தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் கணக்கு இதுதானா?

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் நடத்தினார். இந்த மாநாட்டில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் கோட்பாடுகள், கொள்கைகள், குறிக்கோள்கள் போன்றவற்றை அறிவித்தார். மேலும், வெளிப்படையாக பல்வேறு அரசியல் கட்சிகளை கடுமையாக விமர்சித்தார்.

TVK Vijay: அதிமுகவை சீண்டாத விஜய்.. தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் கணக்கு இதுதானா?
த.வெ.க விஜய் (pic credit: PTI
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 18 Nov 2024 18:59 PM

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் நடத்தினார். இந்த மாநாட்டில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர். இன்று மாலை 3 மணிக்கு கலை நிகழ்ச்சிகளுடன் மாநாடு தொடங்கியது. இதன்பிறகு, கட்சி தொண்டர்களுக்கு மத்தியில் ரேம்ப் வாக் செய்து, இருபுறமும் தொண்டர்கள் வீசிய கட்சி துண்டுகளை கழுத்தில் அணிந்து கொண்டு தொண்டர்களை நோக்கி கை அசைத்து மேடை நோக்கி விஜய் சென்றார். இதைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் கோட்பாடுகள், கொள்கைகள், குறிக்கோள்கள் போன்றவற்றை அறிவித்தார். அதன்படி, பெரியார், அம்பேத்கர், காமராஜர், அஞ்சலையம்மாள், வேலுநாச்சியார் ஆகியோர் கொள்கை வழிகாட்டிகளாக த.வெ.க ஏற்றுள்ளதாக கூறினார்.

பாஜக, திமுகவை கடுமையாக விமர்சித்த விஜய்

மேலும், திருவள்ளுவர் கூறிய பிறப்பொக்கும் எல்லாம் உயிர்க்கும் என்ற அடிப்படையில் சாதி, மதம், இனம் வேறுபாடு இல்லாமல் அனைவரும் சமம் என கொள்கையோடு பயணிப்போம் என்று அறிவித்தார் விஜய். மேலும், ‘மதச்சார்பற்ற சமூக நீதி கொள்கை’ எங்களது கொள்கை என்றும் குறிப்பிட்டார். தனது கட்சி கொள்கைகளை அறிவித்த விஜய், வெளிப்படையாக பல்வேறு அரசியல் கட்சிகளை கடுமையாக விமர்சித்தார்.

பிளவுவாத சக்திகள், ஊழல் மலிந்த கலாச்சாரம், பாசிசம் என பாஜக மற்றும் திமுக கட்சிகளை கடுமையாக விமர்சித்தார்.  அதாவது, ”அரசியலில் பிளவுவாதிகளும் ஊழல்வாதிகளும் நமக்கு எதிரிகள். இந்த பிளவு வாத சக்திகளை கூட நாம ஈஸியா கண்டுபிடிச்சுடலாம். ஏன்னா அது ஒரு மதம் பிடிச்ச யானை மாதிரி. அது பன்ற அராஜத்துலேயே அது நம்ம கண்ணுக்கு தெரிஞ்சுடும். ஆனா இந்த ஊழல் இருக்கே.

அது எங்க ஒளிஞ்சு இருக்கு, எப்படி ஒளிஞ்சு இருக்கு, எந்த ஃபார்ம்ல ஒளிஞ்சுருக்குனு கண்டுபிடிக்கவே முடியாது. கருத்தியல் பேசி கொள்கை நாடகம் போடும், களாச்சார பாதுகாப்பு வேஷமும் போடும், அதுக்கு முகமே இருக்காது.

Also Read: “கூட்டணிக்கு அழைப்பு” 2026 தேர்தலுக்கு அஸ்திவாரம் போட்ட விஜய்!

அதிமுகவை சீண்டாத விஜய்:

முகமூடிதான் போடும் முகமூடிதான் முகமே. இப்படி முகமூடி போட்ட ஊழல்வாதிகள் தான் இப்ப நம்ம கூடவே இருந்துகிட்டு நம்மல ஆட்சி செய்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே, பிளவுவாத அரசியல் செய்பவர்கள் தான் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் எதிரிகள்.

அடுத்து, திராவிட மாடல் என்று சொல்லிக் கொண்டு தந்தை பெரியார், அண்ணா பெயரை வைத்து தமிழ்நாட்டை கொள்ளையடிக்கும் ஒரு குடும்ப சுயநலம் கூட்டம் இரண்டாவது அரசியல் எதிரி. கொள்கை, கோட்பாடு அளவில் திராவிடத்தையும், தேசியத்தையும் பிரிந்து பார்க்க போவதில்லை.

திராவிடமும், தேசியமும் இந்த மண்ணின் இரண்டு கண்கள் என்பது தான் என்னோட கருத்து” என்று திட்டவட்டமாக கூறினார்.  இப்படி திமுக, பாஜகவை கடுமையாக விமர்சித்த விஜய்,  அதிமுகவை சுத்தமாக விமர்சிக்காமல் இருந்தார். இதனால் 2026 தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைப்பாரா என்று கேள்வி எழுந்துள்ளது.

Also Read: ”கூத்தாடினா கெட்ட வார்த்தையா?” மாநாட்டில் ஆவேசமான விஜய்!

கூட்டணிக்கு அழைப்பு விடுத்த விஜய்:

அதிமுக வாக்குகளை குறிவைக்கும் நோக்கில் அதிமுகவை விமர்சிக்காமல் விஜய் தவிர்த்திருக்கலாம் என கூறப்படுகிறது. தற்போது, அதிமுக ஆட்சியில் இல்லாத காரணத்தால் அதிமுகவை விமர்சிப்பதை விஜய் தவிர்த்திருக்கலாம்.

மேலும், எதிர்காலத்தில் தன்னுடைய தலைமையிலான கூட்டணியில் அதிமுகவை சேர்க்கும் நோக்கில் அக்கட்சியை விமர்சிக்காமல் தவிர்த்திருக்கலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இன்று நடந்த மாநாட்டில் விஜய் கடைசியாக கூட்டணி குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

தமிழக வெற்றிக் கழக கட்சியுடன் கூட்டணி வைப்போருக்கு ஆட்சி, அதிகாரத்தில் பங்கு உண்டு. 2026 சட்டப்பேரவை தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் மக்கள் வெற்றி பெற வைப்பார்கள். தனிப்பெரும்பான்மை கிடைக்கும் என்றால் விரும்பி வருவோருடன் இணைவேன்” என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.

Latest News