Vijay : வெள்ள பாதிப்பு.. பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் வரவழைத்து நிவாரண பொருட்கள் கொடுத்த விஜய்!
Chennai | சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணம் வழங்கிய பின், தமிழக வெற்றிக் கழக தலைவர் பொதுமக்களுடன் அமர்ந்து உரையாடிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாட்டின் வட மாவட்டங்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதேபோல சென்னையிலும் மழையால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், செனையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், நேரில் அழைத்து நிவாரண பொருட்களை வழங்கியுள்ளார். நிவாரண பொருட்கள் வழங்கியதுடன் அப்பகுதி மக்களுடன் அமர்ந்து விஜய் கலந்துரையாடியுள்ளார். அப்போது வீடுகளுக்கு நேரே வந்து நிவாரண பொருட்களை வழங்காதது ஏன் என்றும் அவர் அவர்களிடம் விளக்கம் அளித்துள்ளார். தற்போது இந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிங்க : Manjolai Tea Estate : மாஞ்சோலை தேயிலை தோட்ட விவகாரம்.. அரசே ஏற்று நடந்தக்கோரிய மனுக்கள் தள்ளுபடி!
தமிழகத்தை நிலைகுலைய செய்த ஃபெஞ்சல் புயல்
தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் கடந்த 24 ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி கடந்த நவம்பர் 27 ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இதனை தொடர்ந்து கடந்த 29 ஆம் தேதி அது புயலாக வலுப்பெற்றுது. இந்த புயலுக்கு வானிலை ஆய்வு மையம் ஃபெஞ்சல் என பெயரிட்டது. இந்த நிலையில் ஃபெஞ்சல் புயல் சென்னையில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஃபெஞ்சல் புயல் மரக்காணம் மற்றும் புதுச்சேரி இடையே கடந்த நவம்பர் 30 ஆம் தேதி நள்ளிரவு கரையை கடந்தது. இதனால், கடந்த நவம்பர் 24 ஆம் தேதி முதல் சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட வட மாவட்டங்கள் கடும் சவால்களை எதிர்க்கொண்ட. மேலும், திருவண்ணாமலையில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதையும் படிங்க : TN Weather Report : 11 மாவட்டங்களில் கொட்டித் தீர்க்க போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்!
நிவாரண உதவிகளை வழங்கிய விஜய்
இந்த நிலையில், சென்னையில் பெய்த கடும் மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நிவாரண பொருட்களை வழங்கினார். அதாவது ஃபெஞ்சல் புயல் மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமாரா 250 குடும்பங்களுக்கு அவர் நிவாரண பொருட்களை வழங்கினார். சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றி கழக தலைமை அலுவலகத்தில் வைத்து பொது மக்களுக்கு விஜய் நிவாரண பொருட்கள் வழங்கியது குறிப்பிடத்தக்கது. பொதுமக்கள் நிவாரண பொருட்களை வழங்கியது மட்டுமன்றி, விஜய் அவர்களுடன் அமர்ந்து சிறிது நேரம் உரையாடியுள்ளார். அப்போது பேசிய அவர், “உங்கள் வீடுகளுக்கு நேரில் வந்து நான் நலத்திட்ட உதவிகளை வழங்கி இருக்கலாம். ஆனால் அப்படி வந்து நலத்திட்ட உதவிகளை வழங்கினால் உங்களுடன் நான் இப்படி அமர்ந்து பேச முடியாது. நான் அங்கு வந்தால் நெரிசல் ஏற்படும் உங்கள் அனைவரிடமும் சிரமம் இல்லாமல் பேச முடியாது என்றும் பொதுமக்களிடம் விஜய் கூறியுள்ளார்.
இதையும் படிங்க : Crime: அமைச்சருக்கு மிரட்டல்.. நைட்டி அணிந்துகொண்டு வாக்குவாதம்.. போலீசாரை அலறவிட்ட போதை நபர்!
நிவாரணம் அறிவித்த முதலமைச்சர்
முன்னதாக ஃபெஞ்சல் புயல் மற்றும் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட 6 மாவட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்தார். அதன்படி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தருமபுரி, மற்றும் கடலூர் ஆகிய 6 மாவட்டங்களுக்கு வீடுகள், கால்நடைகள் மற்றும் நெற்பயிர்கள் ஆகியவற்றுக்கு தனித்தனியாக நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.