5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

TVK: த.வெ.க மாநாட்டிற்கு பின் நடக்கும் முதல் ஆலோசனை கூட்டம்.. தலைமை அலுவலகத்திற்கு வந்த தலைவர் விஜய்..

இப்படி கட்சிப் பணிகள் படிப்படியாக நடந்து வரும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் விஜய்யை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அண்ணன், தம்பி உறவு வேறு. கொள்கை வேறு. தாய் தந்தையராகவே இருந்தாலும் எங்களுடைய கொள்கைக்கு எதிராக இருந்தால் எதிரி எதிரி தான் என்று தெரிவித்துள்ளார்.

TVK: த.வெ.க மாநாட்டிற்கு பின் நடக்கும் முதல் ஆலோசனை கூட்டம்.. தலைமை அலுவலகத்திற்கு வந்த தலைவர் விஜய்..
கோப்பு புகைப்படம்
aarthi-govindaraman
Aarthi Govindaraman | Published: 03 Nov 2024 12:44 PM

தமிழக வெற்றிக் கழக மாவட்ட நிர்வாகிகள் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் அணி தலைவர்கள் கலந்துகொள்ளும் ஆலோசனை கூட்டம் இன்று சென்னை பனையூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. சமீபத்தில் மாநாடு நடந்து முடிந்துள்ள நிலையில் அடுத்தகட்ட பணிகள் மற்றும் பொறுப்பாளர்கள் நியமனம் உட்பட குறித்து மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இறுதியில் கட்சியின் தலைவர் விஜய் கலந்துகொள்ள பனையூரில் இருக்கும் கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்தார்.

ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற தலைவர் விஜய்:


மாநாட்டிற்கு பிறகு பொதுக்கூட்டங்கள், சுற்றுப்பயணங்கள் நடத்தப்படும் என்று ஏற்கனவே தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில் அது குறித்தும் ஆலோசனை நடத்தப்படதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சீமான் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் முன்வைக்கும் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுப்பது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டது. மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றதாக ஏற்கனவே தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில் மாவட்ட தலைவர்களை இன்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அலுவலகத்திற்கு வெளியில் கூடியிருந்த தொண்டர்களுக்கு காரில் இருந்து இறங்கி கை அசைத்து பிறகு உள்ளே நடந்து சென்றார்.

மேலும் படிக்க: “விஜய்யை விமர்சிக்காதீங்க” இபிஎஸ் போட்ட ஆர்டர்.. 2026 தேர்தலில் பூகம்பம்தான் போலயே!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு பல குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தது இந்த நிலையில் மாநாட்டை வெற்றிகரமாக நடத்திக் கொடுத்த குழுக்களின் முக்கிய நிர்வாகிகளுடன் தலைவர் விஜய் புகைப்படம் எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

முதல் மாநாடு தொடங்கி ஆலோசனை கூட்டம் வரை:

தமிழக வெற்றிக் கழக்த்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் அக்டோபர் 27 ஆம் தேதி நடைபெற்றது. இந்த மாநாடு அரசியல் கட்சிகளுக்கு இடையே மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்டது. நடந்து முடிந்த மாநாட்டில் கட்சி கொள்கை மற்றும் தீர்மானங்கள் குறித்து தலைவர் விஜய் பேசினார். பின்னர் மிக முக்கியமாக கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்களிக்கப்படும் என தெரிவித்தார்.

கட்சியின் முதல் மாநாடு வெற்றிகரமாக முடிந்த நிலையில், மாநாட்டிற்காக உழைத்த அனைவருக்கு நன்றி தெரிவித்தார். அதனை தொடர்ந்து இன்று பனையூரில் இருக்கும் கட்சி அலுவலகத்தில் முதல் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசப்பட்டது. தற்போது ஒரு வாக்குச்சாவடிக்கு 10 பொறுப்பாளர்கள் என நியமித்து பணிகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: தென் மாவட்டங்களில் கொட்டித்தீர்க்கும் மழை.. இன்று 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. எங்கே?

பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்ட பின் வரும் டிசம்பர் 27 ஆம் தேதி முதல் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பயண விவரங்கள் தயார் செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சி தலைவர்கள் விமர்சனம்:

இப்படி கட்சிப் பணிகள் படிப்படியாக நடந்து வரும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் விஜய்யை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அண்ணன், தம்பி உறவு வேறு. கொள்கை வேறு. தாய் தந்தையராகவே இருந்தாலும் எங்களுடைய கொள்கைக்கு எதிராக இருந்தால் எதிரி எதிரி தான் என்று தெரிவித்துள்ளார்.

இது ஒரு பக்கம் இருக்க, 2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுக்கும், தமிழக வெற்றிக் கழக கட்சிக்கும் இடையே கூட்டணி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சுகள் நிலவுகிறது. இந்த சூழலில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பற்றி விமர்சனம் செய்யக் கூடாது என்று அதிமுக நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி கட்டளையிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Latest News