TVK Meeting: மாநாட்டிற்கு தயாராகும் த.வெ.க.. பந்தல் கால் நடும் விழாவில் விஜய் பங்கேற்பு?

கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் சுமார் 30 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது. இதில் ஒவ்வொரு குழுவிலும் 12 பேர் வரை இடம்பெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படி மாநாட்டுக்கான ஏற்பாடுகளை தவெக கட்சியினர் மும்முரமாக செய்து வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க மாநாட்டிற்கான ஏற்பாடுகள், உணவு என அனைத்திற்கு தன்னார்வளர்கள் பதிவு செய்துள்ளனர்.

TVK Meeting: மாநாட்டிற்கு தயாராகும் த.வெ.க.. பந்தல் கால் நடும் விழாவில் விஜய் பங்கேற்பு?

கோப்பு புகைப்படம்

Updated On: 

25 Oct 2024 11:00 AM

நடிகர் விஜய் தொடங்கியுள்ள த.வெ.க கட்சி மாநாடு இன்னும் சில நாட்களில் நடைபெற உள்ளது. வரும் 27 ஆம் தேதி விக்கிரவாண்டியில் மிகவும் பிரம்மாண்டமாக இந்த மாநாடு நடைபெற உள்ளது. முதலில் மதுரையில் இந்த மாநாட்டை நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் அதற்கான அனுமதி வழங்கப்படாத நிலையில் விக்கிரவாண்டியில் நடைபெறுகிறது. மாநாட்டிற்கு இன்றும் சில நாட்களே உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள கட்சியின் தலைவர் விஜய் நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மாநாடு நடத்துவதற்கான பணிகளை கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மேற்கொண்டு வருகிறார். மாநாடு தொடர்பான ஏற்பாடுகளை செய்ய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் சுமார் 30 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது. இதில் ஒவ்வொரு குழுவிலும் 12 பேர் வரை இடம்பெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படி மாநாட்டுக்கான ஏற்பாடுகளை தவெக கட்சியினர் மும்முரமாக செய்து வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க மாநாட்டிற்கான ஏற்பாடுகள், உணவு என அனைத்திற்கு தன்னார்வளர்கள் பதிவு செய்துள்ளனர். தன்னார்வலர்களின் பெயர் புகைப்படத்துடன் பதிவேற்றம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:  மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பிற்கான கையெழுத்து இயக்கம்.. விசிக மாநாட்டில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றம்..

கட்சியின் முதல் மாநாடு என்பதால் மிகவும் கவனத்துடன் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எந்த சூழ்நிலையிலும் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் எதுவும் நடந்துவிடக்கூடாது என்றும் மாநாட்டிற்கு வரும் மக்கள் பாதுக்காப்பாக வந்து செல்ல ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் சுமார் 10,000 பேர் மாநாட்டிற்கு அழைத்து வர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநாடு நடைபெறும் நாளில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது, பார்க்கிங் வசதி, பாதுகாப்பு, குடிநீர் வசதி, ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வசதிகள் இருக்க வேண்டும் போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மாநாட்டிற்கு குழந்தைகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்றும் கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு தனி இடம் ஒதுக்கப்பட வேண்டும் என்று காவல்துறை நிபந்தனை விதித்துள்ளது.

மேலும் படிக்க: பேசாமல் கல்லூரிகளை மூடிவிடலாம் – தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம்..

இப்படி மாநாட்டிற்கான வேலைகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் நாளை இதற்கான பந்தல் கால் நடும் விழா நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கட்சி தலைவர் விஜய் கலந்துக்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பந்தல் கால் நடும் விழா நாளை காலை 4 மணி முதல் 6 மணிக்கும் நடக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. பந்தல் கால் நடும் விழா முடிந்ததும் மாநாடிற்கான பிரம்மாண்ட பந்தல் அமைக்கும் பணிகள் தொடங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கட்சியின் முதல் மாநாடு என்பதால் இந்த மாநாட்டில் கட்சி கொடிக்கான அர்த்தம் என்ன, கட்சியில் கொள்கை என்ன என்பது குறித்து விஜய் விளக்கமளிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஏனெனில் கட்சி கொடி தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் நிலவி வரும் நிலையில் அதற்கான விளக்கம் அளிக்கப்படும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியின் யானை உருவம் இடம்பெற்றது குறித்து தேர்தல் ஆணையத்தில் பகுஜன் சமாஜ் கட்சி புகார் அளித்தது. அதாவது, தவெக கொடியில் யானை உருவம் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சி புகார் அளித்தது. ஆனால் இந்த கட்சி கொடி விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிடாது என தெரிவித்துள்ளது. ” ஒரு கட்சிக்கு கொடி இருக்கிறது என்றால் அந்த கட்சி தான் பொறுப்பு. மற்ற கட்சிகளின் சின்னத்தை விதிமீறாமல் இருக்க வேண்டும். இந்த கட்சி கொடியானது வேறு எந்த கட்சி கொடி போன்று இல்லை. இலச்சினைகள் மற்றும் பெயர்கள் (முறையற்ற பயன்பாடு தடுப்பு) சட்டம், 1950 அல்லது இந்தியாவின் கொடி குறியீடு அல்லது தலைப்பு தொடர்பான பிற தொடர்புடைய சட்டத்தின் விதிகளை தமிழக வெற்றிக் கழக கட்சி மீறவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

நீங்கள் ஒரு விஷயத்தில் வெற்றி பெறாமல் இருக்க காரணம்!
உலகின் பாரம்பரியமான சந்தைகள் பற்றி தெரிஞ்சுகோங்க!
சரும வறட்சிக்கு சிகிச்சை அளிக்கும் கற்றாழை ஜெல்..!
மனித உடலில் உள்ள இரத்தம் ஏன் உப்பாக இருக்கிறது..?