5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

TVK Vijay: பொது மக்கள் பிரச்சனைக்காக குரல் கொடுக்கும் தலைவர் விஜய்.. மாநாட்டில் இன்று பேசப்போவது என்ன?

மேலும் 2026 ஆம் ஆண்டு வரும் சட்டமன்ற தேர்தல் தான் இலக்கு என்றும் அதற்கான பயணத்தை படிபடியாக தொடங்கப்படும் என்றும் அறிவித்தார். அரசியல் கட்சி தொடங்கும் முன்னதாகவே கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை சந்தித்து சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கினார். இது மிகப்பெரிய அளவு பேசப்பட்டது. கட்சி தொடங்கியது முதல் பல்வேறு பொது மக்கள் பிரச்சனைக்கு குரல் கொடுத்து வருகிறார்.

TVK Vijay: பொது மக்கள் பிரச்சனைக்காக குரல் கொடுக்கும் தலைவர் விஜய்.. மாநாட்டில் இன்று பேசப்போவது என்ன?
தவெக தலைவர் விஜய்
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Updated On: 27 Oct 2024 10:24 AM

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு இன்று விழுப்புரம் மாவட்டம் வி.சாலையில் நடைபெற உள்ளது. மாலை 4.30 மணியளவில் தொடங்கும் மாநாடு 9 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நேற்று முடிவடைந்தது. தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த உச்ச நட்சத்திரம் நடிகர் விஜய் அரசியலில் காலடி எடுத்து வைப்பார் என பல வருடங்களாக கருத்து பரவி வந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் அதற்கான அறிவிப்பு வெளியானது. அதாவது நடிகராக இருந்து வரும் விஜய், தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கினார். அரசியல் அறிவிப்புடன் ஒரு பெரிய அறிவிப்பையும் வெளியிட்டார். அதாவது, இனிமேல் படத்தில் நடிக்க மாட்டேன் என தெரிவித்திருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் 2026 ஆம் ஆண்டு வரும் சட்டமன்ற தேர்தல் தான் இலக்கு என்றும் அதற்கான பயணத்தை படிபடியாக தொடங்கப்படும் என்றும் அறிவித்தார். அரசியல் கட்சி தொடங்கும் முன்னதாகவே கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை சந்தித்து சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கினார். இது மிகப்பெரிய அளவு பேசப்பட்டது. கட்சி தொடங்கியது முதல் பல்வேறு பொது மக்கள் பிரச்சனைக்கு குரல் கொடுத்து வருகிறார்.

Also Read: மாநாட்டிற்கு வரும் மக்கள் கவனத்திற்கு.. ஏக்கர் கணக்கில் ஒதுக்கப்பட்ட 4 பார்க்கிங் கூடாரங்கள்..

பொதுமக்கள் பிரச்சனைக்கு குரல் கொடுக்கும் தலைவர் விஜய்:

கட்சி தொடங்கியதுமே குடியுரிமை திருத்த சட்டம் குறித்து அறிக்கை வெளியிட்டார். அதாவது குடியுரிமை திருத்த சட்டம் தமிழ்நாட்டில் அமல்படுத்தாமல் இருக்க தமிழக அரசியல் கட்சிகள் உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்தார். இதன் மூலம் அவர் பாஜகவிற்கு எதிராக களமிறங்குகிறார் என்ற கோணத்தில் பேசப்பட்டத்து. அதனை தொடர்ந்து கள்ளக்குறிசிச்சியில் விஷ சாராயம் அருந்து 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இதன் மூலம் அரசியலில் வலுவான இடத்தை பிடிக்கத்தொடங்கினார் விஜய்.

மேலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பரிசளித்த விஜய் மாணவர்கள் அரசியல் பழக வேண்டும் என பேசினார். சென்னையில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியின் போது உயிரிழப்புகள் ஏற்பட்ட நிலையில், பொது மக்கள் பாதுகாப்பில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்தார்.

Also Read: நடிகர் முதல் அரசியல் கட்சி தலைவர் வரை.. விஜய் கடந்து வந்த பாதை ஓர் அலசல்..

வலுவான அரசியல் களத்தில் விஜய்:

இப்படி பொது மக்கள் பிரச்சனைக்காக பேசி வரும் விஜய், தேர்தல் ஆணையத்தில் தனது கட்சியின் பெயரை பதிவு செய்து அங்கீகாரம் பெற்றார். அதனை தொடர்ந்து கட்சி கொடி அறிமுகம் செய்தார். அதில் யானைகள் பயன்படுத்தப்பட்ட நிலையில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டத்து. பின்னர் கட்சியின் முதல் மாநாடு அறிவிக்கப்பட்டது. முதலில் மதுரையை தேர்வு செய்த நிலையில் அனுமதி கிடைக்காத நிலையில், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதற்கான ஏற்பாடுகள் பொதுச் செயலாளர் ஆனந்த் தலைமையில் நடைபெற்றது.

விழாக்கோலம் பூண்ட விக்கிரவாண்டி:

மாநாட்டிற்காக பிரத்யேக குழு அமைக்கப்பட்டது. இந்த குழு தான் மொத்த மாநாட்டையே நடத்துவதாக சொல்லப்படுகிறது. மேலும் கட்சி சார்பில் 27 குழுக்கள் அமைக்கப்பட்டது. இப்படி ஒவ்வொரு நிகழ்வுகளை பார்த்து பார்த்து இஞ்ச் பை இஞ்சாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மொத்த அரசியல் களமுமே விஜய் நோக்கி திரும்பியுள்ளது. பலரும் இந்த மாநாட்டிற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த மாநாட்டில் தான் விஜய் தனது கட்சியின் கொள்கை மற்றும் கொடியில் இருக்கும் யானை வாகை மலர் பற்றி பேசுவார் என எதிர்ப்பர்க்கப்படுகிறது.

Latest News