TVK Vijay: ”யாருக்கும் பாதுகாப்பு இல்லை” மருத்துவருக்கு கத்திக்குத்து.. கொதித்தெழுந்த விஜய்!

Chennai Doctor Attack : சென்னையில் மருத்துவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்று கடுமையாக சாடியுள்ளார். மேலும், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

TVK Vijay: ”யாருக்கும் பாதுகாப்பு இல்லை” மருத்துவருக்கு கத்திக்குத்து..  கொதித்தெழுந்த விஜய்!

விஜய்

Updated On: 

13 Nov 2024 19:00 PM

சென்னையில் மருத்துவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்று கடுமையாக சாடியுள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள விஜய், “தமிழ்நாட்டில் பட்டப் பகலில் அரங்கேறும் குற்றச் செயல்கள் சட்டம் ஒழுங்கின் சீர்கேட்டையே காட்டுகிறது என்று எங்கள் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் வாயிலாகக் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், அரசு ஊழியர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என யாருக்கும் பாதுகாப்பு இல்லாத ஆட்சியாக இந்த ஆட்சி உள்ளது என்பது தினம் தினம் நிகழும் குற்றச் செயல்களால் நிரூபணமாகிறது.

த.வெ.க தலைவர் விஜய் கண்டனம்

சென்னை கிண்டியில் உள்ள உயர் சிறப்பு அரசு மருத்துவமனையில், புற்றுநோய் மருத்துவர் திரு. பாலாஜி அவர்கள் இன்று கத்தியால் குத்தப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.   உயிர்காக்கும் சிகிச்சை அளிக்கும் இது போன்ற அரசு உயர் சிறப்பு மருத்துவமனையில், அரசு மருத்துவரின் உயிருக்கே பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டு இருப்பதற்குத் தமிழக அரசின் மெத்தனப் போக்கே காரணம்.

கத்திக் குத்தில் படுகாயம் அடைந்த மருத்துவர் திரு. பாலாஜி அவர்கள், விரைவில் பூரண குணமடைய பிரார்த்திக்கிறேன்.  காலம் நேரம் பார்க்காது கடுமையாக உழைக்கும் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் சட்டப்பூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு முன்னெடுக்க வேண்டும்.

Also Read : மருத்துவருக்கு 7 முறை கத்திக்குத்து.. சொட்ட சொட்ட ரத்தம்.. அரசு மருத்துவமனையில் நடந்த திக்திக் சம்பவம்!

குவியும் கண்டனங்கள்

தமிழ்நாட்டில் தினந்தோறும் நிகழும் பல்வேறு குற்ற நிகழ்வுகள், பொதுமக்களிடையே அச்சத்தை உருவாக்கியுள்ளன.   சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய ஆட்சியாளர்கள் இனியாவது விழித்துக்கொண்டு மக்களைப் பாதுகாக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று கூறியுள்ளார். 

மேலும், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுள்ளதாக சாடியுள்ளார்கள்.

இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின் இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுத்திடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும் என்றும் முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.

மருத்துவமனையில் நடந்தது என்ன?

சென்னை பெருங்களத்தூரைத் சேர்ந்த காஞ்சனா என்ற பெண் கிண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த பெண்ணுக்கு புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த சில மாதங்களாக அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். அந்த பெண்ணுக்கு விக்னேஷ் என்ற 26 வயதான மகன் உள்ளார். அவர் தனது தாயரை அருகில் இருந்து கவனித்து வந்துள்ளார்.

இதுவரை விக்னேஷ் தாய்க்கு ஆறு முறை கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டது. தாய் காஞ்சனா மருத்துவமனைக்கு வரும்போதே புற்றுநோய் முற்றி இருந்ததாகவும், இதனால் கீமோ கொடுக்கப்பட்டதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே, கீமோ கொடுக்கப்பட்ட பிறகும் நுரையீரல் வரை புற்றுநோய் பரவியது.

Also Read : கத்தியால் குத்தப்பட்ட மருத்துவர்.. உடல்நிலை எப்படி இருக்கு? வெளியான வீடியோ

இதனால் அவரது தாயாருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கவில்லை என்ற ஆதங்கம் இருந்துள்ளதாக தெரிகிறது. அந்த ஆத்திரத்தில் அவர் இருந்துள்ளார். இந்த நிலையில் இன்று கிண்டி மருத்துவமனைக்கு வந்த விக்னேஷ், மருத்துவர் பாலாஜியின் அறைக்கு சென்று கத்தியால் குத்தி தாக்கியுள்ளார்.

இதனை அடுத்து அங்கிருந்த தப்பயோட முயன்ற விக்னேஷை போலீசார் கைது செய்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த  மருத்துவர் பாலாஜிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஐபிஎல் மெகா ஏலம் எப்போது, ​​எங்கு நடைபெறுகிறது?
ராஷ்மிகாவிற்கு புஷ்பா 2 படத்தில் சம்பளம் இவ்வளவா?
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி... யார் தெரியுதா?
மலச்சிக்கல் பிரச்னையை தடுக்க டிப்ஸ்