Vikravandi By Election: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.. யாருக்கு ஆதரவு? த.வெ.க தலைவர் விஜய் அறிவிப்பு - Tamil News | | TV9 Tamil

Vikravandi By Election: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.. யாருக்கு ஆதரவு? த.வெ.க தலைவர் விஜய் அறிவிப்பு

Updated On: 

25 Jun 2024 09:37 AM

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.  அதாவது, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.  இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், " வருகிற ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது என்றும், எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

Vikravandi By Election: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.. யாருக்கு  ஆதரவு? த.வெ.க தலைவர் விஜய் அறிவிப்பு

விஜய்

Follow Us On

த.வெ.க தலைவர் விஜய் அறிவிப்பு: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.  அதாவது, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.  இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகத் தலைவர். தளபதி விஜய் அவர்கள், கடந்த பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி வெளியிட்ட கட்சித் தொடக்க அறிவிப்பிற்கான முதல் அறிக்கையிலேயே, எங்கள் கழகத்தின் அரசியல் நிலைப்பாடு குறித்துத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். கழகத் தலைவர் அவர்கள், விரைவில் கழகத்தின் கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் செயல்திட்டங்களைத் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் வெளியிட்டு, அதன் தொடர்ச்சியாகக் கழக உள்கட்டமைப்பு சார்ந்த பணிகள். தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்புப் பயணங்கள் என்று, வரும் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு, தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று. மக்கள் பணியாற்றுவது தான் நமது பிரதான இலக்கு என்று ஏற்கெனவே தெரிவித்துள்ளார்.

Also Read: எருமை மாடு முட்டி இளம்பெண் படுகாயம்.. 500 மீட்டருக்கு தரதரவென இழுத்து சென்ற கொடூரம்.. பதற வைக்கும் காட்சிகள்!

எனவே, அதுவரை இடைப்பட்ட காலத்தில் நடத்தப்படும் உள்ளாட்சித் தேர்தல் உள்பட எந்தத் தேர்தலிலும் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். குறிப்பாக, வருகிற ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது என்றும், எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்:

விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இதனால், விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து, விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. அதன்படி, திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிக்கப்பட்டார். நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் அபிநயா அறிவிக்கப்பட்டுள்ளார். பாஜக கூட்டணியில் பாமக வேட்பாளராக சி.அன்புமணி அறிவிக்கப்பட்டுள்ளார்.  பிரதான எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் அதன் கூட்டணியில் உள்ள தேமுதிக ஆகிய கட்சிகள் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. இதற்கிடையில், வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் கடந்த 14ஆம் தேதி தொடங்கப்பட்ட நிலையில், வரும் 21ஆம் தேதி முடிவடைகிறது.

Also Read: மூட நம்பிக்கையால் நேர்ந்த சோகம்: பிறந்து ஒரு மாதமே ஆன ஆண் குழந்தையை கொன்ற தாத்தா.. அரியலூரை உளுக்கிய சம்பவம்..

டிஆர்பியில் டாப் 10 இடம் பிடித்த சீரியல்கள் லிஸ்ட்!
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி...
உலகில் இயற்கையாகவே வண்ணங்களால் நிறைந்த இடங்கள்!
காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் சிக்கல்கள்...
Exit mobile version