5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

களத்தில் விஜய்.. மாணவர்களுக்கு பரிசளிக்கும் த.வெ.க தலைவர்!

விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பின்பு முதல் முறையாக மாணவ, மாணவிகளை சந்திக்க உள்ளார். இந்த முறையும் சட்டமன்ற தொகுதி வாரியாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களை தேர்ந்து எடுத்து உதவித்தொகைகளை வழங்க உள்ளார் விஜய். 234 சட்டமன்ற தொகுதிகளிலும் இரண்டு கட்டமாக வழங்க உதவித்தொகைகளை வழங்க உள்ளார். சென்னை, திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் பாராட்டு விழா நடக்கிறது.

களத்தில் விஜய்.. மாணவர்களுக்கு பரிசளிக்கும் த.வெ.க தலைவர்!
விஜய்
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 25 Jun 2024 09:37 AM

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான விஜய் கடந்த பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற புதிய கட்சியை தொடங்கி, தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதும் கட்சியின் கொடி, சின்னம் அறிவிக்கப்படும் என்று அவர் அறிவித்து இருந்தார். மேலும், தேர்தல் ஆணையத்திலும் தனது கட்சியை பதிவு செய்துள்ள விஜய் வரும் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் தான் தனக்கு இலக்கு என்றும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், அரசியல் கட்சி தொடங்கிய பின்பு முதல் முறையாக மாணவ, மாணவிகளை விஜய் சந்திக்க உள்ளார். இந்த முறையும் சட்டமன்ற தொகுதி வாரியாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களை தேர்ந்து எடுத்து உதவித்தொகைகளை வழங்க உள்ளார் விஜய். மேலும், அந்த மாணவர்களோடு பெற்றோர் இல்லாமல் படித்து நல்ல மதிப்பெண்கள் எடுத்து மாணவர்களுக்கும் உதவித்தொகை வழங்க உள்ளதாக தெரிகிறது.

Also Read: இன்று கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்கள்.. வானிலை மையம் அலர்ட்!

இதுகுறித்து வெளியான அறிவிப்பில், “தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் “தளபதி விஜய்” அவர்கள், 2024ஆம் ஆண்டு நடந்து முடிந்த “10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம்” வகுப்புப் பொதுத் தேர்வில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள, தொகுதி வாரியாகச் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளைத் “தமிழக வெற்றிக் கழகம்” சார்பாகப் பாராட்ட உள்ளார். முதற்கட்டமாக 28-06-2024 வெள்ளிக்கிழமை அன்று, சென்னை, திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் பாராட்டு விழா நடக்கிறது. இதில் அரியலூர், கோயம்புத்தூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, இராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பாராட்டப் பெறுகிறார்கள்.

அதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக 03-07-2024 புதன்கிழமை அன்று செங்கல்பட்டு, சென்னை, கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், காரைக்கால், மயிலாடுதுறை, நாகப்பட்டினம். பெரம்பலூர், புதுச்சேரி, ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், திருப்பத்தூர், திருச்சி, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பாராட்டப் பெறுகிறார்கள். தளபதி விஜய்” அவர்கள். மாணவர்களுக்கு அவர்களின் பெற்றோர்கள் முன்னிலையில் சான்றிதழும் ஊக்கத்தொகையும் வழங்கிக் கௌரவிக்க உள்ளார் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்பு, கடந்த ஆண்டு ஜூன் 17ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களை சந்தித்து ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களை நேரில் சந்தித்து தன் கைப்பட அவர்களுக்கு உதவித்தொகை வழங்கினார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

Also Read: முடிந்தது கோடை விடுமுறை… தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு!

Latest News