5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

TVK Vijay Meeting: இன்னும் 4 நாட்கள் தான்.. த.வெ.க மாநாட்டில் விஜய் பேசப்போவது என்ன? வெளியான முக்கிய தகவல்..

மாநாட்டுக்காண பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் கடந்த அக்டோபர் முதல் வாரம் பூமிபூஜை நடத்தப்பட்டது. அப்போது கூடிய தொண்டர்கள் கூட்டம் மாநாட்டு மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. மாநாடு தொடர்பாக தொண்டர்களுக்கு விஜய் 2 முறை கடிதம் எழுதியுள்ளார். கண்ணியமாக மாநாட்டை நடத்த வேண்டும், அனைவரின் பாதுகாப்பும் மிக முக்கியம், மற்ற அரசியல் கட்சியினருக்கும் நாம் யாரென்று காட்ட வேண்டும் என்ற ரீதியில் அவர் எழுதியுள்ள கடிதமும் மிகுந்த பாராட்டைப் பெற்றுள்ளது.

TVK Vijay Meeting: இன்னும் 4 நாட்கள் தான்.. த.வெ.க மாநாட்டில் விஜய் பேசப்போவது என்ன? வெளியான முக்கிய தகவல்..
கோப்பு புகைப்படம்
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Published: 23 Oct 2024 11:08 AM

இன்னும் 4 நாட்களில் விக்கிரவாண்டியில் த.வெ.க கட்சியின் முதல் மாநாடு நடைபெற உள்ளது. அதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. தமிழ் சினிமாவின் டாப் நடிகரான விஜய் பிப்ரவரி மாதம் கட்சி தொடங்குவதாக அறிவிப்பு வெளியிட்டார். கட்சி அறிவிப்பு வெளியானது முதல் பொதுமக்கள் பிரச்சனைக்கு குரல் கொடுத்து வருகிறார். குறிப்பாக கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்டார். அதனை தொடர்ந்து கட்சி கொடி கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. பின்னர் கட்சிகளுக்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்னும் 4 நாட்களில் த.வெ.க கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டி வி. சாலையில் நடைபெற உள்ளது. அதற்கான அனுமதியும் பெறப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டுக்காண பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் கடந்த அக்டோபர் முதல் வாரம் பூமிபூஜை நடத்தப்பட்டது. அப்போது கூடிய தொண்டர்கள் கூட்டம் மாநாட்டு மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. மாநாடு தொடர்பாக தொண்டர்களுக்கு விஜய் 2 முறை கடிதம் எழுதியுள்ளார். கண்ணியமாக மாநாட்டை நடத்த வேண்டும், அனைவரின் பாதுகாப்பும் மிக முக்கியம், மற்ற அரசியல் கட்சியினருக்கும் நாம் யாரென்று காட்ட வேண்டும் என்ற ரீதியில் அவர் எழுதியுள்ள கடிதமும் மிகுந்த பாராட்டைப் பெற்றுள்ளது.

இதற்கிடையில் மாநாடு பணிகளுக்காக 27 குழுக்கள் அமைக்கப்பட்டு அறிவிப்பு வெளியானது. மேலும், இண்ட மாநாடு தொடர்பான கடிதத்தில், “நம் கழகத்தின் முதல் மாநில மாநாடு என்பது நம்முடைய அரசியல் கொள்கைப் பிரகடன மாநாடு. மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தொடங்கி, மாநாட்டில் பங்கேற்பது வரை நம் கழகத்தினர் ராணுவக் கட்டுப்பாட்டுடன் இயங்குவர் என்பதை இந்த நாடும் நாட்டு மக்களும் உணர வேண்டும்.நம் கழகம், மற்ற அரசியல் கட்சிகள் போல் சாதாரண இயக்கமன்று. இது ஆற்றல் மிக்கப் பெரும்படை. இளஞ்சிங்கப் படை. சிங்கப் பெண்கள் படை. குடும்பங்கள் இணைந்த கூட்டுப் பெரும்படை” என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அது போக, ” கழகத் தோழர்கள் எல்லோரையும் போலவே கர்ப்பிணிப் பெண்கள், பள்ளிச் சிறுவர் சிறுமியர். நீண்ட காலமாக உடல்நலமின்றி இருப்பவர்கள், முதியவர்கள் பலரும் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து நம் மாநாட்டுக்கு வரத் திட்டமிட்டு இருப்பர். அவர்களின் அந்த ஆவலை நான் மிகவும் மதிக்கிறேன். உங்கள் எல்லோருடனும் அவர்களையும் மாநாட்டில் காண வேண்டும் என்ற ஆவல்தான் எனக்கும் இருக்கிறது.

மேலும் படிக்க: ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை.. மீண்டும் புதிய உச்சம் தொட்டதால் வேதனையில் மக்கள்..!

ஆனால், எல்லாவற்றையும்விட அவர்களின் நலனே எனக்கு மிக மிக முக்கியம். மாநாட்டிற்காக அவர்கள் மேற்கொள்ளும் நீண்ட தூரப் பயணம், அவர்களுக்கு உடல்ரீதியாகச் சிரமத்தை ஏற்படுத்தக் கூடும். அதனால், அவர்கள் இவ்வளவு தூரம் சிரமப்பட்டு வர வேண்டாம் என்றே அவர்களின் குடும்ப உறவாகவும் இருக்கும் உரிமையில் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். ஊடக மற்றும் சமூக ஊடகள் வழியாக, தங்கள் வீடுகளில் இருந்தே நமது வெற்றிக் கொள்கைத் திருவிழாவில் கலந்து கொள்ளலாம் என்றும் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

மாநாட்டுக்கு வருகின்ற மற்ற அனைவரும், மாநாட்டுக்கு வந்து செல்லும்போது, பாதுகாப்புடன் பயணிப்பது மிக மிக முக்கியம். அதேபோல, பயண வழிகளில் அரசியல் ஒழுங்கையும் நெறிமுறைகளையும் போக்குவரத்து விதிமுறைகளையும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்” என த.வெ.க தலைவர் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் படிக்க: தீபாவளி சிறப்பு ரயில்கள் டிக்கெட் முன்பதிவு.. நிமிடங்களில் காலியான டிக்கெட்டால் அதிர்ச்சியில் மக்கள்..

27 ஆம் தேதி நடைபெறும் மாநாட்டிற்காக அனைத்து கட்சிகளும் மிகவும் எதிர்ப்பார்த்து இருக்கின்றனர். இந்த மாநாட்டில் த.வெ.க கட்சியின் கொள்கை கோட்பாடுகள் குறித்தும், கட்சி கொடியில் இருக்கும் யானை மற்றும் வாகை மலர் குறித்தும் தெளிவுப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் 2 மணி நேரம் பேச உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. மாலை 6 மணி அளவில் விஜய் பேச தொடங்குவார் என கூறப்படுகிறது. இந்த உரை முழுக்க முழுக்க தன் கட்சியின் கொள்கையைப் பிரகடனப்படுத்தும் வகையில் அவரின் பேச்சு அமைய இருக்கிறது என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Latest News