5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

TVK Vijay Meeting: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு.. 700 சிசிடிவி கேமிராக்கள், 1500 எல்.ஈ.டி விளக்குகள்.. எங்கே ? எப்போது? முழு விவரம்..

இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகளை செய்ய தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. 700 CCTV கேமராக்கள், 15,000 LED விளக்குகள் மற்றும் உயர் தொழில்நுட்ப ஒலி அமைப்பு ஆகியவற்றை நிறுவியுள்ளது. 1,000 க்கும் மேற்பட்ட நிபுணர்களால் பணிபுரியும் மருத்துவ கியோஸ்க்குகள் அரங்கம் முழுவதும் நிறுத்தப்படும், ரசிகர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும், கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும் தடுப்புகள் அமைக்கப்பட உள்ளது.

TVK Vijay Meeting: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு.. 700 சிசிடிவி கேமிராக்கள், 1500 எல்.ஈ.டி விளக்குகள்.. எங்கே ? எப்போது? முழு விவரம்..
கோப்பு புகைப்படம்
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Updated On: 24 Oct 2024 14:10 PM

அனைவரும் மிகவும் எதிர்ப்பார்க்கும் த.வெ.க கட்சியின் முதல் மாநாடு இன்னும் 3 நாட்களில் நடைபெற உள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 27, 2024 அன்று கட்சியின் தொடக்க மாநாடு நடைபெறவுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (டிவிகே) தலைவராக நடிகர் விஜய் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அரசியல் அறிமுகத்திற்கான மேடை அமைக்கப்பட்டுள்ளது. நடிகர் தளபதி விஜய் புதிதாக தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (டிவிகே) முதல் அரசியல் மாநாட்டிற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அவரது திரைப்பட வெளியீடுகளின் போது காணப்பட்ட பிரமாண்டமான கொண்டாட்டங்களைப் போலவே, இந்த நிகழ்வு ஆடம்பரமாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்த மாநாட்டில், ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களை வருகை தருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகளை செய்ய தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. 700 CCTV கேமராக்கள், 15,000 LED விளக்குகள் மற்றும் உயர் தொழில்நுட்ப ஒலி அமைப்பு ஆகியவற்றை நிறுவியுள்ளது. 1,000 க்கும் மேற்பட்ட நிபுணர்களால் பணிபுரியும் மருத்துவ கியோஸ்க்குகள் அரங்கம் முழுவதும் நிறுத்தப்படும், ரசிகர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும், கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும் தடுப்புகள் அமைக்கப்பட உள்ளது. இந்த பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில் 22 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை அப்பகுதியில் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

த.வெ.க மாநாடு அக்டோபர் 27, ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்குத் தொடங்க உள்ளது. அதில் கட்சி தலைவர் விஜய் மாலை 6 மணிக்கு மேடையில் ஏறி இரவு 8 மணி வரை கூட்டத்தில் உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக விஜய் மற்றும் அவரது கட்சி தனது சித்தாந்தத்தை வெளிப்படுத்தவும், அதன் பலத்தை வெளிப்படுத்தவும் இந்த நிகழ்வு ஒரு முக்கிய தருணமாக கருதப்படுகிறது.

மேலும் படிக்க: ஜெர்மனியில் செவிலியர் வேலை.. அரசு தரும் இலவச மொழி பயிற்சி.. விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

தமிழகத்தின் திராவிடக் கட்சிகளைச் சேர்ந்த பல முக்கிய அரசியல் பிரமுகர்கள், முன்னாள் காங்கிரஸ் மற்றும் திமுக தலைவர்கள், பல திரையுலக நட்சத்திரங்கள் கலந்து கொள்வதாக வெளியாகும் தகவல்கள், இந்த நிகழ்வைச் சுற்றியுள்ள உற்சாகத்தை மேலும் கூட்டுகிறது. அரசியல் நிகழ்வில் நடிகர் விஷால் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நெடுஞ்சாலைக்கும் ரயில் பாதைக்கும் இடையே 170 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கும் இந்த மைதானம், தலைவர்களான பெரியார் ஈ.வி.ராமசாமி, கே.காமராஜ், பி.ஆர்.அம்பேத்கர் மற்றும் விஜய் ஆகியோரின் பிரமாண்ட கட்-அவுட்களுடன் அரசியல் களமாக மாற்றப்படுகிறது. இந்த உயர்ந்த உருவங்கள் TVK இன் திராவிடக் கொள்கைகளுடன் இணைந்திருப்பதையும் தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கான அதன் தொலைநோக்குப் பார்வையையும் அடையாளப்படுத்துகின்றன.

மேலும் படிக்க: கோவிட்-க்கு பிறகு அக்டோபரில் கடுமையாக சரிந்த இந்திய பங்குச்சந்தை.. தரவுகள் கூறுவதுன் என்ன?

விஜய்யின் வருகைக்காக, பிரத்யேகமாக 1.5 கிமீ பாதை தயார் செய்யப்பட்டுள்ளது, இதனால் கூட்டம் அலைமோதாமல் தவிர்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரமாண்டமான மேடை அமைப்பது முதல் 2-3 லட்சம் பேர் பங்கேற்பவர்களுக்கு இருக்கைகள் வழங்குவது வரை அனைத்தும் தயார் நிலையில் இருப்பதை உறுதிசெய்வதற்காக கட்சி நிர்வாகிகள் ஈடுபட்டுள்ள நிலையில் கடைசி நிமிட ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மாநிலத்தின் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற கட்சியின் அபிலாஷையின் அடையாளமாக, வரலாற்றுச் சிறப்புமிக்க செயின்ட் ஜார்ஜ் கோட்டை மாதிரியாக மேடைப் பின்னணி அமைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

மாநாட்டிற்கு முன்னதாக, விஜய் தனது ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கினார்: இடத்தில் மது அருந்தக்கூடாது, போக்குவரத்து விதிகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும், பாதுகாப்பு காரணங்களுக்காக குழந்தைகள், முதியவர்கள் மற்றும் கர்ப்பிணிகள் கலந்து கொள்வதை தவிர்க்க வேண்டும் என பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

 

Latest News