TVK Meeting: தள்ளிப்போகிறதா விஜய்யின் த.வெ.க மாநாடு.. மீண்டும் ஒரு புதிய சிக்கல்..
2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு தனது ஒவ்வொரு நகர்வையும் எடுத்து வருகிறார். அந்த வகையில் கடந்த மாதம் விஜய் கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தினார். இந்த கொடி மிகப்பெரிய அளவில் விமர்சனங்களை பெற்றது. சமீபத்தில் கூட, அண்ணா பிறந்தநாளுக்கு வாழ்த்து, பெரியார் பிறந்தநாளுக்கு அவரது சிலைக்கு மரியாதை செலுத்தியது திராவிட சித்தாந்தத்தை கையில் எடுப்பதை உறுதிப்படுத்தி உள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் மாநாடு வரும் அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. முதலில் இந்த மாநாடு முதலில் 23 ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில் 27 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருந்து தற்போது அரசியல் தலைவராக அவதாரம் எடுத்திருக்கிறார் விஜய். கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை குறித்து வைத்து தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியைத் தொடங்கி இருக்கிறார். அரசியல் கட்சி தொடங்கிய பிறகு சமூக பிரச்னைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.
மேலும், 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு தனது ஒவ்வொரு நகர்வையும் எடுத்து வருகிறார். அந்த வகையில் கடந்த மாதம் விஜய் கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தினார். இந்த கொடி மிகப்பெரிய அளவில் விமர்சனங்களை பெற்றது. சமீபத்தில் கூட, அண்ணா பிறந்தநாளுக்கு வாழ்த்து, பெரியார் பிறந்தநாளுக்கு அவரது சிலைக்கு மரியாதை செலுத்தியது திராவிட சித்தாந்தத்தை கையில் எடுப்பதை உறுதிப்படுத்தி உள்ளார்.
இதன் மூலம், விஜய் என்ன மாதிரியான அரசியலை நோக்கி பயணிக்கப்போகிறார் என்பதை தெளிவுப்படுத்தியுள்ளார். இதற்கிடையில், தமிழக வெற்றிக் கழகத்தில் முதல் அரசியல் மாநாட்டை நடத்தி திட்டமிட்டிருந்த விஜய், இதற்கான பணியிகளை கட்சி பொதுச் செயலாளர் பூஸ்ஸி ஆனந்திடம் ஒப்படைத்தார். மாநாடு நடத்துவதற்கு பல்வேறு இடங்களை ஆய்வு செய்ததில் கடைசியாக விக்கிரவாண்டி தேர்வு செய்யப்பட்டது.
மேலும் படிக்க: நான் தனுஷின் ‘இட்லி கடை’ படத்தில் நடிக்கிறேனா? அசேக் செல்வன் விளக்கம்
சென்னை, திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சாலை என்ற இடத்தில் 85 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலம் தேர்வு செய்யப்பட்டு, கடந்த செப்டம்பர் 23ஆம் தேதி காவல்துறையிடம் அனுமதி கோரி மனுவும் கொடுக்கப்பட்டிருந்தது. இவர்களின் மனுவிற்கு காவல்துறையினர் த.வெ.க மாநாடு நடத்துவது தொடர்பாக பல்வேறு கேள்விகள் கேட்டு த.வெ.க கட்சிக்கு கடிதம் எழுதினர். இதற்கான பதில் கடிதமும் அளிக்கப்பட்டு மாநாட்டுக்கான ஒப்புதலை காவல்துறை வழங்கியது.
இதனிடையே வரும் அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழக மாநாடு நடத்தப்படும் என விஜய் அதிகாரப்பூர்வ அறிவித்திருந்தார். இந்ந நிலையில், அக்டோபர் 27ஆம் தேதி விக்கிவாண்டியில் மாநாடு நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று புஸ்ஸி ஆனந்த் விழுப்புரம் எஸ்பியிடம் மனு அளித்துள்ளார்.
மேலும் படிக்க: அப்படி போடு.. மாணவர்களுக்கு குஷியான நியூஸ்.. காலாண்டு விடுமுறை நீடிப்பு.. வெளியான அறிவிப்பு..
இதனிடையே மாநாட்டிற்கு வரும் நபர்களுக்கு அட்வைஸ் வழங்கப்பட்டுள்ளது.” மாநாட்டிற்கு வரும் பெண்கள் மற்றும பெண் காவலர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். மாநாட்டிற்கு வரும் அதிகாரிகளை மரியாதையாக நடத்த வேண்டும். மருத்துவக் குழு மற்றும் தீயணைப்பு துறைக்கு உரிய வசதிகள் செய்து தர வேண்டும். வண்டியில் வேகமாகவும் அல்லது சாகசங்கள் போன்றவற்றில் ஈடுபடக் கூடாது. பெரிய வாகனங்களில் மாநாட்டிற்கு வரும் தோழர்கள் முன்கூட்டியே வர திட்டமிடுங்கள். பேருந்து மற்றும் வேன்களில் தகுதி எண்ணிக்கையில் மட்டுமே தொண்டர்களை அமர வைக்க வேண்டும்” என்று அறிவுறுத்தியுள்ளார்.
இப்படி மாநாட்டிற்கு தேவையான் அனைத்து வேலைகளும் மும்மரமாக நடைபெற்று வரும் நிலையில், 27 ஆம் தேதி மாநாடு நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அக்டோபர் 30ஆம் தேதிக்கு தேவர் ஜெயந்திக்காக ராமநாதபுரத்திற்கு மூன்று நாட்கள் காவல்துறை பாதுகாப்பு பணிக்காக செல்ல இருக்கும் நிலையில் விக்கிரவாண்டியில் நடக்கும் மாநாட்டிற்கு காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட முடியாத சூழ்நிலை இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. போதிய பாதுகாப்பு இல்லாத காரணத்தால் இந்த மாநாடு தள்ளிப்போகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
எனவே, தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டிற்கான பாதுகாப்பு கோரி மனு அளித்து, நான்கு நாட்கள் ஆகியும் இதுவரை விழுப்புரம் மாவட்ட காவல் துறையிடமிருந்து எந்த பதிலும் பெறவில்லை என கூறப்படுகிறது. இதனால் மாநாடு தள்ளிப்போகும் என கூறப்படுகிறது.