TVK Vijay: “இவங்க வர வேண்டாம்” த.வெ.க மாநாடு.. தோழர்களுக்கு அன்பு கட்டளை போட்ட விஜய்! - Tamil News | TVK Vijay urges pregnant Children and old not to come to party conference to be held in Vikravandi | TV9 Tamil

TVK Vijay: “இவங்க வர வேண்டாம்” த.வெ.க மாநாடு.. தோழர்களுக்கு அன்பு கட்டளை போட்ட விஜய்!

த.வெ.க மாநாடு: தமிழக  வெற்றிக் கழக மாநாடு வரும் அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக தொகுதி வாரியாக பொறுப்பாளர்கள், குழுக்கள் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளர். இன்னும் மாநாட்டிற்கு ஒருவாரம் மட்டுமே இருக்கும் சூழலில்,  மாநாடு தொடர்பாக தொண்டர்களுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். 

TVK Vijay: இவங்க வர வேண்டாம் த.வெ.க மாநாடு.. தோழர்களுக்கு அன்பு கட்டளை போட்ட விஜய்!

த.வெ.க விஜய்

Updated On: 

25 Oct 2024 10:59 AM

தமிழக  வெற்றிக் கழக மாநாடு வரும் அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக தொகுதி வாரியாக பொறுப்பாளர்கள், குழுக்கள் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளர். இன்னும் மாநாட்டிற்கு ஒருவாரம் மட்டுமே இருப்பதால், அதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இப்படியான சூழலில்  மாநாடு தொடர்பாக தொண்டர்களுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.  அதில், “மாநாட்டுப் பணிகளுக்கான குழுக்களும் தொகுதிப் பொறுப்பாளர்கள் பட்டியலும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நம் முதல் மாநில மாநாடான வெற்றிக் கொள்கைத் திருவிழாவின் ஏற்பாடுகளில் நீங்கள் தீவிரமாக இருப்பதும் எனக்குத் தெரியும்.

தோழர்களுக்கு அன்பு கட்டளை போட்ட விஜய்

அரசியலை, வெற்றி-தோல்விகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அளவிடாமல், ஆழமான அக உணர்வாகவும், கொள்கைக் கொண்டாட்டமாகவும் அணுகப் போகும் நம்முடைய அந்தத் தருணங்கள், மாநாட்டில் மேலும் அழகுற அமையட்டும். அரசியல் களத்தில், வாய்மொழியில் வித்தை காட்டுவது நம் வேலை அன்று. நம்மைப் பொறுத்தவரை, செயல்மொழிதான் நமது அரசியலுக்கான தாய்மொழி.

மாநாட்டுக் களப்பணிகளில் மட்டுமல்லாமல், நம் ஒட்டுமொத்த அரசியல் களப்பணிகளிலும் நாம் அரசியல்மயப்படுத்தப்பட்டவர்கள் என்ற ஆழமான எண்ணத்தை மக்கள் மத்தியில் நீங்கள் உண்டாக்குவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

உற்சாகமும் உண்மையான உணர்வும் தவழும் உங்கள் முகங்களை மாநாட்டில் காணப் போகும் அந்தத் தருணங்களுக்காகவே, என் மனம் தவம் செய்து காத்துக் கிடக்கிறது. இதை நீங்களும் அறிவீர்கள் என்று எனக்குத் தெரியும்” என்று தெரிவித்துள்ளார்.

Also Read: புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் மழை பெய்யுமா? வானிலை மையம் தகவல்!

மேலும், ”இந்த நெகிழ்வான நேரத்தில், முக்கியமான ஒரு வேண்டுகோளை வைக்க விரும்புகிறேன். கழகத் தோழர்கள் எல்லோரையும் போலவே கர்ப்பிணிப் பெண்கள், பள்ளிச் சிறுவர் சிறுமியர், நீண்ட காலமாக உடல்நலமின்றி இருப்பவர்கள், முதியவர்கள் பலரும் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து நம் மாநாட்டுக்கு வரத் திட்டமிட்டு இருப்பர்.

அவர்களின் அந்த ஆவலை நான் மிகவும் மதிக்கிறேன். உங்கள் எல்லோருடனும் அவர்களையும் மாநாட்டில் காண வேண்டும் என்ற ஆவல்தான் எனக்கும் இருக்கிறது. ஆனால், எல்லாவற்றையும்விட அவர்களின் நலனே எனக்கு மிக மிக முக்கியம்.

”வாய்மொழியில் வித்தை காட்டுவது நம் வேலை அல்ல”

மாநாட்டிற்காக அவர்கள் மேற்கொள்ளும் நீண்ட தூரப் பயணம், அவர்களுக்கு உடல்ரீதியாகச் சிரமத்தை ஏற்படுத்தக் கூடும். அதனால், அவர்கள் இவ்வளவு தூரம் சிரமப்பட்டு வர வேண்டாம் என்றே அவர்களின் குடும்ப உறவாகவும் இருக்கும் உரிமையில் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

ஊடக மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக, தங்கள் வீடுகளில் இருந்தே நமது வெற்றிக் கொள்கைத் திருவிழாவில் கலந்து கொள்ளலாம் என்றும் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன். மாநாட்டுக்கு வருகின்ற மற்ற அனைவரும், மாநாட்டுக்கு வந்து செல்லும்போது, பாதுகாப்புடன் பயணிப்பது மிக மிக முக்கியம்” என்றார்.

இதற்கு காரணம்  மாநாடு நடத்துவதற்கு காவல்துறை சில நிபந்தனைகளை விதித்துள்ளது. அதாவது, கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு என தனி இடம் ஒதுக்குவது, குடிநீர், கழிவறை, பார்க்கிங் வசதி, ஆம்புலன்ஸ் உள்ளிட்ட என அத்தியாவசியம் இருக்க வேண்டும் என காவல்துறை தெரிவித்திருந்தது. அதோடு இல்லாமல்  மாநாது நடைபெறும் நாளில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளது.

Also Read: விஜய்க்கு மீண்டும் சிக்கலா? த.வெ.க கொடியில் யானை சின்னம்.. பகுஜன் சமாஜ் கட்சி எடுத்த திடீர் முடிவு!

இதனால் தான் த.வெ.க தலைவர் விஜய் குறிப்பிட்ட சிலரை வர வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார். மேலும், தனது அறிக்கையில் அவர் கூறியதாவத, ”அதேபோல, பயண வழிகளில் அரசியல் ஒழுங்கையும் நெறிமுறைகளையும் போக்குவரத்து விதிமுறைகளையும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.

நாம் எதைச் செய்தாலும், அதில் பொறுப்புணர்வுடன் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டையும் காப்போம் என்பதை உணர்த்துமாறு செயல்பட்டால் தான் நம் செயல்கள் மிக நேர்த்தியாக அமையும். அரசியலுக்கும் அது பொருந்தும்.

நாம் எப்போதும் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாகவே இருக்க வேண்டும்.  எந்நாளும் இதை ஒரு கட்டுப்பாட்டு விதியாகவே கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். வி.சாலை என்னும் விவேக சாலையில் சந்திப்போம்” என இவ்வாறு விஜய் குறிப்பிட்டிருந்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு வரும் அக்டோபர் 27ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வி சாலை கிராமத்தில் அக்டோபர் 27ஆம் தேதி மாலை 4 மணிக்கு மாநாடு தொடங்க உள்ளது. மாநாட்டிற்கு இன்றும் சில நாட்களே உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் சுமார் 50,000 பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பருவ வயது குழந்தைகளிடம் பெற்றோர் பேசவேண்டிய முக்கிய விஷயங்கள்!
குடும்ப உறவுகளுக்கு இடையே அன்பு அதிகரிக்க டிப்ஸ்!
வெறும் வயிற்றில் பால் குடிக்கலாமா?
தண்ணீர் குடிக்க வேண்டிய 5 முக்கியமான தருணங்கள்..!