Chennai Crime News : காற்றில் பரவிய விஷம்.. 2 குழந்தைகளின் உயிரை பறித்த எலி மருந்து.. சென்னையில் ஷாக்!
சென்னை குன்றத்தூரில் வீட்டில் எலித் தொல்லையை கட்டுப்படுத்த வைக்கப்பட்ட மருந்தால் 2 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் வைக்கப்பட்ட எலி மருந்தின் நெடி காற்றில் பரவியதால் முச்சுதிணறி 2 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
சென்னை குன்றத்தூரில் வீட்டில் எலித் தொல்லையை கட்டுப்படுத்த வைக்கப்பட்ட மருந்தால் 2 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் வைக்கப்பட்ட எலி மருந்தின் நெடி காற்றில் பரவியதால் முச்சுதிணறி 2 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். மேலும், நான்கு பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னை குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கிரிதரன் (34). இவரது மனைவி பவித்ரா (31). இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
2 குழந்தைகளின் உயிரை பறித்த எலி மருந்து
கிரிதரன் வங்கியில் மேனேஜராக பணியாற்றி வருகிறார். இவர்களது வீட்டில் எலி தொல்லை அதிமாக இருந்துள்ளதாக தெரிகிறது. இதனால் வீட்டில் அடிக்கடி எலி மருந்தை பயன்படுத்தி வந்துள்ளனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் அதிகமாக எலி நடமாட்டம் இருப்பதால் அதை கொல்ல எலி மருந்தை பயன்படுத்தி உள்ளார் பவித்ரா. இந்த எலி மருந்தை அதிகமாக வீட்டில் பயன்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த எலி மருந்தின் நெடி வீடு முழுவதும் பரவி உள்ளது. இதனை சுவாசித்த நான்கு பேருக்கும் முச்சுத் திணறல் ஏற்பட்டிருக்கிறது. இதனால் இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு பேருக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
Also Read : திமுகவில் அதிகார போட்டியா? உதயநிதி கூட்டத்தை புறக்கணித்த கனிமொழி.. துணை முதல்வர் விளக்கம்!
அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் சிகிச்சை பலனின்றி இரண்டு குழந்தை பரிதாபமாக உயிரிழந்தனர். 6 வயதான வைஷ்ணவி, ஒரு வயது குழந்தையான சாய் சுதர்சன் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும், கணவன் கிரிதரன், மனைவி பவித்ராவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் வைக்கப்பட்ட எலி மருநதின் நெடியால் 2 குழந்தைகள் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.