Covai: பூங்காவில் மின்சாரம் தாக்கி இரண்டு குழந்தைகள் பலி… கோவையில் ஏற்பட்ட சோகம்..!

Children Death: கோவை சின்னவேடம்பட்டி விமானப்படைக்கு சொந்தமான ராமன் விகார் என்ற குடியிருப்பு பூங்காவில் விளையாடி கொண்டிருந்த இரு குழந்தைகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Covai: பூங்காவில் மின்சாரம் தாக்கி இரண்டு குழந்தைகள் பலி... கோவையில் ஏற்பட்ட சோகம்..!

மின்சாரம் தாக்கி இருகுழந்தைகள் உயிரிழப்பு..!

Updated On: 

24 May 2024 14:57 PM

கோவை சரவணம்பட்டி துடியலூர் சாலையில் விமானப்படைக்கு சொந்தமான ராமன் விகார் என்ற குடியிருப்பு அமைந்துள்ளது.  இங்கு 400-க்கும் மேற்பட்ட  குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு  வசிக்கும் பெரும்பாலான குடும்பங்கள் அனைவரும் விமானப்படையில் பணிபுரிந்தவர்கள் மற்றும் பணி ஓய்வு பெற்றவர்கள். இங்கு வசிக்கும் பொதுமக்கள், அங்குள்ள பூங்காவில் தங்களது குழந்தைகளை விளையாட விடுவது வழக்கம். பெரியோர்களும் நடைபயிற்சி மேற்கொள்வர். இந்நிலையில் இங்கு குடியிருக்கும் பிரசாந்த் ரெட்டி என்பவரின் மகன் ஜியானஸ் ரெட்டி (4) மற்றும் பாலசுந்தர் என்பவரின் மகள் வியோமா ஆகியோர் அங்குள்ள சிறுவர் விளையாட்டு பூங்காவில் விளையாடச் சென்றுள்ளனர்.

Aslo Read: Cyclone Rimal : உருவாகும் ரிமல் புயல்.. வெளுக்கப்போகும் மழை.. தமிழ்நாடு நிலைமை என்ன?

பூங்காவில் சறுக்கு விளையாட்டு விளையாடும் பகுதிக்குச் சென்ற இரண்டு குழந்தைகளும்,  சறுக்கு விளையாட முயன்ற போது மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தனர். இதனை கண்ட அருகில் இருந்த பொது மக்கள் அதிர்ச்சியடைந்து, மின்சாரம் தாக்கிய இரு குழந்தைகளையும் உடனடியாக ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு இருகுழந்தைகளையும் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே  உயிரிழந்தாக தெரிவித்துள்ளனர். இதனைக்கேட்ட பெற்றோர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இதனைத் தொடர்ந்து சரவணம்பட்டி காவல் துறையினருக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து அங்கு வந்த காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  அப்பொழுது கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பாகவே அங்கிருந்த மின்சார ஒயர்கள் சேதப்பட்டு இருப்பதும், அங்கு வேலை செய்யும் சிவா என்ற எலக்ட்ரீஷனுக்கு தெரிய வந்துள்ளது. இவர் மேலிடத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.  ஆனால் குடியிருப்பின் தலைவர் என்.எல். நாராயணன் கண்டு கொள்ளாததால் அந்த விபத்து நடந்துள்ளதாக அப்பகுதியில் இருக்கும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Aslo Read: திடீரென வெடித்து சிதறிய பாய்லர்.. அலறிய தொழிலாளர்கள்.. 4 பேர் பலியான சோகம்!

இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த சரவணம்பட்டி காவல் துறையினர் குடியிருப்பு வாசிகளிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பூங்கா வளாகத்தில் உள்ள மின் கம்பியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாகவே அங்கிருந்த உபகரணத்தில் மின்சாரம் பாய்ந்து, அங்கு விளையாடிய குழந்தைகள் மீது மின்சாரம் தாக்கி இருக்கலாம் என்று விசாரணையில் தெரிய வருகிறது. இது தொடர்பாக சரவணம்பட்டி போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  இரண்டு குழந்தைகள் மின்சாராம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!