5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

விஷ வாயு தாக்கி 2 தொழிலாளர்கள் பலி.. தூத்துக்குடியில் அதிர்ச்சி சம்பவம்!

Noxious Poison | தமிழகத்தில் மலக்குழி மரணங்களும், விஷ வாயு தாக்கி உயிரிழக்கும் சம்பவங்களும் தொடர் கதையாகி வருகிறது. இதற்கு எதிர்ப்புகளும் வலுத்து வருகின்றன. என்னதான் எதிர்ப்புகள் எழுந்தாலும் மலக்குழி மரணங்களும், விஷ வாயு தாக்கி உயிரிழக்கும் சம்பவங்களும் குறைந்த பாடில்லை.

விஷ வாயு தாக்கி 2 தொழிலாளர்கள் பலி.. தூத்துக்குடியில் அதிர்ச்சி சம்பவம்!
மாதிரி புகைப்படம்
vinalin
Vinalin Sweety | Published: 04 Aug 2024 17:43 PM

விஷ வாயு தாக்கி உயிரிழப்பு : தமிழகத்தில் மலக்குழி மரணங்களும், விஷ வாயு தாக்கி உயிரிழக்கும் சம்பவங்களும் தொடர் கதையாகி வருகிறது. இதற்கு எதிர்ப்புகளும் வலுத்து வருகின்றன. என்னதான் எதிர்ப்புகள் எழுந்தாலும் மலக்குழி மரணங்களும், விஷ வாயு தாக்கி உயிரிழக்கும் சம்பவங்களும் குறைந்த பாடில்லை. இந்நிலை தூக்குடியில் 2 பேர் விஷ வாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிணறு சுத்தம் செய்யும் பணியில் விஷ வாயு தாக்கி 2 பேர் பலி

தூத்துக்குடியில் சிலர் நீண்ட நாட்களாக மூடி கிடந்த கிணறு ஒன்றை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பல நாட்களாக மூடி கிடந்ததால், கிணற்றில் இருந்து விஷ வாயு தாக்கியுள்ளது. இந்த விபத்தில் நேரு காலணி, ஆனந்தன் நகர் பகுதியைச் சேர்ந்த கணேசன் மற்றும் மாரிமுத்து ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மேலும் 2 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிக்கை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க : Indian Army: வயநாடு சம்பவம்.. சிறுவன் எழுதிய கடிதத்தால் கண்கலங்கிய இந்திய ராணுவம்!

பரிதாபமாக உயிரிழந்த கூலித் தொழிலாளர்கள்

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை மணலியில் உள்ள பெட்ரோலியப் பொருட்கள் தயாரிப்பு ஆலையில் தொட்டிகளை தூய்மை படுத்தும் பணி நடைபெற்றது. இதில் 2 கூலிதொழிலாளர் ஈடுபட்டுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக தொட்டியில் இருந்து விஷ வாயு தாக்கியுள்ளது. இதில் பாதிக்கப்பட்டு இருவரும் மயக்கமடைந்த நிலையில், அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்களை பரிசோத்தித்த மருத்துவர்கள், அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் அப்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க : சூப்பர் பைக் மோதி சம்பவ இடத்திலே பலியான காவலர்.. அதிர்ச்சி சம்பவம்!

தொடரும் விஷ வாயு மரணங்கள் – நடவடிக்கை எடுக்க குவியும் கோரிக்கைகள்

கடந்த சில மாதங்களுக்கு முன்பு 2 கூலித் தொழிலாளர்கள் விஷ வாயு தாக்கி பலியான நிலையில், தற்போது மேலும் 2 பேர் பலியாகி உள்ள சம்பவம் பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற சம்பவங்களை தடுக்க கோரியும், ஆபத்தான பகுதிகளை சுத்தம் செய்ய இயந்திரங்களை பயன்படுத்த கோரியும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இருப்பினும் இது போன்ற சம்பவங்கள் தொடர் கதையாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Latest News