Tamil Nadu Deputy CM: “எனக்கு துணை முதலமைச்சர் பதவியா?” ரகசியத்தை போட்டு உடைத்த உதயநிதி! - Tamil News | | TV9 Tamil

Tamil Nadu Deputy CM: “எனக்கு துணை முதலமைச்சர் பதவியா?” ரகசியத்தை போட்டு உடைத்த உதயநிதி!

Updated On: 

25 Sep 2024 08:57 AM

Udhayanidhi Stalin: உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியான நிலையில், தற்போது அது குறித்து தெளிவுப்படுத்தியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், "எவ்வளவு பெரிய பொறுப்பு வந்தாலும் எனக்கு மனதிற்கு மிக மிக நெருக்கமான ஒரு பொறுப்பு என்றால் அது இளைஞரணி செயலாளர் பொறுப்பு தான். எல்லா அமைச்சர்களுமே எங்கள் முதலமைச்சருக்கு துணையாக தான் இருப்போம். 2026ஆம் ஆண்டு திமுக தான் ஆட்சி அமைக்கும். முதலமைச்சர் மு க ஸ்டாலின் தான் மீண்டும் முதலமைச்சர் ஆவார்" என்றார்.

Tamil Nadu Deputy CM: எனக்கு துணை முதலமைச்சர் பதவியா?” ரகசியத்தை போட்டு உடைத்த உதயநிதி!

உதயநிதி ஸ்டாலின்

Follow Us On

உதயநிதிக்கு துணை முதல்வர் பதவியா? இளைஞரணி 45ஆம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சி சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்றது. இதில் இளைஞரணி செயலாளரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், “திமுகவின் முதல் அணி என்பது இளைஞர் அணி தான். திமுகவில் இளைஞர் அணி எப்போதும் முதன்மையாக இருக்கிறது. மோடி ஆறு முறை தமிழகம் வந்தும் எந்த வெற்றியும் கிடைக்கவில்லை. மூன்று தொகுதியாவது கிடைக்கும் என பா.ஜ.க எதிர்பார்ப்பில் ஏமாற்றம் தான் மிஞ்சியது. பா.ஜ.கவுக்கு பதிலடி கொடுத்த தமிழக மக்களுக்கு நன்றி. மக்களவை தேர்தல், விக்கிரவாண்டி தேர்தல் வெற்றிக்கு இளைஞர் அணி நிர்வாகிகள் பங்கு முக்கியமானதாக இருந்தது. முதலமைச்சர் ஸ்டாலின் பல நிகழ்வில் இருந்தாலும் இளைஞர் அணி நிகழ்வுக்கு வாழ்த்து தெரிவித்தார். கூட்டம் நன்றாக நடக்க வேண்டும் என நினைப்பார். பத்திரிகைகளில் சில கிசுகிசுக்கள், வதந்திகள் குறித்து படித்தேன். அதை நம்பி இப்போதே சிலர் துண்டு போட்டு வைக்கின்றனர்.

Also Read: ரூ.100 கோடி நில மோசடி வழக்கு.. அதிமுக முன்னாள் அமைச்சருக்கு 31 ஆம் தேதி வரை காவல்..

நான் பல முறை சொல்லிவிட்டேன். ஏற்கனவே தலைவர் பற்றி கூறியுள்ளார். அவர் சொல்வதைத்தான் நானும் சொல்கிறேன். எவ்வளவு பெரிய பொறுப்பு வந்தாலும் எனக்கு மனதிற்கு மிக மிக நெருக்கமான ஒரு பொறுப்பு என்றால் அது இளைஞரணி செயலாளர் பொறுப்பு தான். எல்லா அமைச்சர்களுமே எங்கள் முதலமைச்சருக்கு துணையாக தான் இருப்போம். 2026ஆம் ஆண்டு திமுக தான் ஆட்சி அமைக்கும். முதலமைச்சர் மு க ஸ்டாலின் தான் மீண்டும் முதலமைச்சர் ஆவார். நிர்வாகிகள் 2026 ஆம் ஆண்டு தேர்தலுக்கு கடுமையாக உழைக்க வேண்டும்” என்றார்.

உதயநிதி மறுப்பு:

கடந்த 2019ஆம் ஆண்டு திமுகவில் உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞரணி செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அவருக்கு சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பிறகு எம்எல்ஏவானார் உதயநிதி. இதனை அடுத்து கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் 14ஆம் தேதி உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் மகன் என்பதாலே அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது என எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.

இந்த சூழலில், கடந்த சில மாதங்களாகவே உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாக இணையத்தில் தகவல்கள் கசிந்த வண்ணம் இருந்தன.  முதலீடுகளை ஈர்க்கும் விதமான முதல்வர் ஸ்டாலின் மாத இறுதியில் அமெரிக்க செல்ல உள்ள நிலையில், அதற்கு முன்பாக உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டு பொறுப்புகளை முதல்வர் ஸ்டாலின் ஒப்படைப்பார் என தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், அதற்கு உதயநிதி ஸ்டாலின் மறுப்பு தெரிவித்துள்ளார்.

Also Read: அமோனியா வாயு கசிவு… 30 பேருக்கு மூச்சுதிணறல், மயக்கம்.. தூத்துக்குடியில் பதற்றம்!

டிஆர்பியில் டாப் 10 இடம் பிடித்த சீரியல்கள் லிஸ்ட்!
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி...
உலகில் இயற்கையாகவே வண்ணங்களால் நிறைந்த இடங்கள்!
காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் சிக்கல்கள்...
Exit mobile version