Udhayanidhi Stalin: ஆகஸ்ட் 19ஆம் தேதி துணை முதல்வராகும் உதயநிதி? சஸ்பென்ஸை உடைத்த அமைச்சர்
Deputy CM Udhayanidhi Stalin: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விரைவில் துணை முதல்வராக பொறுப்பேற்க இருப்பதை அமைச்சர் ராஜகண்ணப்பன் அதிகாரப்பூர்வமாக இன்று உறுதிப்படுத்தியுள்ளார். ஆகஸ்ட் 19ஆம் தேதிக்கு பிறகு தான உதயநிதியை துணை முதல்வர் என சொல்ல வேண்டும். அதற்கு முன்பாக நாம் சொல்லக் கூடாது என்று கூறினார்.
துணை முதல்வராகும் உதயநிதி ஸ்டாலின்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விரைவில் துணை முதல்வராக பொறுப்பேற்க இருப்பதை அமைச்சர் ராஜகண்ணப்பன் அதிகாரப்பூர்வமாக இன்று உறுதிப்படுத்தியுள்ளார். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியின் கலை அரங்கில் இன்று தமிழ் புதல்வன் திட்டம் தொடக்க விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் ராஜகண்ணப்பன், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா, மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜித் சிங் காலோன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன், அரசின் திட்டங்கள் குறித்து பேசிக் கொண்டிருக்கும்போது சட்டென துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் என கூறினார். இதனை அடுத்து, சற்று சுதாரித்து அவர் அமைச்சர் உதயநிதி என்று கூறினார். ஆகஸ்ட் 19ஆம் தேதிக்கு பிறகு தான உதயநிதியை துணை முதல்வர் என சொல்ல வேண்டும். அதற்கு முன்பாக நாம் சொல்லக் கூடாது என்று கூறினார்.
Also Read: தமிழ் புதல்வன் திட்டம்.. கோவையில் இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்..
அத்துடன் உதயநிதி ஸ்டாலின் பெயரை குறிப்பிடும்போது எல்லாம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் என்றே அழைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்க சுற்றுப்பயணம் செல்வதற்கு முன் தமிழ்நாடு அமைச்சரவையில் பெரிய மாற்றம் இருக்கும் என சொல்லப்பட்ட நிலையில், அது நடக்க இப்போது உறுதியாகி உள்ளது.
மறுத்த முதல்வர் ஸ்டாலின்:
விளையாட்டுத்துறை அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படலாம் என்று சமீப காலமாகவே தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தது. ஆனால், எப்போது என்று மட்டும் சஸ்பென்ஸாக இருந்தது. முதலீடுகளை ஈர்க்கும் விதமாக முதல்வர் ஸ்டாலின் ஆகஸ்ட் மாத இறுதியில் அமெரிக்க செல்ல உள்ள நிலையில், அதற்கு முன்பாக அமைச்சரவையில் பெரிய மாற்றம் இருக்கும் என திமுக வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூட பத்திரிக்கையாளர்கள் கேள்விக்கு, “எந்த பொறுப்பு வந்தாலும் அதனை திறம்பட செய்ய தயாராக இருக்கிறேன்” என கூறினார். சமீபத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோது, “உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக்க வேண்டும் என கோரிக்கை வலுத்திருக்கிறதே தவிர, அது பழுக்கவில்லை” என கூறினார். இதனால் உதயநிதி ஸ்டாலினுக்கு இப்போது துணை முதல்வர் பதவி வழங்கப்படாது என அனைவரும் நினைத்தனர்.
Also Read: 6 மாவட்டங்களில் பிச்சு உதற போகுது மழை.. வானிலை மையம் அலர்ட்!
இந்த சூழலில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விரைவில் துணை முதல்வராக பொறுப்பேற்க இருப்பதை அமைச்சர் ராஜகண்ணப்பன் அதிகாரப்பூர்வமாக இன்று உறுதிப்படுத்தியுள்ளார். இதோடு, நிதித்துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை, போக்குவரத்துத்துறை, வருவாய் நிர்வாக துறைட வனத்துறை, சட்டத்துறை உள்ளிட்ட துறைகளில் அமைச்சர்கள் மாற்றமோ அல்லது துறையில் வேறு ஒரு அமைச்சருக்கு மாற்றத் தருவதோ நடைபெறலாம் என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.