Umanath IAS: ஸ்டாலினின் தனிச்செயலாளர்.. திமுக ஆட்சியில் அதிக கவனம் பெறும் உமாநாத் ஐஏஎஸ்! - Tamil News | umanath-ias was appointed cm mk stalin secretary | TV9 Tamil

Umanath IAS: ஸ்டாலினின் தனிச்செயலாளர்.. திமுக ஆட்சியில் அதிக கவனம் பெறும் உமாநாத் ஐஏஎஸ்!

Updated On: 

20 Aug 2024 14:51 PM

விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்தவர்தான் உமாநாத். இவர் 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சியடைந்து ஐஏஎஸ் ஆனார். அடிப்படையில் மருத்துவம் படித்த உமாநாத் பின்னர் யுபிஎஸ்சி தேர்வு எழுதி ஐஏஎஸ் அதிகாரியாக மாறினார். கடந்த 2010 ஆம் ஆண்டு கோவை மாவட்ட ஆட்சியாளராக பணியாற்றிய உமாநாத் ஏராளமான நலத்திட்டங்கள் மற்றும் மாவட்டத்தில் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டதால் அம்மாவட்டம் மக்களிடையே மிகப் பெரிய அளவில் பிரபலமானார்.

Umanath IAS: ஸ்டாலினின் தனிச்செயலாளர்.. திமுக ஆட்சியில் அதிக கவனம் பெறும் உமாநாத் ஐஏஎஸ்!

கோப்பு புகைப்படம்

Follow Us On

தமிழ்நாடு அரசு: தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலினின் முதன்மை தனி செயலாளராக இருந்த முருகானந்தம் ஐஏஎஸ் தலைமை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். தலைமைச் செயலராக பதவி வகித்து வந்த சிவ்தாஸ் மீனா ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இப்படி முதலமைச்சர் ஸ்டாலின் விரைவில் வெளிநாடு பயணம் மேற்கொள்ள நிலையில் தமிழ்நாடு அரசில் அதிரடி மாற்றங்கள் நடைபெற்று வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமல்லாமல் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளும் தொடர்ச்சியாக மாற்றப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் முதலமைச்சர் மு க ஸ்டாலினின் தனிப்பட்ட செயலாளராக உமாநாத் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் இணை செயலாளராக லட்சுமிபதி ஐஏஎஸ், இரண்டாவது தனிச் செயலாளராக சண்முகம் ஐஏஎஸ் மற்றும் மூன்றாவது தனிச்செயலாளராக அணு சார்ஜ் ஐஏஎஸ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். உமாநாத் ஐஏஎஸ் ஏற்கனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தனிச் செயலாளர்களில் ஒருவராக பதவி வைத்து வந்த நிலையில் தற்போது முதன்மை தனிச் செயலாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

இதையும் படிங்க: Fixed Deposit : மூத்த குடிமக்களுக்கான FD.. 9.5% வரை வட்டியை வாரி வழங்கும் சிறு நிதி நிறுவனங்கள்.. முழு விவரம் இதோ!

உமாநாத் யார் தெரியுமா?

விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்தவர்தான் உமாநாத். இவர் 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சியடைந்து ஐஏஎஸ் ஆனார். அடிப்படையில் மருத்துவம் படித்த உமாநாத் பின்னர் யுபிஎஸ்சி தேர்வு எழுதி ஐஏஎஸ் அதிகாரியாக மாறினார். கடந்த 2010 ஆம் ஆண்டு கோவை மாவட்ட ஆட்சியாளராக பணியாற்றிய உமாநாத் ஏராளமான நலத்திட்டங்கள் மற்றும் மாவட்டத்தில் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டதால் அம்மாவட்டம் மக்களிடையே மிகப் பெரிய அளவில் பிரபலமானார். குறிப்பாக மறைந்த திமுக தலைவர் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது 2010 ஆம் ஆண்டு கோவையில் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நடைபெற்றது.

கருணாநிதி தலைமையிலான நடைபெற்ற இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்த நிலையில் அரசின் கவனத்திற்கு ஆளானார் உமாநாத். இதனைத் தொடர்ந்து அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு மருந்து பொருட்கள் கழக இயக்குனராக பதவி வகித்தார். குறிப்பாக கொரோனா காலகட்டத்தில் சிகிச்சைக்கான மருந்துகளை முன்கூட்டியே கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுத்ததோடு மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையிலும் தமிழ்நாட்டில் ஆக்ஸிஜன் கையிருப்பை உயர்த்த தொடர்ந்து முயற்சி எடுத்து வந்தார்.

இதையும் படிங்க: Blue Aadhaar : ப்ளூ ஆதார் கார்டு என்றால் என்ன?.. விண்ணப்பிப்பது எப்படி?.. முழு விவரம் இதோ!

நன்றி மறவாத மக்கள்

இப்படிப்பட்ட உமாநாத் ஐஏஎஸ் பற்றி குறிப்பிட வேண்டிய மிக முக்கியமான விஷயம் ஒன்று உள்ளது. இவர் கோவை மாவட்டத்தில் கலெக்டராக பணியாற்றிய போது அங்குள்ள விராலிக்காடு கிராம மக்கள் பட்டா கேட்டு மனு அளித்திருந்தனர். கருமத்தம்பட்டி அருகே இருக்கும் விராலிக்காடு பகுதியில் கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் 30 ஆண்டுகளுக்கு மேலாக பட்டா இல்லாமல் பல்வேறு போராட்டங்களை நடத்திக் கொண்டிருந்தனர். மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பலமுறை மன அளித்தும் எந்தவித முன்னேற்றமும் இல்லாத நிலையில் உமாநாத் ஐஏஎஸ் பதவி வகித்த போது மீண்டும் மனு அளித்தனர்.

அதனை பரிசீலித்த அவர் விராலி காடு பகுதியில் 80 பேருக்கு பட்டா வழங்கி நடவடிக்கை எடுத்தார். இதற்கு நன்றி கடனாக அப்பகுதி மக்கள் அந்த இடத்துக்கு கலெக்டர் உமாநாத் காலனி என பெயர் சூட்டி மகிழ்ந்தனர். மேலும் தங்களுடைய ஆவணங்கள் அனைத்திலும் கலெக்டர் உமாநாத் காலனி என்றுதான் பயன்படுத்தியும் வருகின்றனர். இப்படியான நிலையில்தான் 2021 ஆம் ஆண்டு திமுக தலைமையிலான அரசு அமைந்து முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். அப்போது முந்தைய திமுக ஆட்சியில் சிறப்பாக செயல்பட்ட உமாநாத் ஐஏஎஸ் முதலமைச்சரின் தனிப்பிரிவு இரண்டாவது செயலாளராக நியமிக்கப்பட்ட நிலையில் தற்போது முதன்மை தனிச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்

குழந்தைகள் அப்பாக்களை அதிகம் விரும்புவது ஏன் தெரியுமா?
உங்கள் வாழ்க்கையை அழகாக மாற்ற எளிய வழிகள் இதோ!
கர்ப்பிணிகள் குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை வெள்ளையா பிறக்குமா?
உணவில் பூண்டு சேர்ப்பதால் இவ்வளவு நன்மைகளா?
Exit mobile version