5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

திருமா எல்லாம் முதல்வராக மாட்டார்… எல்.முருகனுக்கு எதிராக விசிக கொந்தளிப்பு!

சமூக நீதி பற்றி பேச திருமாவளவனுக்கு எந்தவித அருகதையும் கிடையாது. பட்டியலின மக்கள் இட ஒதுக்கிடை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த திருமாவளவன் எப்படி தலித் மக்களின் தலைவராக இருக்க முடியும்?” என எல்.முருகன் கேள்வி எழுப்பினார். மேலும், “இப்படிப்பட்டவர் எப்படி தமிழகத்தின் தலைவராக இருக்க முடியும்?. அதனால் திருமாவளவனின் முதல்வராகவும் கனவு பலிக்காது” என எல். முருகன் தெரிவித்தார். 

திருமா எல்லாம் முதல்வராக மாட்டார்… எல்.முருகனுக்கு எதிராக விசிக கொந்தளிப்பு!
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 11 Nov 2024 10:54 AM

தொல். திருமாவளவன்: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் முதலமைச்சராகும் கனவு பலிக்காது என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேசிய கருத்து அக்கட்சி தொண்டர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக சமூக வலைத்தளங்களில் விடுதலை சிறுத்தை கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் வழக்கு ஒன்றில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் பட்டியல் சமூக மக்களுக்கான இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான அதிகாரம் மாநில அரசுகளுக்கு உள்ளது என தெரிவித்து இருந்தது.  தமிழ்நாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகள் இந்த தீர்ப்பை வரவேற்ற நிலையில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் மட்டும் தீர்ப்பை கண்டித்து கடந்த ஆகஸ்ட்  மாதம் 13 ஆம் தேதி சென்னை வள்ளுவர்கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

இதனையடுத்து உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்தும், அதனை மறுபரிசீலனை செய்யவும் திருமாவளவன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் மத்திய அமைச்சர் எல்.முருகன் திருமாவளவனை காட்ட விமர்சித்து பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட எல் முருகன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது திமுக கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளானை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என அக்கட்சி தொண்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக உங்கள் கருத்து என்ன? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.

Also Read: Ration Card : ரேஷன் அட்டையில் மொபைல் எண்ணை அப்டேட் செய்வது எப்படி.. முழு விவரம் இதோ!

அதற்கு,  “சமூக நீதி பற்றி பேச திருமாவளவனுக்கு எந்தவித அருகதையும் கிடையாது. பட்டியலின மக்கள் இட ஒதுக்கிடை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த திருமாவளவன் எப்படி தலித் மக்களின் தலைவராக இருக்க முடியும்?” என எல்.முருகன் கேள்வி எழுப்பினார். மேலும், “இப்படிப்பட்டவர் எப்படி தமிழகத்தின் தலைவராக இருக்க முடியும்?. அதனால் திருமாவளவனின் முதல்வராகவும் கனவு பலிக்காது” என எல். முருகன் தெரிவித்தார்.

இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு எல்.முருகனுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ திரு. எல். முருகன் அவர்களே, உங்களின் இந்த நிலைப்பாடு பாஜகவின் நிலைப்பாடா அல்லது அவரது நிலைப்பாடா? என கேட்டுள்ளார். மேலும், “கடந்த 2009 ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் கலைஞர் அவர்கள் அருந்ததியர் உள் ஒதுக்கீட்டுச் சட்டத்தை கொண்டு வந்த போது அதை சட்டப்பேரவையிலும் வெளியிலும் ஆதரித்த இயக்கம் விடுதலைச்சிறுத்தைகள். அதனால் தான் இன்று வரை அருந்ததியருக்கான உள் ஒதுக்கீடு தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ளது.அதில் எந்த பாதிப்பும் இல்லை.

Also Read: Beauty Tips: முகத்தில் இயற்கையான பொலிவு நிலைத்திருக்க வேண்டுமா..? தினமும் இந்த 5 விஷயங்களை செய்யுங்கள்..!

விடுதலைச்சிறுத்தைகளின் நிலைப்பாடு உள் ஒதுக்கீட்டுக்கு எதிரானதல்ல; கிரிமிலேயருக்கு எதிரானது. ஓபிசி சமூகத்துக்கு கிரிமிலேயர் மூலம் சமூகநீதிக்கோட்பாட்டை சிதைக்கும் பாஜகவின் சதியை அம்பலப்படுத்தி எதிர்த்து வரும் இயக்கம் விடுதலைச் சிறுத்தைகள். அதே போல,தலித்துகளுக்குள் கிரிமிலேயரை புகுத்தி சமூகநீதியை அழித்தொழிக்க முயற்சிக்கும் பாஜகவை தொடர்ந்து அம்பலப்படுத்துவதால், திரு.முருகன் அவர்கள் காழ்ப்புணர்ச்சியில் சமூகநீதி என உளறுகிறார். இட ஒதுக்கீட்டில் பாஜகவின் நிலைப்பாடு என்ன என்பது நாட்டுக்கே தெரிந்தது தான். ஆகவே,விடுதலைச்சிறுத்தைகளுக்கு பாஜகவிலிருந்து யாரும் பாடம் எடுக்க முடியாது.

அருந்தியருக்கான உள் ஒதுக்கீட்டை விடுதலைச்சிறுத்தைகள் ஆதரித்தாலும் திரு.முருகன் அவர்கள் தொடர்ந்து அவதூறையே பரப்பி வருகிறார். புதிய தமிழகம், இந்திய குடியரசு கட்சி உள்ளட்ட பல கட்சிகள் தமிழ்நாட்டில் எதிர்ப்பது அவருக்கு தெரியும். ஆனால், அவர்களை கண்டிக்காமல் விடுதலைச்சிறுத்தைகளையே குறிவைப்பது ஏன்? ஏனென்றால், விடுதலைச்சிறுத்தைகள் பேரியக்கத்தில் தான் அருந்ததியர் சமூகத்தை சார்ந்தோர் அதிகம் இருக்கிறார்கள். பதவியிலும் களமாடுகிறார்கள். இந்த கோபத்தில் தான் விடுதலைச்சிறுத்தைகள் மீது வெறுப்பை கொட்டுகிறார். விடுதலைச்சிறுத்தைகள் ஓர் நாள் ஆட்சி அதிகாரத்துக்கு வந்தே தீரும்.
தமிழ்நாட்டில் மட்டுமல்ல; இந்தியா முழுக்க பாஜகவை அகற்றுவது தான் எமது இலக்கு. அதை நோக்கி பயணிப்போம்” என வன்னி அரசு தெரிவித்துள்ளார்.

Latest News