ஹாட்ரிக் வெற்றி.. தேர்தல் ஆணையத்திடம் அங்கீகாரம் பெற்ற விசிக!

2024 மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் மற்றும் விழுப்புரத்தில்  தனி சின்னத்தில் (பானை ) விசிக போட்டியிட்டது. அதில், சிதம்பரத்தில் தொல். திருமாவளவன் ஒரு லட்சத்துக்கும் மேலான வாக்கு வித்தியாசத்திலும், விழுப்புரத்தில் ரவிக்குமார் 69 ஆயிரத்தும் மேலான வாக்கு வித்தியாசத்திலும் வெற்றி பெற்றுள்ளனர். சிதம்பரத்தில் திருமாளவன் 5 லட்சத்து 50 ஆயிரத்து 084 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். மேலும், விழுப்புரத்தில் விசிகவின் ரவிக்குமார் 4 லட்சத்து 77 ஆயிரத்து 033 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

ஹாட்ரிக் வெற்றி.. தேர்தல் ஆணையத்திடம் அங்கீகாரம் பெற்ற விசிக!

திருமாவளவன்

Updated On: 

11 Nov 2024 10:54 AM

தேர்தல் ஆணையத்திடம் அங்கீகாரம் பெற்ற விசிக:  நாட்டின் 18வது மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களை கைப்பற்றிய நிலையில், தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜக மட்டும் 240 தொகுதிகளை தன் வசப்படுத்தியது. அதேபோல, I.N.D.I.A கூட்டணி 235 இடங்களில் தன் வெற்றியை உறுதி செய்துள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுவையில் மொத்தமுள்ள 40 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியது. அதிமுக, பாஜக கூட்டணிகள் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. அதே நேரத்தில் திமுக கூட்டணியில் உள்ள விசிகவும், மதிமுகவும் தனி சின்னத்தில் போட்டியிட்டு அபார வெற்றி பெற்றுள்ளது.

குறிப்பாக, சிதம்பரம் மற்றும் விழுப்புரத்தில்  தனி சின்னத்தில் (பானை ) விசிக போட்டியிட்டது. அதில், சிதம்பரத்தில் தொல். திருமாவளவன் ஒரு லட்சத்துக்கும் மேலான வாக்கு வித்தியாசத்திலும், விழுப்புரத்தில் ரவிக்குமார் 69 ஆயிரத்தும் மேலான வாக்கு வித்தியாசத்திலும் வெற்றி பெற்றுள்ளனர். சிதம்பரத்தில் திருமாளவன் 5 லட்சத்து 50 ஆயிரத்து 084 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். மேலும், விழுப்புரத்தில் விசிகவின் ரவிக்குமார் 4 லட்சத்து 77 ஆயிரத்து 033 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

Also Read: பிரதமராகிறீர்களா? கருணாநிதி ஸ்டைலில் பதில் அளித்த ஸ்டாலின்!

3 தேர்தலில் அபார வெற்றி:

கடந்த 2019ஆம் மக்களவைத் தேர்தலில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் தனி சின்னத்திலும், ரவிக்குமார் உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். சிதம்பரத்தில் போட்டியிட்ட திருமாவளவன் 5,00,229 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 2021 சட்டப்பேரவை தேர்தலில் திமுகவின் கூட்டணியில் 6 தொகுதியில் தனி சின்னத்தில் விசிக போட்டியிட்டது. அதாவது, திருப்போரூர், செய்யூர், காட்டுமன்னார்கோயில், நாகப்பட்டினம், வானூர், அரக்கோணத்தில் போட்டியிட்டது. இதில், அதிக வாக்குகள் வித்தியாசத்தில் திருப்போரூர், நாகை, காட்டுமன்னார் கோயில், செய்யூரில் அபார வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம், தற்போதைய நிலவரப்படி, 4 எம்எல்ஏக்களும், 2 எம்.பிக்களும் உள்ளனர்.  இந்த நிலையில்,  2021 சட்டப்பேரவை, 2019 மக்களவை, 2024 மக்களவைத் தேர்தலில்  தனி சின்னத்தில் போட்டியிட்டு பெற்றி பெற்றால், தேர்தல் அங்கீகாரம் பெற்றது விடுதலை சிறுத்தைகள் கட்சி.

Also Read: மக்களவைத் தேர்தலில் கெத்து காட்டிய சீமான்.. தேர்தல் ஆணையத்திடம் அங்கீகாரம் பெற்ற நாதக!

 

இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!
குழந்தை பெற்ற பிறகு தம்பதியினர் செய்ய வேண்டிய விஷயங்கள்!
உங்களின் வருமானம் பற்றி அறியக்கூடாதவர்கள்!