Thirumavalavan : அதிகாரத்தை பகிர்ந்து அளிப்பது தான் ஜனநாயகம்.. செய்தியாளர் சந்திப்பில் பேசிய திருமாவளவன்! - Tamil News | VCK Leader Thirumavalavan spoke about ruling power and prohibition of alcohol in press meet at Trichy | TV9 Tamil

Thirumavalavan : அதிகாரத்தை பகிர்ந்து அளிப்பது தான் ஜனநாயகம்.. செய்தியாளர் சந்திப்பில் பேசிய திருமாவளவன்!

Published: 

15 Sep 2024 16:14 PM

Press Meet | விசிகவின் மது ஒழிப்பு மாநாடு குறித்து பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், திருச்சி விமான நிலையத்தில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கூட்டணி ஆட்சி, மது ஒழிப்பு மாநாடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியுள்ளார்.

Thirumavalavan : அதிகாரத்தை பகிர்ந்து அளிப்பது தான் ஜனநாயகம்.. செய்தியாளர் சந்திப்பில் பேசிய திருமாவளவன்!

திருமாவளவன்

Follow Us On

திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பு : விசிகவின் மது ஒழிப்பு மாநாடு குறித்து பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், திருச்சி விமான நிலையத்தில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அதிகாரத்தை ஒரே இடத்தில் குவித்து வைக்காமல் அதனை பகிர்ந்து அளிப்பது தான் ஜனநாயகம். கூட்டணி ஆட்சி விளிம்புநிலை மக்களின் குரலாக இருக்கும். அதை தான் மக்கள் விரும்புகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : Vijay Wishes | அரசியல் களத்தில் புதிய வரலாறு படைத்தவர் அண்ணா.. விஜய் புகழாரம்!

மது ஒழிப்பு மாநாட்டை தேர்தல் அரசியலோடு இணைத்து பார்க்க வேண்டாம் – திருமாவளவன்

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் கூறியதாவது, மது ஒழிப்பு மாநாட்டை தேர்தல் அரசியல் அரசியலோடு இணைத்து பார்க்க வேண்டாம். அதை மக்கள் மற்றும் சமூக பிரச்சனையாக பார்க்க வேண்டும். கள்ளச்சாராயம் குடித்து கள்ளக்குறிச்சி மற்றும் மரக்காணத்தில் ஏராளமானோர் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட பெண்கள் அரசு ரூ.10 லட்சம் கொடுத்ததில் என்னால் பூ போட்டு வாங்க முடியுமா என கேட்கின்றனர். கள்ளச்சாராயத்தால் அனைத்து சமூகத்தினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கிராமங்களில் எல்லாம் மதுவிற்கு அடிமையாகி பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் 100% நல்ல நோக்கத்தோடு மாநாட்டை நடத்துகிறோம் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க : Naan Mudhalvan Scheme: ஜெர்மணியில் செம்ம வேலை.. செவிலியர்களுக்கு இலவச விசா, டிக்கெட்.. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு!

மது ஒழிப்பு மாநாட்டில் எந்த அரசியல் கணக்கும் இல்லை – திருமாவளவன்

தொடர்ந்து பேசிய அவர், மது ஒழிப்பு மாநாட்டில் எந்த அரசியல் கணக்கும் இல்லை என்பதை மறுபடியும் சொல்கிறேன். திட்டமிட்டு எந்த காயும் நகர்த்தவில்லை. மாநாட்டை அரசியலுடன் இணைத்து திரித்து பேசுகிறார்கள். மது மற்றும் போதை பொருள் ஒழிப்புக்கு திமுகவும் சேர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும். இந்தியாவில் கடந்த 1997 ஆம் ஆண்டிலிருந்து மத்தியிலும் கூட்டணி ஆட்சி நடக்கிறது. தனி மெஜாரிட்டியுடன் பாஜக ஆட்சி அமைத்தாலும் கூட்டணி கட்சிகளுக்கு அதிகாரத்தில் ஒரு பகிர்வு தருகிறார்கள். அதுபோல தமிழகத்திலும் ஒன்று நடப்பது தவறு அல்ல கோரிக்கை எழுப்புவதும் தவறு அல்ல என்று அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் அரவிந்த் கெஜ்ரிவால்.. உச்சக்கட்ட அரசியல் பரபரப்பு..

அதிகாரத்தை பகிர்ந்து அளிப்பதுதான் ஜனநாயகம் – திருமாவளவன்

2016 ஆம் ஆண்டு இந்த கோரிக்கைகளை மையப்படுத்தி நாங்கள் ஒரு கருத்தரங்கை நடத்திருக்கிறோம். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்று ஒரு கருத்தரங்கம் நடத்தி ஒரு புத்தகத்தை வெளியிட்டு இருக்கிறோம். அதிகாரத்தை ஒரே இடத்தில் வைத்து குவித்து வைக்காமல் அதனை பகிர்ந்து அழிப்பது தான் ஜனநாயகம். கூட்டணி ஆட்சி விளிம்பு நிலை மக்களின் குரலாக இருக்கும். அதை தான் மக்கள் விரும்புகிறார்கள் இவ்வாறு அவர் கூறினார்.

திருமாவளவனின் பேச்சுக்கு சீமான் கருத்து

அதிகாரத்தை ஒரே இடத்தில் குவித்து வைக்காமல் அதனை பகிர்ந்து அளிப்பது தான் ஜனநாயகம் என்று திருமாவளவன் பேசியதற்கு ஆட்சி அதிகாரத்தை பங்கு கேட்கும் திருமாவளவனை பாராட்டுகிறேன் என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். அதுமட்டுமன்றி 2021 சட்ட்டமன்ற தேர்தலில் இதே முழக்கத்தை வைத்து திருமாவளவன் தேர்தலை சந்தித்திருக்கலாமே என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் படிங்க : Tamilnadu Weather Alert: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு..

திருமாவளவனுக்கு அழைப்பு விடுத்த சீமான்

இது குறித்து தொடர்ந்து பேசிய சீமான், ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்கும் நிலைப்பாட்டில் இருந்து திருமாவளவன் பின் வாங்காமல் இருக்க வேண்டும். மதுவை ஒழிப்பதில் யாருக்கும் மாற்று கருத்தில்லை. மது ஒழிப்பு மாநாட்டுக்கு பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகளை திருமாவளவன் அழைக்கவில்லை, எதிர்வரும் தேர்தலில் மது ஒழிப்புக்கு ஆதரவாக இருக்கும் கட்சிகளுடன் திருமாவளவன் அணி சேர வேண்டும் என்று சீமான் அழைத்து விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் இந்த பருப்பு வகைகளை தவிர்க்க வேண்டும்..
வெயில் காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா?
ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
பக்கவாதத்தை தடுக்கும் நூக்கல்.. இதில் இவ்வளவு நன்மை பண்புகளா..?
Exit mobile version