5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

ஒரே மேடையில் விஜய் உடன் பங்கேற்பா? திருமாவளவன் பரபரப்பு விளக்கம்!

திருமாவளவன்: வரும் டிசம்பர் 6ஆம் தேதி நடைபெறும் புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் விசிக தலைவர் தொல். திருமாவளவனும், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யும் ஒரே மேடையில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் கசிந்த வண்ணம் இருக்கிறது. இந்த நிலையில், இதற்கு விசிக தலைவர் தொல். திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.

ஒரே மேடையில் விஜய் உடன் பங்கேற்பா? திருமாவளவன் பரபரப்பு விளக்கம்!
திருமாவளவன் – விஜய் (picture credit: PTI)
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 11 Nov 2024 10:55 AM

வரும் டிசம்பர் 6ஆம் தேதி நடைபெறும் புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் விசிக தலைவர் தொல். திருமாவளவனும், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யும் ஒரே மேடையில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் கசிந்த வண்ணம் இருக்கிறது. இந்த நிலையில், இதற்கு விசிக தலைவர் தொல். திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார். நடிகர் விஜய் அவரது தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்தினார். அதில் அவர் பேசிய பேச்சுகளும், வெளியிட்ட கொள்கைகளும் தமிழக அரசியலில் களத்தில் தற்போது பேசும் பொருளாக மாறியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை எதிரி பாஜக என்றும், அரசியல் எதிரி திமுக என்றும் குறிப்பிட்டார். அதிலும் திமுகவை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தார்.

ஒரே மேடையில் விஜய் உடன் பங்கேற்பா?

அதே நேரத்தில் திராவிடமும், தமிழ்த் தேசியமும் தனது இரு கண்கள் என்று தெரிவித்தார். இந்த கருத்தை சீமான் உள்ளிட்ட தமிழ்த்தேசிய தலைவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும், ஆட்சியில் கூட்டணி கட்சிகளுக்கு பங்கு என்று விஜய் கூறிய கருத்தும் விவாதப்பொருளாக மாறியது.

இதன் மூலம், அவர் திமுக கூட்டணியில் உள்ள சில கட்சிகளுக்கு இப்போதே வலை விரித்துள்ளார் என்ற கருத்தும் அரசியல் அரங்கில் உலாவரத் தொடங்கியது. ஏற்கனவே திமுக கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர்கள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று சமீபத்தில் பேசினார்கள்.

இதனால் விஜய் வைத்துள்ள குறியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் இருக்கலாம் என்று அரசியல் அரங்கில் பேசப்பட்டது. ஆனால், கட்சியின் தலைவர் திருமாவளவன் தேர்தல் நேரத்தில் ரகசியமாக பேசுவதை இப்போது பேசத் தேவையில்லை என்றார்.

Also Read : தமிழக அரசு வேலைவாய்ப்பில் இந்தி மொழி சேர்த்த அதிகாரி சஸ்பெண்ட்.. அமைச்சர் விளக்கம்!

திருமாவளவன் பரபரப்பு விளக்கம்

இப்படிப்பட்ட நிலையில், சென்னையில் டிசம்பர் 6ஆம் தேதி புத்தக வெளியீட்டு விழாவில் விஜய்யும், திருமாவளவனும் ஒன்றாக கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியானது. அதாவது, வட இந்தியாவை சேர்ந்த 38 எழுத்தாளர்கள் சேர்ந்து அம்பேத்கர் பற்றி கட்டுரை எழுதியுள்ளனர்.

அந்த கட்டுரைகளில் ஒன்றை விசிக துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனனும் எழுதியுள்ளார். இந்த புத்தகத்தை திருமாவளவன் வெளியிட, விஜய் பெற்றுக் கொள்ள ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த நிகழ்ச்சியில் பங்கேற் விஜய் ஒத்துக் கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் தமிழக அரசு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், இன்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த தொல்.திருமாவளவன், “புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க இசைவு அளித்து கிட்டத்தட்ட ஓராண்டு ஆகிறது. ஏற்கனவே ஏப்ரல் 14ஆம் தேதி அம்பேத்கர் பிறந்தநாளில் புத்தகம் வெளியிடுவதாக திட்டமிடப்பட்டிருந்தது.

”ஆலோசித்து முடிவு செய்வோம்”

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார். ராகுல் காந்தியையும் அழைக்க திட்டமிட்டிருக்கிறோம் என்று கூறியருந்தார்கள். தமிழக வெற்றிக் கழக மாநாடு நடைபெறுவதற்கு முன்பு, விஜய் அவர்களையும் அழைக்க திட்டமிட்டிருக்கிறோம். அவர் வருவார் என தகவலை சொன்னார்கள்.

ரஜினிகாந்த் பங்கேற்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என் தகவலையும் சொல்லி இருந்தார்கள். நாங்களும் அதற்கு இசைவு அளித்திருந்தோம். இப்போது, விஜய் பங்கேற்க போகிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இன்றைய அரசியல் சூழலை கருத்தில் கெண்டு கலந்து ஆலோசித்து முடிவு செய்வோம்” என்றார்.

Also Read : இன்று முதல் மாவட்ட வாரியாக ஆய்வு.. களத்தில் இறங்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

இதன் மூலம் என்ன மாதிரியான முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரியவில்லை.  ஆனால், விழாவில் திருமாவளவனும், விஜய்யும் ஒரே மேடையில் கலந்து கொண்டால் அது தமிழக அரசியல் களத்தில் பெருத்த சலசலப்பை ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஆகவே கூட்டணி கட்சிகளுடையேயும் சலசலப்பு ஏற்படும். இந்த நெருக்கடியை தவிர்க்க  திருமாவளவன் பங்கேற் மாட்டோர் என்று கூறப்படுகிறது. ஒருவேளை அவர் பங்கேற்க சம்மதித்தால், அரசியல் களத்தில் பரபரப்பான சூழல் நிலவும் என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில், 2026 சட்டப்பேரவை தேர்தலிலும் திமுகவுடன் தான் கூட்டணி என்றும், வேறு கூட்டணி செல்ல வேண்டிய தேவை இல்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

Latest News