Thirumavalavan Vijay: விஜய்யுடன் மேடையேற மறுக்கும் திருமாவளவன்.. வெளியான பரபரப்பு தகவல்!
அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய்யுடன் திருமாவளவன் பங்கேற்க மாட்டார் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விஜய்யுடன் ஒரு மேடையில் திருமாவளவன் இருந்தால் கூட்டணியில் சலசலப்புகள் ஏற்படலாம் என நினைத்து திருமாவளவன் இந்த விழாவை புறக்கணித்துள்ளதாக கூறப்படுகிறது.
அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய்யுடன் திருமாவளவன் பங்கேற்க மாட்டார் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் புத்தக வெளியீட்டை விழாவை மையமாக வைத்து தமிழக அரசியலில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் டிசம்பர் 6ஆம் தேதி அக்பேத்கர் என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொள்வார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் பின்பு, நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் கலந்து கொள்கிறார் என்றும் விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா
திருமாவளவனும், விஜய்யும் ஒரே மேடையில் பங்கேற்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தனது கட்சி மாநாட்டில் திராவிட மாடல் ஆட்சியை விமர்சித்த விஜய்யுடன் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்தது.
மேலும், இந்த விழாவில் விஜய்யுடம் திருமாவளவன் பங்கேற்பது திமுகவுக்கு வருதத்தையும் அளித்ததாக கூறப்பட்டது. மேலும், திமுகவையும் விமர்சிக்கும் விஜய்யுடம் திருமாவளவன் இணக்கமாக இருந்தால் அது கூட்டணியை பலவீனப்படுத்தும் என திமுக தலைவர்கள் கருதுகின்றனர்.
எனவே, விஜய்யுடம் ஒரே மேடையில் நிகழ்ச்சியில் பங்கேற்பது குறித்து அதிருப்தி தெரிவித்து வந்தாகவும் கூறப்பட்டது. இதுகுறித்து திருமாவளவன் கூறும்போது, இந்த நூல் வெளியீட்டு விழாவில் நான் பங்கேற்பது ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது.
Also Read : அரசியல் அனுபவத்தை பகிர்ந்த ரஜினி.. குலுங்கி குலுங்கி சிரித்த இபிஎஸ்!
விழாவில் பங்கேற்க மறுக்கும் திருமாவளவன்?
இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு நூல் வெளியிடுவதாகவும் முதல் பிரதியை நான் பெற்றுக் கொள்வதாகவும் இருந்தது. தற்போது இந்த விழாவில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பங்கேற்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விழாவில் பங்கேற்பது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பேன் என்று கூறியிருந்தார். இந்த நிலையில், தற்போது டிசம்பர் 6ஆம் தேதி நடைபெறும் நூல் வெளியீட்டு விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொள்ளவில்லை என்பது உறுதியாகி உள்ளது.
இதுகுறித்து நூல் வெளியீட்டு விழா ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விழாவில் தன்னால் பங்கேற்க இயலாது என்று தங்களுக்கு திருமாவளவன் தகவல் அனுப்பியுள்ளதாக விழா ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.
Also Read : தமிழகத்திற்கு ரெட் அலர்ட்.. எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா? வானிலை மையம் எச்சரிக்கை
விஜய்யுடன் ஒரு மேடையில் திருமாவளவன் இருந்தால் கூட்டணியில் சலசலப்புகள் ஏற்படலாம் என நினைத்து திருமாவளவன் இந்த விழாவை புறக்கணித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் இதுகுறித்து திருமாவளவன் எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.
நடிகர் விஜய் அவரது தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் பேசிய பேச்சுகளும், வெளியிட்ட கொள்கைகளும் தமிழக அரசியலில் களத்தில் தற்போது பேசும் பொருளாக மாறியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை எதிரி பாஜக என்றும், அரசியல் எதிரி திமுக என்றும் குறிப்பிட்டார். அதிலும் திமுகவை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தார். மேலும், ஆட்சியில் கூட்டணி கட்சிகளுக்கு பங்கு என்று விஜய் கூறிய கருத்தும் விவாதப்பொருளாக மாறியது.
குறிப்பாக ஆட்சி அதிகாரத்தில் பங்கு உண்டு என்று கூறி கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார். ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பதை விசிக தலைவர் திருமாவளவன் கூறி வரும் நிலையில், தற்போது விஜய் கூறியது திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு விஜய் குறைவைக்கிறார் என்று கூறப்பட்டது.
இன்னும் 2026 தேர்தலுக்கு ஒன்றரை ஆண்டுகள் இருக்கும் சூழலில், கூட்டணிகள் குறித்து இப்போதே சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக விஜய்யின் அரசியில் என்டரிக்கு பிறகு பல கருத்துகள் தமிழக அரசியலில் பேசப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.